LORD OF WAR - விக்டர் பெளட் கைது.


ஆயுத வியாபாரி விக்டர் பெளட் இன்று தாய்லாந்து போலீசாரால், அமெரிக்காவின் போதைப் பொருள் என்ஃபோர்ஸ்மென்ட் ஏற்பாட்டில் (Sting Operation) கைது செய்யப்பட்டார். கொலம்பியப் போராளிகளுக்கு ஹெலிகாப்டர் உட்பட்ட தளவாடங்களை விற்பதற்கான ஒரு பேரத்தில் அவரின் கூட்டாளியின் மூலம் இந்த வலை விரிக்கப்பட்டு, அதன் தொடர்பான தொலைபேசிப் பேச்சு உட்பட பதிவு செய்யப்பட்டு, பேரத்தின் இறுதிக்கட்டத்தில், பாங்காக்கிற்கு வரவழைக்கப்பட்டு, சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார்.

இவர் கீழ்க்கண்ட பதிவுகள் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்.

ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 1
ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 2
ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 3
ஆயுத வியாபாரிகள்.. அதீத பேரங்கள் - 4

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் இவரைத் தங்கள் நாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியிருக்கின்றன. இன்டர்போலின் சிவப்பு நோட்டீஸ் கூட இவரின் பேரில் இருக்கிறது. ஆனால், தாய்லாந்து இந்த வழக்கை தம் நாட்டிலேயே விசாரிக்க முடிவு பண்ணியிருப்பது, பேரத்திற்கு வழி வகுக்கும். ஏனெனில், தாய்லாந்தில் அவர் குற்றம் ஏதும் செய்திருக்கவில்லை. இதற்கு முன் நடந்த பேரம் எல்லாமே வேறு வேறு நாடுகளில் வைத்து நடந்திருக்கிறது. எனவே, தாய்லாந்தில் நடக்கும் இந்த வழக்கு நிலைக்கப் போவதில்லை. ஆகையால் நாடு கடத்தப் போவது என்பது உறுதி. அமெரிக்கா முந்தப் போகிறதா அல்லது ரஷ்யா முந்தப் போகிறதா என்பது விக்டரின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம். விக்டரின் நேரடி ஈடுபாடு கொஞ்சம் முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது. ஆனால், வெனிசூலாவின் சாவேஸுடன் வம்பிழுக்க நினைக்கும் அமெரிக்கா, கொலம்பியா மூலம் ஏற்கனவே வம்பை ஆரம்பித்தாகி விட்டது. தற்போது, உளவுத்துறையின் மூலம் அல்லாமல் போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் படி கைது செய்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியிருப்பதென்னவோ உண்மை.

என்னதான் நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.



Picture Courtesy: http://www.mensvogue.com/