துப்பறியும் மின்னஞ்சலும் - அதைத் தடுக்கும் முறையும் - பாகம்-1
இது www.readnotify.com/ www.readverify.com என்ற புதிய வகை மின்னஞ்சல் துப்பளி (Email Spyware) என்பதைப்பற்றி உங்களுக்கு விளக்குவதற்கும் பல்வேறு புனைப்பெயர்களில் எழுதிக்கொண்டிருக்கும் நல்லபதிவர்களுக்கும் கெட்ட பதிவர்களுக்கும் ஒரு சேர உதவும் முகமாக, அதிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பதற்கும் இந்தப் பதிவு மிக உபயோகமாக இருக்கும்.
முதலில் இந்த readnotify துப்பளியைப் பற்றிப் பார்க்கலாம். இது ஒரு spyware என்றாலும் Anti-Virus மென்பொருளால் தடுக்க முடிவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது எப்படி வேலை செய்கிறது என்று கவனித்தோமானால், வெகு சுலபம்.
மிகவும் "வேண்டப்பட்ட" நபர் ஒருவர் இருப்பாரேயானால் அவருக்கு ஒரு மெயில் அனுப்புவது. அந்த மின்னஞ்சலை எந்த ஐபியில் படிக்கிறார் என்பது முதற்கொண்டு அவர் என்ன பெயரில் தற்போது அந்தக் கணிணியில் லாகின் செய்திருக்கிறார் என்பதான விபரங்களையெல்லாம் காண இயலும். அது மட்டுமா.. அந்த மின்னஞ்சல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டது, அவர்களெல்லாம் எத்தனை மணிக்கு அதைப் படித்தனர் போன்ற விலாவாரியான விவரங்கள் திரட்டப்படும். ஒரு புனித நன்னாளில் உங்களின் முகமூடி, வலைத்தளம் ஒன்றின் வழியாக கிழித்தெறியப்படும். என்ன நடுக்கமாக இருக்கிறதா... Welcome to the world of Internet..!!
நம்புவதற்குச் சிரமமாக இருந்தால்.. உங்களிடமிருக்கும் இரு வேறு மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு அனுப்பிப் பாருங்களேன். வழிமுறை இதோ...
(நான் சொல்லிக் கொடுப்பதாக சிலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது... உண்மையில் விவரமாக அந்தத் தளத்திலேயே சொல்லித்தரும்போது நான் சொல்லாமல் நீங்கள் தெரிந்து கொள்ளமாட்டீர்களா என்ன..)
முதலில் உங்களுக்கு www.readynotify.com ஒரு அக்கவுண்ட் உருவாக்கிக் கொள்ளவேண்டும். இதிலும் இரண்டு வகை உள்ளது. www.readnotify.com மற்றும் www.readverify.com என்று இரு வேறு தளங்கள் உள்ளன. www.readnotify.comல் Active-X Plugin என்ற ஒரு வகையான ஊடுமென்பொருளை உங்கள் கணிணியில் இருத்தியாக வேண்டும். இந்த மென்பொருளுக்குள் என்னவிதமான ரசாயனங்கள் இருக்குமோ.. யாருக்குத் தெரியும். எனவே நாம் இந்தமாதிரியான ஊடுமென்பொருள் தேவைப்படாத www.readvefify.com தளத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
சரி.. சரி... இதைப்பற்றி விலாவாரியாக நான் எழுதப்போவதில்லை. எல்லா விபரங்களும் அந்தத் தளத்திலேயே உள்ளது. இப்பதிவு அதை எவ்வாறு தடுத்துக்கொள்வது என்பதைப்பற்றியது.
அதெப்படி ஒரே பதிவில் அதைச் சொல்வது...வருகிறது விரைவில் அடுத்த பதிவு...
அதுவரைக் கொறித்துக்கொள்ள இந்தச் சுட்டியைப் படித்து வையுங்கள்
http://internet-insecurity.com/blog/category/email-security/
2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
பார்த்துப்பா... சில பேர் கோய்ச்சுக்கப்போறாய்ங்க...
மாயவரத்தான் என்பவன் mayiladuthurai@gmail.com எனும் முகவரியில் இருந்து மெயில் அனுப்பி இதனை படித்துப் பாருங்கள் என்று எழுதி இருந்தான்.
அதனை பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றுமே இல்லை.
இப்போதுதான் தெரிகிறது பார்ப்பன மிருகங்கள் எப்படி குறுக்கு வழிகளை தேர்ந்து எடுத்து இருக்கிறது என்று.
இந்த பிழைப்பிற்கு தூக்கு போட்டு தொங்கலாம். காட்டி கொடுத்தும் கூட்டி கொடுத்துமே பழக்கப்பட்ட பார்ப்பன இனத்தில் பிறந்த ஜந்துகள் பின் எப்படி இருக்கும்?
அடத்தூ... தூக்கு போட்டு தொங்கலாம்!
இதெல்லாம் ஒரு பிறப்பென்று தமிழ் மணத்திலும் தேன்கூட்டிலும் திரட்டுகிறார்களே!
Post a Comment