பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 2

1990 களில் சதாம் உசேன் டாலர் மூலம் எண்ணெய் விற்பனை செய்வதை எதிர்த்து ஈரோவில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று ஒபெக் அமைப்பில் போராடினார். அவருக்கு ஆதரவாக லிபியா, கொலம்பியா, மற்றும் சில உறுப்பினர்கள் முழங்கினர். தவறhன வழிகாட்டல் மூலம் ஈராக் குவைத்தை தாக்க ஊக்கப் படுத்தப்பட்டு, ஊக்கப்படுத்தப் பட்டவர்களாலேயே, போரும் நடத்தப்பட்டு, முதலாம் ஈராக் போர் நடந்தேறியது. ஈராக்கை பலவீனப்படுத்த மட்டுமே முடிந்த அந்தப் போர் அமெரிக்காவிற்குத் தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்தப் போர் ஏனைய அமெரிக்க எதிர்ப்பாளர்களின் முதுகுத் தண்டுகளை சில்லிட வைக்கும் பயத்தை ஏற்படுத்திய வகையில் அமெரிக்காவிற்கு வெற்றிதான்.


2001ல் இரட்டைக் கோபுர வீழ்ச்சிக்குப் பிறகு, அதில் துளியும் சம்பந்தபட்டிராத சதாம் உசேன் மீது பொய்க்குற்றம் சாட்டி இரண்டாம் ஈராக் போர் ஏவப்பட்டு, வெற்றி கொண்டு, அமெரிக்காவின் நேரடி ஆளுமையின் கீழ் ஈராக் அரசு வந்தது. நேரடி ஆளுமை என்பது அமெரிக்காவின் படைத் தளபதியின் ஈராக்கின் அனைத்து நடவடிக்கைகளும் வந்தது. ஈராக் ஒபெக் அமைப்பின் உறுப்பினர் என்பது உலகறிந்த உண்மை. 2001 ஈராக் போருக்குப்

பின் ஒபெக் அமைப்பில் நேரடியாக அமெரிக்கா உள்ளே வந்தது. மிரட்டல்கள், உரத்த சத்தம் மூலமாக ஒபெக் மூலம் நேரடியாக எண்ணெய் வர்த்தகத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. 2002ல் ஒரு வழியாக ஒபெக் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழக்க, ஐசிஈ என்ற நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தை தொடங்கியது. அதற்கு முன் இன்டரநேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் என்ற அமைப்பு அத்தகைய வர்த்தகத்தை நடத்தி வந்தது. அதன் மூலம் ஒபெக் அமைப்பு விற்றhலும், விலை என்னவோ 20-40 டாலருக்கு மேல் போனதில்லை.

அந்த இன்டர்நேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் (International Petroleum Exchange - IPE) நிறுவனத்தை ஐசிஈ விலைக்கு வாங்கியதன் மூலம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யும் அல்லது அதை ஏற்றவோ இறக்கவோ செய்யக் கூடிய ஏகோபித்த கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றது. இதை ஒபெக் நாடுகள் அறிந்தனவா, தெரிந்திருந்ததா அல்லது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலையா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆன்லைன் வர்த்தகம் என்ன என்று சற்று கவனிக்கலாம். ‌ இது சம்பந்தமான பதிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான சுட்டிகள் இ‌ங்கே. பதிவு1, பதிவு2.

உற்பத்தி கேந்திரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் உற்பத்திச் செலவு 8 லிருந்து 10 டாலருக்குள் தான். இந்த விவரத்தை நீங்கள் என்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் காணமுடியும். 10 டாலர் கச்சா எண்ணெய், எப்படி 100 டாலருக்கு சர்வதேச சந்தையில் விற்கிறது? யாருக்குப் போகிறது அந்த 90 டாலர்? இதெல்லாம் அறிய வேண்டுமானால், ப்யூச்சர்ஸ் எனப்படும் பங்கு வர்த்தக முறையை அறிந்திருக்க வேண்டும். வரும் காலத்தில் டிமாண்ட் கூடுதலாக இருக்கும் என்ற கணிப்பில் இந்த விலை இருக்கும் என்ற உத்தேசத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தேவைப்படும் அளவைக் குறித்து ஒரு பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுவார் அந்த வர்த்தக நிபுணர். அது பில்லியன் டாலர் கணக்கில் வரும். ஆனால், அதில் பத்து சதம் மட்டும் கட்டி அந்த கான்ட்ராக்ட் போட ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கிறது. அந்த பத்து சதத்திற்கும் வங்கிகள் சொற்ப வட்டிக்கு அதாவது, கான்;;ட்ராக்ட் அமலாகும் காலம் வரையிலான வட்டியை மட்டும் முன்கூட்டியே வாங்கிக் கொண்டு அந்தப் பத்து சதத்தை கடனாகத் தருகின்றன. ஆக 1 பில்லியன் டாலர் கான்ட்ராக்டிற்கு வெறும் சில ஆயிரம் டாலர்களை மட்டும் செலவு செய்து கான்ட்ராக்ட் போடப் படுகிறது.

விலையேற்றம் என்பது சொற்ப செலவிலேயே நடக்கிறது, ஆனால் ஈட்டுவதோ
பல்லாயிரம் மடங்கு லாபம். அந்த லாபம் அனைத்தும் அமெரிக்க டாலரிலேயே இருப்பதால், அமெரிக்காவிற்கு டாலர் பிரிண்ட் செய்யும் செலவிலேயே எண்ணெய் கிடைத்து விடுகிறது. இதுதான் சூட்சுமம்.

சரி, சர்வதேசச் சந்தையில் 10 டாலர் ஏறினால் இங்கு பெட்ரோல் பங்கில் 2.50 ருபாய் விலையேற்றுகிறhர்களே, அது எப்படி? என்று உங்களுக்கு ஆச்சரியமும் வேதனையும் ஏற்பட்டால், விவரங்கள் அடுத்த பதிவில்.

0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்: