அனானிகளுக்கும் போலியார்களுக்கும் ஒரு சேதி..

அனானிகளுக்கும் போலியார்களுக்கும் ஒரு சேதி..

அடக்கி ஆளும் அதிகாரவர்க்கம் மற்றும் எதேச்சதிகார, சர்வாதிகார ஆட்சியாளர்களின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட்டு சாதாரணன் தன்னுடைய கருத்துக்களை இணையம் வழி பகிர்ந்து கொள்ளவும்,

அதே சமயம் அநாகரிகமாக பின்னூட்டமிடும் அனானிகளுக்கும், கேவலப்படுத்தியும் கேவலப்படும்படும்படியும் முகமூடியின் பின் இருந்து கொண்டு எழுதும் போலியார்களுக்கும் தங்கள் முகம் தெரியாமல் வலையில் எழுத ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேலும், நாடுகள் இந்த முறையை தனது உளவாளிகளிடமிருந்து எதிரி நாட்டுக்குத் தெரியாமல் தகவல் சேகரிக்கவும் பயன்படுத்துகின்றன. சமீபத்தில் கூட மத்தியகிழக்கு நாடுகளில் அமெரிக்க இத்தகைய முயற்சியை ஆரம்பித்து வைத்தது. அதன் பலனாக, தீவிரவாதிகளும் அப்படியே அமெரிக்காவிற்கு எதிரான செய்திகளை இணையத்தில் பதிப்பித்தனர். ஆக எந்த ஒரு செயலையும் நல்ல விதமாகவும் தீய விதமாகவும் செய்ய முடியும் என்ற இயற்கை விதி மறுபடியும் நிருபிக்கப்பட்டது.

இது ஒரு உலாவியைப் (BROWSER) பற்றிய செய்தியாகும். இந்த உலாவி தீநரியை (FIREFOX) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலாவியாகும். இந்த உலாவி டார் (TOR - The Onion Router) என்ற வெங்காய வழிச்செயலியின் செயற்பாடு சார்ந்து உருவாக்கப்பட்ட உலாவி. தற்போது வெகுப் பிரசித்தமாகி வருகிற இந்த உலாவியைப் பற்றி சற்றே விளக்கமாகப் பார்க்கலாம்.

வெங்காய வழிச்செயலி என்றால் என்ன?

வெங்காய வழிச்செயலி அடிப்படையில் ஒரு இடத்தை அடைய பலவழியாக சுற்றிச் சென்று சேரும் விதமாக செயல்படுகிறது. உதாரணமாக, ஒருவன் திருச்சியிலிருந்து சென்னை செல்ல வேண்டுமானால், தேசிய நெடுஞ்சாலை 45ன் வழி சென்றால் ஒரே நேர்க்கோட்டில் சென்னை சென்றடைய முடியும். யாராவது அவனுடைய பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தால் அவன் எங்கிருந்து வருகிறான் என்று சுலமபமாக அறிய முடியும். அதே சமயம், திருச்சியிலிருந்து நாமக்கல் வரை ஒரு பேருந்து், நாமக்கல்லிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்து், சேலத்திலிருந்து சென்னை வரை ஒரு பேருந்து், இப்படி பல பேருந்துகளில் மாறிப் போனால் அவன் கடைசியாக வந்த பேருந்தின் பயணச்சீட்டை மட்டும் வைத்து அவன் எங்கிருந்து வந்தான் என்று அறிய முடியாது. பேருந்தின் நடத்துனரும் எந்த சாட்சியமும் அளிக்க முடியாது. ஆக அவன் எங்கிருந்து வந்தான் என்று ஆதாரப்பூர்வமாக நிருபிக்க முடியாமல் போகும். அதே கதைதான் வெங்காய வழிச்செயலியும்.

நீங்கள் திருச்சியில் மத்தியப் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு இணைய உலாவல் மையத்திலிருந்து (BROWSING CENTRE) தமிழ்மணத்தின் மூலமாக வஜ்ராவின் ( வஜ்ரா மன்னிக்கவும் .. ) வலைப்பதிவிற்கு அனானியாக பதிவிட்டீர்களானால் அவர் உங்களின் இணையக்குறியீட்டு (IP Number) எண்ணைக் கண்டு நீங்கள் எந்த உலாவல் மையத்திலிருந்து வருகிறீர்கள் என்று கண்டுபிடித்து தனது பதிவில் போடுவார். அதே சமயம் இந்த உலாவியைக் கொண்டு அதே மாதிரி பதிவிட்டீர்களானால் வஜ்ராவிற்கு நீங்கள் இஸ்ரேலில் டெல்அவிவ் நகரிலிருந்தோ அல்லது ஜெர்மனியிலிருந்தோ பதிவிட்ட மாதிரியான இணையக்குறியீட்டு எண்தான் கிடைக்கும்.

இதைப்பற்றிய சில விளக்கப்படங்கள் இதோ. மேல் விவரம் பெற இங்கு செல்லலாம். (http://tor.eff.org/overview.html.en) இதற்கு மேலும் எளிய விளக்கம் வேண்டுவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம். (thiruvadiyan_AT_gmail_com)




























உங்களுக்கு அடுத்துத் தோன்றுகிற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். இந்த உலாவியின் பெயர் என்ன? அதை எப்படி எனது கணிணியில் இடுவது? பொது உலாவல் மையத்தில் இதை நான் எப்படி பயன்படுத்துவது? சரிதானே..

இந்த உலாவியின் பெயர் டோர்பார்க் (TORPARK) என்பதாகும். இது இங்கு கிடைக்கிறது. (http://torpark.nfshost.com/)

இதைக் கணிணியில் நீங்கள் இடத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் உங்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ, அப்பொழுது மட்டும் இதை கணிணியில் இடாமலேயே பயன்படுத்த முடியும்.

பொது உலாவல் மையத்தில் இதைப் பயன்படுத்த கைவட்டில் (USB Drive) சேமித்துக் கொண்டு உலாவல் மையத்தின் கணிணியில் இதை கைவட்டிலிருந்தே சுட்டிப் பயன்படுத்தலாம்.

முக்கிய அறிவுறுத்தல்

இந்த உலாவியை நல்ல விடயத்திற்கு மட்டுமே பயன் படுத்துமாறு வலைஞர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு
புதிய கணிணி வார்த்தைகள்:

தீநரி (Firefox) - A browser (http://www.mozilla.org)
வழிச்செயலி - Router (http://en.wikipedia.org/wiki/Router)
வெங்காய வழிச்செயலி - The Onion Router(TOR) (http://en.wikipedia.org/wiki/Tor_(anonymity_network)
இணைய உலாவல் மையம் - Internet Browsing Centre
கைவட்டு - USB Drive

22 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

Anonymous said...

சுத்தம்!!!

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..

Anonymous said...

நீங்கள் சொல்லுவது போல் firefoxக்கு ஏதும் இருப்பதாக் தெரியவில்லை.

said...

அதாவது இது தீநரி உலாவியின் அடிப்படிடையில் உருவாக்கப்பட்டது என்று தான் சொல்லியிருக்கிறேன். இது ஒரு தனி உலாவியாகும்.

said...

திருவடியான்,

இது கண்ணுக்குத் தெரியாத அனானியாக இருக்க வழி..

இந்த அனானிகளை கண்டுபுடிக்க வழி ஏதேனும் உள்ளதா?

Anonymous said...

வஜ்ரா,

ஆமாம். உன்னிடம் சொல்லிவிட்டால் போதும். பாப்பார வலைப்பதிவாளர்களை காப்பாற்றி விடுவாய்? பொத்திகிட்டு போவியா?

said...

வாங்க வஜ்ரா.. நீங்க மன்னிச்சிட்டீங்க தானே... ்-)

அனானிகளைக் கண்டு பிடிப்பதற்கு உங்களின் வலைப்பதிவில் சில ஜாவா சித்து வேலைகளைக் கையாண்டு தான் செய்ய வேண்டியிருக்கும். நமக்கு அந்த அளவுக்கு வலைஞானம் கிடையாது. அதற்கு சில விற்பன்ன வலைஞர்கள் உதவக்கூடும்.

said...

எந்த மரத்தடியில் உட்கார்ந்து யோசித்தீர்கள்?

உருப்படியா ஏதாவது சொல்லுங்கள்.

இப்படி பண்ணினால் மேலும் மேலும் நமக்கு ஆபத்து.

Anonymous said...

இது நல்ல பதிவா கெட்ட பதிவா :))

சந்தேக அனானி

Anonymous said...

"முக்கிய அறிவுறுத்தல்

இந்த உலாவியை நல்ல விடயத்திற்கு மட்டுமே பயன் படுத்துமாறு வலைஞர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."
செய்ய வேண்டிய திருட்டு வேலைகளை சொல்லிக் கொடுத்து விட்டு இது என்ன விளக்கெண்ணெய் வேண்டுகோள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர்

said...

//
ில ஜாவா சித்து வேலைகளைக் கையாண்டு தான் செய்ய வேண்டியிருக்கும்.
//

அதெல்லாம் கதைக்கு உதவாது தல...

இப்ப வர்ர firefox barebones மட்டும் நிறுவிக்கொண்டு, உங்களுக்குத் தேவையான script மட்டுமே ஓட்டவல்ல தடுப்பு முறைகள் பல வந்துவிட்டன அதை இடைச்செறுகல்கள் (plugins!!?) ஆக நிறுவிக்கொண்டோம் என்றால்... நாம் என்ன தான் ஜாவா, சுமத்ரா scriptகள் நம் வலைப்பதிவில் வைத்திருந்தாலும் அதெல்லாம் அவன் மேயும் போது அவன் உலாவியில் ஓடாது...அது ஓடினால் தான் நமக்கு யார் மேயுறது என்பதெல்லாம் தெரியும்...பதிவாகும்...

said...

வருகை தந்த அனானிகள் மற்றும் கார்மேகராசாவிற்கும் நன்றி.

இதன் நோக்கம் வலைஞர்களுக்குப் புதிய விஷயங்களைக் கூறுவது தான். மேலும் தற்போது தமிழ்மணத்தில் கோஷ்டி கானம் கேட்கத் தொடங்கியுள்ளது. அதாவது பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாதார், பிறகு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள். இவர்கள் ஒருவரையொருவர் அசிங்கமாகவும் கேவலமாகவும் திட்டிக்கொண்டு திரிகின்றனர். இதில் ஒரு சாரார் கணிணி அறிவு அதிகம் பெற்றிருப்பதால் மறு சாராரைப் பற்றி தோலுரித்துக் காட்டுகிறேன் பேர்வழி என்று அவர்களின் குடும்பத்தினர் வரை சந்திக்கு இழுப்பது என்று அநாகரிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. வலுக்குறைந்த மறு சாரார் தம்மை இந்த மாதிரியான சூழலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்த பதிவு உதவக் கூடும்.

said...

வஜரா,

நீங்க NoScript Extension பத்தி சொல்றீங்க. நான் சொல்ல வருவது என்ன வென்றால் மறைச்சுட்டி (HiddenLinks) மற்றும் ActiveX போன்ற சில வித்தைகள் உள்ளன. வலையுலகத்தில் முடியாதது என்பதே கிடையாது. ஆனால் அந்த முயற்சிக்கு உள்ள விலை என்ன என்பதைப் பொறுத்தது.

said...

திருடராய்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

said...

சரியாச் சொன்னீங்க... என்னார்..

said...

நன்றி !!!

Anonymous said...

அடடா... இது விடாது கருப்புவுக்கு முன்னமே தெரியாமால் பேச்சேப்பா.. இல்லைன்னா அவனோட போட்டோவெல்லாம் போட்டிருக்கமாட்டானுகளே...

said...

//இது நல்ல பதிவா கெட்ட பதிவா :))//
:)

said...

தீவு தங்கள் வருகைக்கு நன்றி..

இந்தப்பதிவு கெட்டதா நல்லதா என்பது அவரவர் மனத்தைப் பொறுத்தது. :-)

said...

உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் தலை. கோடி புண்ணியமா போகும்!

இப்படிக்கு,
உண்மையான போலியார்,
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

said...

உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் தலை. கோடி புண்ணியமா போகும்!

இப்படிக்கு,
உண்மையான போலியார்,
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

Anonymous said...

இன்றைய ஆப்புவை படித்துப் பார்க்கவும். விறுவிறுப்பான செய்திகளோடு!
http://special-aappu.blogspot.com

said...

திரு.போலியார் டோண்டு அவர்களே... வருக.

துபாயில் தேரா பகுதியில் ஒரு கடையில் ஆப்பமும் மீன் குழம்பும் ரொம்பப் பிரபலமாயிற்றே, அந்தக் கடையின் மேல் மாடியிலா குடியிருக்கிறீர்கள்? மறக்க முடியுமா, அந்த பழைய மீன் குழம்பையும் சுடச்சுட கிடைக்கும் ஆப்பத்தையும். நான்கூட ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலை 7-மணிக்குப் போய் 9-மணிக்குத்தான் சாப்பிட விட்டார்கள். அவ்வளவு கூட்டம்.