லெபனான் தாக்குதல்: யாருக்கு வெற்றி ?

நடந்து முடிந்த(!) லெபனான் தாக்குதலில் இரு அணியினருமே வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஹெஸ்பொல்லா மற்றும் அரபு நாட்டினர் அவர்கள் வெற்றி பெற்றதாகக் கொக்கரித்துக் கொண்டுள்ளனர். சன்னி அரபுகள் ஒரு புல்லைக் கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் ஜெயிப்பவர்களுடன் சேரத்தெரிந்தவர்களாக அவர்களும் ஆரவாரிக்கின்றனர்.

எது எப்படியோ ஹெஸ்பொல்லாவிற்கு இனி அதிகம் பணம் வரக்கூடும். நீங்கள் பார்த்ததில்லையா நாயகன் படத்தில்... மக்களை கொடுமைப்படுத்தும் இன்ஸ்பெக்டரைக் கொல்லும் கதாநாயகனை மக்கள் அளவுக்கதிகமாக ஆதரிப்பதில்லையா... அதுபோல... அரபுகள் இனி ஹெஸபொல்லாவிற்கென தனி அக்கவுண்ட் தொடங்கக்கூடும். அமெரிக்கா வளர்த்து வைத்திருக்கும் கள்ள ஆயுதச்சந்தையில் நவீன ஆயுதங்கள் வாங்க அந்தப் பணம் உதவக்கூடும்.

அமெரிக்கா ஒருகாலத்தில் அளித்த ஆயுதங்களை உருமாற்றி அவர்கள் மேலேயே ஏவிய கூத்து இப்போது நடந்து கொண்டிருக்கிறது. உலகம் உருண்டையல்லவா... அதுதான், அமெரிக்க ஆயுதங்கள் அமெரிக்கர்களையோ அமெரிக்கத் தோழ நாடுகளையோ தாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இஸ்ரேல் மறுபக்கம் தானே வெற்றி பெற்றதாக கூவிக்கொண்டுள்ளது. ஒவ்வொரு இஸ்ரேலிய வீரன் கொல்லப்பட்டதற்கும் 10 அரபுகளைத் தான் கொன்றதாக பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல நீண்ட தொலைவில் தாக்கும் ஏவுகணைகளை ஏவும் ஹெஸ்பொல்லாவின் சக்தியை தான் முற்றிலும் ஒழித்துவிட்டதாக அது பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. வேறுவகையில் பார்த்தால், லெபனான் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பொருளாதாராத்தில் மிகவும் பின்தங்கப் போகிறது. காரணம் பணம் வந்து கொண்டிருந்த சுற்றுலா மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

அது மட்டுமல்ல. இன்றைக்கு ஐநா அளவில் சண்டை நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில் இந்தச் சண்டை உண்மையாக நிற்கப் போவதில்லை. இருக்கும் இரண்டு வீரர்களை திரும்பப்பெறும் வரையில் அங்கிருந்து இஸ்ரேல் இராணுவம் நகரப்போவதில்லை. அதே சமயம், இஸ்ரேல் இராணுவம் வெளியேறும் வரை தான் சும்மா இருக்கப் போவதில்லை என்று ஹெஸ்பொல்லாவும் கூறி வருகின்றன. எனவே, வெளிப்பூச்சுக்கு கொஞ்ச காலம் சண்டை நிறுத்தம் அனுஷ்டிக்கப் படக்கூடும்.

சரி உண்மையில் இதில் பாதிக்கப்பட்டோர் லெபனானின் அப்பாவி பொதுமக்களும் இஸ்ரேலின் அப்பாவி பொதுமக்களும் தான். நிஜத்தில் இரு ஜனங்களுமே அப்பாவி கிடையாதுதான். ஆனால், குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.

கையாலாகாத லெபனான் அரசுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். ஒருபக்கம் அமெரிக்காவுக்கு ஆதரவு (நம்ப முடியவில்லையா... பனிப்போர் காலங்களில் CIA வின் மிக முக்கியமான செயற்கேந்திரம் பெய்ருட் ஆக இருந்து வந்தது. அமெரிக்க உளவுத்துறைகளின் பல்வேறு பிரிவுகளுக்கும் ஒவ்வொருத்தருக்கும் தெரியாமல் அங்கே ஆதரவாளர்கள் அங்குண்டு). மறுபக்கம் ஹெஸ்பொல்லாவிற்கு மறைமுக ஆதரவு. மேலும் உட்சபட்சமாக, தெற்கு லெபனானில் ஹெஸபொல்லாவினர் முறையான தேர்தலில் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் அரசை இஸ்ரேலர்கள் சிலர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னவென்று தெரியுமா? பாலஸ்தீன இயக்கத்தில் ஊடுருவியிருக்கின்ற அளவுக்கு ஹெஸ்பொல்லாவில் மொஸாட்டின் ஊடுருவல் இல்லையென்று. அதுவே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ.... தற்போது BBCயும் CNNனும் வேறு செய்திகள் சொல்லலாம்.

அது சரி.. நான் கற்பனை செய்து பார்க்கிறேன்... நாம் எப்போது காஷ்மீர-ஹெஸ்பொல்லாக்களைத் தாக்குவது. அதாங்க பக்கத்து நாட்டில் ஒளிந்துகொண்டு நம் நாட்டில் தீவிரவாதம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்களே... இஸ்ரேல் மட்டும் தனது படையைக்கொண்டு லெபனானைத் தாக்கும் போது யார் வந்து தடுத்தார்கள். ஐநா சபையில் சாவகாசமாக விவாதம் வைத்து பிறகு ஒரு தீர்மானம் போடுவார்கள். அப்போது கேட்டுக் கொண்டால் போயிற்று... அது மட்டுமா அந்த ஷரத்து பிடிக்கவில்லை, இந்த ஷரத்தை மாற்று என்று சொல்லி காலம் ஓட்டிவிடலாம்.

என்ன,... இன்று கொடியேற்றியதைப் பார்க்கப் போனீர்களா... அல்லது சன் டிவியின் முன் உட்கார்ந்திருந்தீர்களா..?

9 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

திருவடியான்,

தீவிரவாதிகளைத் தீவிரவாதிகள் என்று சொல்லாமல் எதிர்ப்புவாதிகள் என்று சொல்வது இப்போது Fashion ஆகிவிட்ட நிலையில் உங்கள் பதிவை வரவேற்கிறேன்.

said...

ஆமாமாம்...60 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் தாத்தாவையெல்லாம் அப்படித்தான் பிரிட்டிஷ்காரர்கள் சொன்னார்களாம்.

இவர்களை நீங்கள் எந்தப் பக்கத்திலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

நான் எந்தத் தீவிரவாதத்தையும் ஆதரிப்பவனல்ல... அது தனி நபராக இருந்தாலும் சரி, தனி இயக்கமாக இருந்தாலும் சரி, தனி நாடாக இருந்தாலும் சரி. ... மக்களை ஒழிக்கும் தீவிரவாதம் தேவையில்லை அது எங்கிருந்தாலும்.....

சங்கர், உங்கள் வருகைக்கு நன்றி...

said...

புலிப்பாண்டியண்ணே.... என்னடா சம்பந்தா சம்பந்தமில்லாமல் இஸ்லாமியர்களைப்பற்றி சொல்றியளேன்னு கூகுள்ளே தேடிப்பார்த்தாத்தானே தெரியுது. யாரோ ஒரு வெறிபிடித்த ஆள் பல்வேறு பெயர்களில் எழுதிக்கொண்டிருப்பது. அதனால் உங்களின் பின்னூட்டம் இடம் பெறவில்லை. நான் ஏதாவது சொல்வனாக்கும் என்று தூண்டிப்பார்க்கிறீர்களாக்கும்.

சரிதான் எனக்கு வேறு சோலி இருக்கிதில்லா... வரட்டுமா மக்கா... ஆனா அடிக்கடி வந்துட்டு போம்லே... என்னா புரியுதாலே....

said...

ஆமாமாம்...60 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் தாத்தாவையெல்லாம் அப்படித்தான் பிரிட்டிஷ்காரர்கள் சொன்னார்களாம்

வித்யாஸம் இருக்கிறது திருவடியான். உங்கள் தாத்தா பொதுமக்களை கொல்லவில்லை.

அரசியல் ரீதியான காரணங்களுக்கு அரசியல் தலைவர்களை, அவர்களின் கட்டளைகளை முன்னின்று செயல்படுத்தும் அதிகாரிகளைக் கொல்வது என்பது வேறு. ஒன்றும் தெரியாத பொதுமக்களைக் கொல்வது என்பது வேறு.

பகத் ஸிங்க் செய்தது தீவிரவாதம் இல்லை. அது அரசியல் ரீதியான கொலை. ஆனால், மதானி செய்வது தீவிரவாதம். நீங்கள் கூறுவது பகத்ஸிங்கை மதானிக்கு சமன் செய்வதை ஒத்தது.

மதானி கருணாநிதியையோ, அத்வானியையோ, சோனியா காந்தியையோ போட்டுத்தள்ளியிருந்தால்கூட தாங்கள் சொல்லுவதை ஒத்துக்கொண்டிருக்கலாம்.

ஆனால், ஒன்றும் தெரியாதவர்களை கொன்று அதை நியாயப்படுத்தும் வலைப்பதிவுலக இஸ்லாமியர்களுக்கு நடுவில் தங்களது கருத்து தவறாகவே பயன்படுத்தப்படும்.

said...

Muse அவர்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

there is no winner in a war என்பது பெரியோர்கள் கருத்து

said...

திருவடியான்,
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக கட்டவிழ்த்து வரும் வன்முறையை நீங்க என்ன சொல்வீங்க?

said...

சந்தோஷ்... தங்கள் வருகைக்கு நன்றி...

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கட்டவிழ்த்து விடுவது வன்முறை மட்டுமா... அது இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing. It is the same as what Nazis done to Jews)... பாலஸ்தீனியர்கள் போராடுவது தமது அடிப்படை நிலஆதார விடுதலைக்கு... அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு.. அவ்வப்போது பாலஸ்தீனத்தின் எல்லை இஸ்ரேலால் மாற்றியமைக்கப்படும்போது... யாருக்குக் கோபம் வராது... ஏன் போராட மாட்டான்.. இஸ்ரேல் அளவுக்கு அவர்களிடம் சம அளவு ஆயுத பலம் இல்லை. எந்த பலமும் இல்லாதவனைப் போய் சர்வ பலம் உடையவன் தாக்கினால் அவன் என்ன செய்வானோ.. அதைத்தான் பாலஸ்தீனியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனியர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்... அவர்களில் கிறிஸ்துவரும் உண்டு.. ஒரு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பெண் கிறிஸ்துவ டாக்டராவர்... அது விடுதலைப் போராட்டம்... ஆனால் தீவிரவாத இயக்கம் என்று இஸ்ரேலால் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

இதைப் பற்றி எழுத பின்னுட்டம் போதாது...

said...

முளுப்பூசணியை சோற்றில் மறைக்க முயலும் முழு முட்டாளுக்கு புரியவில்லையா? அதி நவீன நாசகார ஆயுதங்களுடன் இலட்சக்கணக்கான துருப்புக்களுடன் வெறும் மூன்றே நாட்களில் மொத்த லெபனானையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என கங்கனம் கட்டிக்கொண்டு தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து போராடியும் வெறும் ஐயாயிம் ஹிஸ்புல்லாக்களுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் 33நாட்களில் பின்வாங்கி ஓட்டமெடுத்தமை உலக போரியல் வரலாற்றில் மாபெரும் அதிசமாகும்.இவ்வுண்மையை மறைக்க சியோனிச ஊடகங்கள் எடுத்த பல முயற்சிகள் படுதோல்வி அடைந்துவிட்டது.உங்களைப்போன்ற சில புல்லுருவிகள் இன்னும் முட்டாள்தனமாக கிறுக்குவது வேடிக்கையாக இருக்கிறது.