பொருள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) - சில விளக்கங்கள்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மதிப்புக் கூட்டும் வரியை மட்டும்தான் நீங்கள் கட்டுவீர்கள். மீதமுள்ள வரி, உங்களுக்குத்திருப்பித் தரப்படும், அல்லது, நீங்கள் கட்ட வேண்டியதில்லை.
முதல் படத்தில் சென்ட்ரல் ஜி.எஸ்.டி மற்றும் ஸ்டேட் ஜி.எஸ்.டி இரண்டுமே வசூலிக்கப்பட்டு அரசிடம் கட்டப்பட்டு விடுகிறது. இரண்டாம் நிலை விற்பனையில், மதிப்பு ஏற்றப்பட்டு (அதாவது லாபம் மற்றும் இதர செலவினங்கள் சேர்த்து) அதே பொருள் கூடுதலாக மூன்றாம் வியாபாரிக்கு விற்கப்படுகிறது. அவரும் அவர் ஏற்கனவே கட்டிய தொகையைக் கழித்துக் கொண்டு மீதத்தைத்தான் கட்டுகிறார். கடைசியில், பயனாளி மூன்று நிலையிலும் ஏற்றப்பட்ட விலைக்கான வரியையும் சேர்த்து பொருளின் விலையாகக் கொடுத்து வாங்குகிறார்.
இதே முறைதான் இன்டர் ஸ்டேட் ஜி.எஸ்.டியிலும்.
சரி, இப்பொழுது புரிந்திருக்கும் உங்களுக்கு.
ஆனால் அது மட்டுமல்ல. அரசு எப்படி கவனமாக வியாபாரி கவனமாக ஏமாற்றிவிடாமல் இருக்கப் போகிறது அல்லது இருக்க முயற்சி செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.
1. புதிதாக பதிவு செய்பவர்கள் பான் நம்பரைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.
2. இந்தியா முழுக்க ஒரே நம்பர் தான். அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த எண் ஆன்லைன் மூலமாகத் தரப்படும். எல்லா ஜி.எஸ்.டி.களுக்கும் அதே நம்பர்தான். பணம் கட்டும்போது மட்டும் வேறு வேறு ஹெட்களில் கட்டுவீர்கள்.
3. ஆன்லைனில் இந்த நம்பர் வாங்குவது எளிது. ஆதார், பான் கார்டு, மட்டும் இருந்தால் போதும், மூன்று நாட்களில் எந்த வெரிபிகேஷனும் இல்லாமல், உங்கள் பதிவு எண் வழங்கப்படும்.
4. மொத்தமே 4 பாரங்கள் தான் நிரப்ப வேண்டியிருக்கும். ஒன்று விற்பனைக்காக வாங்கிய பொருள்களுக்கு, ஒன்று விற்ற பொருள்களுக்கானது, ஒன்று மாத விற்பனை விவரம், ஒன்று வருட விற்பனை விவரம்.
5. சிறு/குறு வியாபாரிகளுக்கு காலாண்டு மற்றும் ஆண்டு விற்பனை பாரங்கள் மட்டும் தான்.
6. அதனினும் சிறிய வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட வருட விற்பனைத் தொகை இருந்தால் எந்த விதமான ரிடர்னும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதே சமயத்தில் வரியும் வசூலிக்க முடியாது.
இதில் அரசு வியாபாரிகளால் ஏமாற்ற முடியாது என்று நினைக்கிறது. உண்மைதான். ஒவ்வொரு வியாபாரப் பதிவு எண்ணும் ஒரு பான் எண்ணுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. ஒவ்வொரு பான் எண்ணும் இனி ஆதார் எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். வங்கி எண்ணும் இந்த இரண்டும் இன்றி இனி பதிவு செய்ய முடியாது. ஆக கம்ப்யூட்டர் வழியாக ஒரு பான் எண்ணையோ, ஆதார் எண்ணையோ உள்ளிட்டால், உங்கள் மொத்த ஜாதகமும் வந்து விடும். ஆனால் அதற்கு குறைந்தது அடுத்த ஐந்தாண்டுகளாவது ஆகும்.
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
மத்தியக் கிழக்கில் மீண்டும் குழப்பம் - I
இதைப் பற்றிப் பதிவிடவேண்டும் என்று கை நமநமத்துக்கொண்டே இருந்தாலும் முடிந்தவரை சும்மா இருந்து பார்த்தேன் முடியவில்லை....
இந்தப் பிரச்னையைப் பற்றிய கீழே குறிப்பிட்டிருக்கும் எனது முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு தொடர்ந்தீர்களேயானால், பின் வருவதை நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
சதாமின் தூக்கு - முடிவா? ஆரம்பமா?
சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்
என்னதான் நடக்கிறது இங்கு? அமெரிக்காவிற்கு என்னதான் திட்டம்?
(தொடரும்...)
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
விளையாட்டுச் சண்டை: ப்ளே ஸ்டேஷனும் எக்ஸ்பாக்ஸ் ஒன்னும்
நவம்பர் 22 இன்று வெளிவந்து விட்ட எக்ஸ்பாக்ஸ் ஒன் (XBox One) கிட்டத்தட்ட இதே அளவு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. எக்ஸ்பாக்ஸ் ஒன் தற்போது முந்தைய எக்ஸ்பாக்ஸ் 360ஐ விட அதிக அளவு வசதிகளுடன் வரவிருக்கிறது. ஆனால் 10 லட்சம் பெட்டிகளைத் தாண்டி விற்று சாதனை படைக்குமா என்று நாளை தான் தெரியும்.
வழக்கம்போல அஜீத்-விஜய் ரசிக மோதல்கள் போலவே, இணையத்திலும் பிஎஸ்4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள். வழக்கமான மைக்ரோசாஃப்டின் கண்டிப்பான கொள்கைகளால் வெறுத்துப்போன ரசிகர்கள் பிஎஸ்4ஐ தலைக்குமேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு கன்சோல்களையும் தொழில் நுட்பரீதியாக மற்றும் அதில் இருக்கும் வசதிகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், கிட்டத்தட்ட இரண்டும் விலை உட்பட, ஒன்றுக்கொன்று சோடை போகவில்லை. அப்படியென்றால் எதை வாங்குவது, எதை விடுவது? அதைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
பொழுதுபோக்கு அம்சம்:
ஹைடெஃபினிஷனில் கேம் விளையாடிக்கொண்டே, உடனே டிவியை இரண்டாவது திரையில் பார்த்தால் எப்படி இருக்கும்? கேபிள் டிவியை கேம் கன்சோல் வழியாகப் பார்த்துக்கொண்டு, ரிமோட் இல்லாமல் குரல் வழியாக சேனல் மாற்றினால் எப்படி இருக்கும்? (இது சாம்சங்கின் இன்டர்னெட் டிவிகளில் சாத்தியம் தான்.. ஆனால் ஒரு கேம் கன்சோலுக்கு கொடுக்கும் விலையை அதற்காக கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்குமே). இது எல்லாம் எக்ஸ்பாக்ஸில் உள்ளது, ஆனால் பிஎஸ்4ல் இல்லை. மற்றபடி, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வீடியோ தளங்கள் இரண்டிலும் உள்ளன. மிக முக்கியமாக எக்ஸ்பாக்ஸில் உள்ள ப்ளூரே டிவிடி ப்ளேயர், பிஎஸ்4ல் இல்லை.
விளையாட்டுக்களைப் பகிர்ந்து கொள்ளுதல்:
பிஎஸ் வகையறாக்களில் ஒரு விளையாட்டு வட்டை ஒரு முறை வாங்கினால், அதை நண்பரிடம் கொடுக்க முடியும், விலைக்கு விற்க முடியும். யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எக்ஸ்பாக்ஸ்360 வரை அந்த மாதிரி செய்ய முடியாது. ஏனென்றால், அது எக்ஸ்பாக்ஸ் கன்சோலுடன் பதிவு செய்யப்படுகிறது, அந்த விளையாட்டு வட்டை ஓசி வாங்கிகூட வேறு எந்தக் கன்சோலிலும் பயன்படுத்த முடியாது. ஒரு முறை ஒருவர் வாங்கிய விளையாட்டு வட்டை வேறு ஒருவர் பயன்படுத்தவே முடியாது. இது மைக்ரோசாஃப்டின் மீதான முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால், எக்ஸ்பாக்ஸ் ஒன் முதல் இந்தத் தடை நீக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தப்பட்ட வட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். விற்கலாம். எனவே தற்போது பிஎஸ்4 அதை ஒரு முக்கியமான வித்தியாசமாக சொல்லிக்கொள்ளமுடியாது.
கேமரா:
பிஎஸ்4 கேமரா தனியாக வாங்கிக்கொள்ளவேண்டும். கேமராவும் சேர்த்து வாங்கினால் அதன் விலை 500 டாலருக்கும் மேல் போய் விடுகிறது. எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் கேமராவும் 500 ஜிபியும் சேர்த்து 499 டாலர்கள் தான். கேமரா இல்லாமல் 500 ஜிபி பிஎஸ்4 399 டாலருக்கு விற்கிறது.
இம்முறை கினக்ட் (Kinect) கேமரா 1080p துல்லியத்துடனும் ஒன்றுக்கு மேற்பட்ட மைக்-குகளுடனும் வருகிறது. மேம்பட்ட திறனுடன் வரும் கேமராவால் உங்களின் மிகச்சிறிய அசைவைக் கூட துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மைக்குகள் இருப்பதால், உங்களின் குரலைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. இது பிஎஸ்4ல் ஒரு மைனஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.
விளையாட்டுக்களைப் பதிவு செய்தல்:
இரண்டு கன்சோல்களிலும் பதிவு (Record) செய்யும் வசதிகள் இருந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்ளும் (Sharing) வசதிகள் இருந்தாலும், எக்ஸ்பாக்ஸில் கூடுதல் நேரம் பதிவு செய்ய முடிவதும். அதை எடிட் செய்து பதிவேற்றம் செய்யும் வசதியும் இருப்பது சிறப்பு. இந்த எடிட்டிங் வசதி, பிஎஸ்4ல் இல்லை, மற்றும் குறைந்த நேரம் மட்டுமே பதிவு செய்ய இயலுகிறது.
உட்கட்டமைப்பு:
இரண்டு கன்சோல்களும் ஒரே மாதிரியான ப்ராஸசர்களைப் (8 Core Processor ) பயன்படுத்தினாலும், மெமரியின் அளவும் (8GB RAM ) ஒரே அளவில் இருந்தாலும், மெமரியின் வேகம் பிஎஸ்4ல் அதிகம். அதனால், விளையாட்டுக்களைப் பொறுத்தவரையில் எக்ஸ்பாக்ஸ் 720p அளவு துல்லியத்தில் மட்டுமே சிறப்பாக வேலை செய்யமுடிகையில், பிஎஸ்4 1080p அளவு துல்லியத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பார்க்கக்கிடைப்பது, நிச்சயமான ஒரு வித்தியாசம். மைக்ரோசாஃப்ட் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது.
மற்ற விஷயங்கள்:
# ஸ்கைப் வசதி பிஎஸ்4ல் இல்லை. எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் 1080p வசதியுடன் ஒரே சமயத்தில் மூன்று பேருடன் பேச முடியும்.
# HDMI Pass-through டிவி வசதி பிஎஸ்4ல் இல்லை. அதுவும் குரலால் கட்டுப்படுத்தக்கூடிய வசதி எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் வரப்பிரசாதம்.
# காட்சித் துல்லியம் பிஎஸ்4ல் மிக நன்றாக இருக்கிறது.
# ப்ளூ-ரே விடியோ ப்ளேயர் இருப்பதால், எக்ஸ்பாக்ஸ் டிவிடி ப்ளேயராகவும் பயன்படுத்த முடியும். பிஎஸ்4ல் வெறும் விளையாட்டுக்கள் மட்டும் தான் விளையாட முடியும்.
# கூடுதல் வசதிகள் பெறவேண்டி வருடத்திற்கு இரண்டு கன்சோல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பிலான சந்தா கட்டவேண்டியிருக்கும்.
# இனி பிஎஸ்4 போலவே எக்ஸ்பாக்ஸ் ஒன்னிலும் தொடர்ந்து இணையத்தில் இருந்து விளையாட வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை உங்கள் அக்கவுண்டை பதிவு செய்ய இணையத்தில் தொடர்பு வைத்தால் போதுமானது. எனவே இப்போது இந்த வித்தியாசமும் இல்லை.
# விலை வித்தியாசமும் இல்லை (கேமராவையும் சேர்த்தால்).
மொத்தத்தில் பிஎஸ்4ல் விளையாட்டுக்களை மிகத் துல்லியாமான காட்சிகளுடன் அதிவேகமாக விளையாட முடியும். எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் விளையாட்டையும் தாண்டி அதை குடும்பத்தினருடன் களிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பலவகையிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இரண்டுமே இந்தியாவிற்குள் விற்கப்பட இன்னும் பல மாதங்களாகும் என்பது தான் கொஞ்சம் வருத்தமாயிருக்கிறது.
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
Labels: Playstation4, PS4, Xbox, XboxOne, எக்ஸ்பாக்ஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன், ப்ளேஸ்டேஷன்4
அமெரிக்க ஆயுதக்கப்பலும் சமீர் ஃபரஜல்லாவும்
சமீர் பரஜல்லா (Sameer Farajallah) என்கிற புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர், சார்ஜாவில் கட்டிட பொருட்கள் வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். ஐக்கிய அரபுக் குடியரசில் பாலஸ்தீனியர்களுக்கு தனிச் சலுகை உண்டு. அதைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட சமீருக்கு, தன் பொருளாதர வசதியை மேம்படுத்த பல்வேறு வகையிலும் முயன்று வந்தார். சார்ஜா ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு வகையில் வர்த்தகம் நடத்த ஏதுவாக தனது வர்த்தகக் கொள்கையை வைத்திருந்தது.
பிறகு இதே நாடகம் லிபியாவிலும் மறு புணரமைப்பு என்ற பெயரில் நடந்தது.
இதில் எல்லாம் சரியான காசு பெயராமல் சலித்துப் போன சமீருக்கு வேறு வகையான யோசனை சொல்லப்பட்டது. 2010ல் அட்வான்ஃபோர்ட் என்கிற கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சேவை தரும் நிறுவனம் ஒன்றை அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் ஆரம்பித்தார்.
கப்பல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளின் கடற்படை வீரர்களைக் குறிவைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தினார். எஸ்டோனியாவில் மாதம் 2000 ஈரோ தருவதாக வாக்கு கொடுத்தவுடன் 200 பேர் உடனடியாக கடற்படையிலிருந்து விலகி வேலைக்கு சேர்ந்தார்கள். எஸ்டோனியக் கடற்படை, ஆட்கள் பற்றாக்குறையால் தடுமாற ஆரம்பித்து விட்டது என்றால் பாருங்களேன்.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 ஈரோ வீதம் பாதுகாப்பு தரப்படும் கப்பல்களிடமிருந்து வசூலித்து விடுவார். அப்படியென்றால், 200 பேருக்கு லாபமென்ன என்று கணித்துக் கொள்ளுங்கள்.
இந்த கடற்படை வீரர்கள் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் வேண்டுமே... அதைப் பெறுவதில் முறையான வழிமுறைகளை இந்த நிறுவனம் கையாளவில்லை. ஏனென்றால் அதற்கான ஆலோசனை சொல்ல சரியான ஆட்கள் இல்லை அவரிடம். ஒரு முறை, அமெரிக்க மாகாணமொன்றில் தனிப் பயன்பாட்டுக்கு என்று மொத்தமாக ஆயுதம் வாங்கி கப்பலுக்கு அனுப்பி விட்டனர். தாமதமாக மோப்பம் பிடித்த உளவு அமைப்புகள், விவரம் கேட்க, சமீரின் மகன் தான் வாங்கியதாகக் கூறி, ஜெயிலுக்குப் போனார். இரண்டரை வருடங்கள் கம்பெனி செயல்பட தடை விதிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் தான் மீண்டும் அமெரிக்காவில் அக்கம்பெனி செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து செயல்படும் பொருட்டு, தனது கம்பெனியின் தலைமைக் கேந்திரத்தை லண்டனுக்கு மாற்றிவிட்டு தொடர்ந்து தனது தொழிலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
இம்முறை புத்திசாலித்தனமாக கேப்டன் வில்லியம் வாட்சன் என்பவரை தனது கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் நியமித்தார், சமீர். இது ஒரு அமெரிக்கக் கம்பெனி என்கிற தோற்றத்தை தந்தது.
அந்த எஸ்டோனிய படைவீரர்களுக்கும் சரியாக சம்பளம் கொடுக்க வில்லை. ஏன், வேலை செய்வதற்கான ஒப்பந்தம் கூட வழங்கப்பட வில்லை. இதனால், நிறையப் பேர் விலகி விட்டனர். அதனாலென்ன, ரோமானியா, உக்ரைன், என ஏழை நாடுகள் நிறைய இருக்கின்றனவே.
பாருங்கள், இம்முறை எஸ்டோனியர்களும், உக்ரேனியர்களும், இந்தியர்களும் அதிகமான எண்ணிக்கையில் இந்தக் கப்பலில் இருக்கிறார்கள்.
அதெல்லாம் சரி, இந்தக் கப்பல் கடல் கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டு விட்ட வங்காள விரிகுடாவில் என்ன செய்கிறது?
இலங்கையிலிருந்து ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்லும் பல கப்பல்களுக்கு இந்தக் கம்பெனி இதற்கு முன் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இம்முறை யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தார்கள் என்கிற கேள்வியும், இந்தக் கப்பல் ஆயுதங்கள் கடத்தி செல்லும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதா என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் சமீபகாலமாக இலங்கையில் அதிகரித்திருப்பதும், இந்தக் கப்பலின் நடமாட்டமும், இந்தப் பிரச்னையை தீர அலச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
அதற்கான விடையை, ரா அமைப்பு ஒரு வேளை கண்டுபிடிக்கக் கூடும்.
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
Strauss-Kahn Trap
IMF Chief Strauss-Kahn has been arrested and denied bail.
Strauss-Kahn is not an ordinary personality. Kahn is possibly an presidential contestant for French Polls next year. His rating is good compared to the Sarkozy's declining rating. So, what's the trap?
A maid has complained to the police about attempted rape and forceful obscene acts by Strauss-Kahn in a upmarket Sofitel Hotel room. He was arrested inside a plane , just before minutes to fly out. It's a huge debacle to French People's hope in change in Presidency and IMF.
Was the accusation real? We yet to know, since the case is under investigation.
But there are some interesting background information and possible beneficiaries. Let's look into that.
Multi-Currency and US:
Strauss-Kahn, the veteran supporter of alternative Currency in the world, had widely supported the implementation and expansion of Euro Currency, in place of Dollar. After taking the helm of IMF, he has started talking about SDR (Special Drawing Rights), which is equivalent of US Treasury Bonds, but comprises a basket of Currencies, i.e., Euro, Yuan, Yen.
Just barely few days ago before his arrest, Kahn has called for new World Currency (Source: http://www.telegraph.co.uk/finance/currency/8316834/International-Monetary-Fund-director-Dominique-Strauss-Kahn-calls-for-new-world-currency.html). His idea is that this new Currency will gradually replace US Dollar or substitute to certain extent. Instead of single currency (USD or Euro), he has mooted for a basket of currencies, and introducing SDRs in place of US Treasury Bonds to improve the confidence of world community to invest.
We need to look back, for the same reason of voicing out replacing US dollar with Euro for OPEC Trade, caused Saddam Hussein his life and hundreds of thousands of ordinary iraqis' lives. There were two wars have been waged and the country was devastated. There were three OPEC members voicing for replacement of US Dollar in OPEC Trading, (1) IRAQ (2) LIBYA (3) VENEZUELA. Iraq has gone, Libya has been just looked after and ongoing, and Venezuela is on the anvil.
In the meantime, BRIC countries (Brazil, Russia, India, China and South Africa) are busy discussing replacing US dollar as a Transaction currency, atleast in the trade between these 4 countries and signed an in-principle agreement between them to use their own currencies.
China holds $2,85 trillion US treasury bonds, and keep disposing them by investing in high value US companies and Oil Resources, instead of using it for importing goods for the country. China was scary about keeping so much valued treasury bonds in declining currency, and it moots to bring in alternative through IMF.
Now, Strauss-Kahn is accused, arrested and under investigation, and the other Members of IMF will be very scary to talk about replacing US Currency, ever. Since IMF HQ is in US, the Members of IMF has to go to US somehow. Another Scare tactic ?
Sarkozy and PAN-AFRICAN Policy
Sarkozy is intend to stand for Presidential Elections again, which is due next year. Sarkozy's recent acts have brought him infame, and losing his rating, whereas Strauss-Kahn has emerged as a strong contender for the Presidential Election in France.
At the same time, US is shifting its sight to African Continent, which have been under utilized in terms of Human Resources and Natural Resources. China has already made inroad into African Mineral wealth, and has acquired lot of such resources silently. US is moving its focus from Afghanistan and Al-Qaeda to Africa. They have to move away from Afghan/Pak, and it's no longer purposeful, once OBL was hunted down. US will take extreme measures to convince India to take over and look after those non-state actors.
The recent military level actions are lead by French Military in alliance with US Forces in African Continent. Ivory Coast democracy restoration is predominantly done by French Forces. Air Raids in Libya is predominantly carried out by French and US forces under NATO.
Sarkozy and US are the two main beneficiaries by bringing Strauss-Kahn under severe duress and destroying his public image.
You and I don't have difference of opinion in bringing someone under justice for wrongdoing, but it is a bad timing for Strauss-Kahn, as he was in the wrong place, at a wrong time.
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
Labels: Dollar, Hegemony, IMF, Strauss-Kahn, Yuan
பெட்ரோல் விலையின் பின்னணி மர்மங்கள் / 3
கச்சா எண் ணெ ய் அளவு (ஒரு பீப்பாய்) 159 லிட்டர்
சுத்திகரிக்கப்பட்டபின் அதன் அளவு 169 லிட்டர் (ஆச்சரியமாக இல்லை ?)
Diesel - 35 litres
Jet Fuel (Kerosene) - 14.5 litres
LPG - 6.5 litres
Heavy Fuel Oil - 6.6 litres
Heating Oil - 6.6 litres
Other products - 27.5 litres
10 டாலர் விலையேற்றம் எப்படி 2.85 ருபாய் விலையேற்றத்திற்கு எப்படி காரணமாகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். புரியவில்லையெனில், இதோ
10 டாலர் = 450 ருபாய் (உத்தேசமாக..)
46 சதம் பெ ட் ரோல் = 450x.46 = 207 ருபாய்
72.5 லிட்டர் = 207 ருபாய்
1 லிட்டர் பெ ட் ரோல் = 2.85 ருபாய் (விலை வித்தியாசம்)
எனவே ஒவ் வொரு பத்து டாலர் விலையேற்றத்திற்கும் பெட்ரோல் 2.85 ருபாய் கூடுகிறது.
ஆனால், 159 லிட்டர் 90 டாலர் விற்கும் போது, 1 லிட்டர் பெட்ரோல் இந்திய ருபாயில் 25.47 தானே விற்க வேண்டும்.
(சுத்திகரிப்புச் செலவு மிகச் மிகச் சொற்பம் என்பதால் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை).
பங்கில் விற்பதோ 63 ருபாய்க்கு...
அதற்கு அரசு தரும் விளக்கம் இதோ
(இந்தக் கணக்கு பெட்ரோ ல் 58.90 கு விற்க்கப்பட்ட போது உள்ளது)
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.50
Crude Oil Custom duty: Rs 1.10
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00
Total price: Rs 58.90
இப்பொழுது புரிந்திருக்கும், பாதிப்பணம் எங்கு செல்கிறது என்று..
இந்தப் பணம் திருப்பி எண்ணெய்க் கம்பெனிகளுக்கு நட்டத்தை ஈடுகட்ட என்று ஒரு சிறு பகுதி செலவு செய்யப்பட்டு விடுகிறது.
சரி, விலையேற்றத்திற்கான விவரம் தெரிந்தாகி விட்டது. எனவே இதை இத்தோடு விட்டு விடலாமா?
இந்த விலையேற்றம் சர்வதேச அளவில் நடைபெறுகிறதே, பாதிக்கப்படும் மற்ற நாடுகள் என்ன செய்கின்றன? குறிப்பாக, நம் சைஸில் இருக்கும் சைனா இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்று கவனித்தோமானால், நமக்கு வியப்பு ஏற்படும்.
அதற்கு முன் மாதா மாதம் விலையேற்றம் ஏற்படுகிறதே, இதற்கு முன் அப்படி இருந்ததில்லையே என்று உங்களுக்குத் தோன்றினால்....
உண்மை..
கடந்த 6 மாதங்களில் 7 முறை பெட்ரோ ல் விலை உயர்ந்திருக்கிறது. அது எப்படி? எப்போது ஆரம்பித்தது? என்ற சிறு முன்னோட்டத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 2
2001ல் இரட்டைக் கோபுர வீழ்ச்சிக்குப் பிறகு, அதில் துளியும் சம்பந்தபட்டிராத சதாம் உசேன் மீது பொய்க்குற்றம் சாட்டி இரண்டாம் ஈராக் போர் ஏவப்பட்டு, வெற்றி கொண்டு, அமெரிக்காவின் நேரடி ஆளுமையின் கீழ் ஈராக் அரசு வந்தது. நேரடி ஆளுமை என்பது அமெரிக்காவின் படைத் தளபதியின் ஈராக்கின் அனைத்து நடவடிக்கைகளும் வந்தது. ஈராக் ஒபெக் அமைப்பின் உறுப்பினர் என்பது உலகறிந்த உண்மை. 2001 ஈராக் போருக்குப்
பின் ஒபெக் அமைப்பில் நேரடியாக அமெரிக்கா உள்ளே வந்தது. மிரட்டல்கள், உரத்த சத்தம் மூலமாக ஒபெக் மூலம் நேரடியாக எண்ணெய் வர்த்தகத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. 2002ல் ஒரு வழியாக ஒபெக் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழக்க, ஐசிஈ என்ற நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தை தொடங்கியது. அதற்கு முன் இன்டரநேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் என்ற அமைப்பு அத்தகைய வர்த்தகத்தை நடத்தி வந்தது. அதன் மூலம் ஒபெக் அமைப்பு விற்றhலும், விலை என்னவோ 20-40 டாலருக்கு மேல் போனதில்லை.
அந்த இன்டர்நேஷனல் பெட்ரோலியம் எக்சேஞ்ச் (International Petroleum Exchange - IPE) நிறுவனத்தை ஐசிஈ விலைக்கு வாங்கியதன் மூலம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யும் அல்லது அதை ஏற்றவோ இறக்கவோ செய்யக் கூடிய ஏகோபித்த கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றது. இதை ஒபெக் நாடுகள் அறிந்தனவா, தெரிந்திருந்ததா அல்லது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலையா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஆன்லைன் வர்த்தகம் என்ன என்று சற்று கவனிக்கலாம். இது சம்பந்தமான பதிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான சுட்டிகள் இங்கே. பதிவு1, பதிவு2.
உற்பத்தி கேந்திரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் உற்பத்திச் செலவு 8 லிருந்து 10 டாலருக்குள் தான். இந்த விவரத்தை நீங்கள் என்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஆண்டுத் தணிக்கை அறிக்கையில் காணமுடியும். 10 டாலர் கச்சா எண்ணெய், எப்படி 100 டாலருக்கு சர்வதேச சந்தையில் விற்கிறது? யாருக்குப் போகிறது அந்த 90 டாலர்? இதெல்லாம் அறிய வேண்டுமானால், ப்யூச்சர்ஸ் எனப்படும் பங்கு வர்த்தக முறையை அறிந்திருக்க வேண்டும். வரும் காலத்தில் டிமாண்ட் கூடுதலாக இருக்கும் என்ற கணிப்பில் இந்த விலை இருக்கும் என்ற உத்தேசத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தேவைப்படும் அளவைக் குறித்து ஒரு பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுவார் அந்த வர்த்தக நிபுணர். அது பில்லியன் டாலர் கணக்கில் வரும். ஆனால், அதில் பத்து சதம் மட்டும் கட்டி அந்த கான்ட்ராக்ட் போட ஆன்லைன் வர்த்தகம் அனுமதிக்கிறது. அந்த பத்து சதத்திற்கும் வங்கிகள் சொற்ப வட்டிக்கு அதாவது, கான்;;ட்ராக்ட் அமலாகும் காலம் வரையிலான வட்டியை மட்டும் முன்கூட்டியே வாங்கிக் கொண்டு அந்தப் பத்து சதத்தை கடனாகத் தருகின்றன. ஆக 1 பில்லியன் டாலர் கான்ட்ராக்டிற்கு வெறும் சில ஆயிரம் டாலர்களை மட்டும் செலவு செய்து கான்ட்ராக்ட் போடப் படுகிறது.
விலையேற்றம் என்பது சொற்ப செலவிலேயே நடக்கிறது, ஆனால் ஈட்டுவதோ
பல்லாயிரம் மடங்கு லாபம். அந்த லாபம் அனைத்தும் அமெரிக்க டாலரிலேயே இருப்பதால், அமெரிக்காவிற்கு டாலர் பிரிண்ட் செய்யும் செலவிலேயே எண்ணெய் கிடைத்து விடுகிறது. இதுதான் சூட்சுமம்.
சரி, சர்வதேசச் சந்தையில் 10 டாலர் ஏறினால் இங்கு பெட்ரோல் பங்கில் 2.50 ருபாய் விலையேற்றுகிறhர்களே, அது எப்படி? என்று உங்களுக்கு ஆச்சரியமும் வேதனையும் ஏற்பட்டால், விவரங்கள் அடுத்த பதிவில்.
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
பெட்ரோல் விலையின் பிண்ணனி மர்மங்கள் - 1
சந்தை விலை நிர்ணயம் என்ற பெயரில் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்திற்கேற்ப உள்ளூர் விலையை நி ர்ணயிப்பது என்ற அரசின் முடிவு கடந்த ஜூன் மாதம் (2010) எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மாற்றி (ஏற்றி) வந்தார்கள். தற்போது ஒரே மாதத்தில் இருமுறை விலை ஏற்றப்பட்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படுகிறது என்பது பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் எப்படி தினம் ஒரு விலை விற்கிறது, அது என்ன காய்கறியா, தினம் ஒரு விலை விற்பதற்கு.
அதற்கு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உற்பத்தியாகிறது. எங்கு யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச சந்தையில் எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது இந்திய மக்கள் ஏன் ஒவ்வொரு முறையும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது இதை எல்லாம் பார்க்க வேண்டும்.
கச்சா எண்ணெய் உற்பத்தி ஒபெக் (OPEC) என்னும் எண்ணெய் உற்பத்தி நாடுகள்
கூட்டமைப்பிற்குள் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தி செய்கின்றன, ஆனால் அவை ஒபெக் கூட்டமைப்பில் இல்லை. ஒபெக் அமைப்பு 2002 ஆம் ஆண்டு வரை உலக விலை நிர்ணயம் செய்து வந்தது. அது வரை கச்சா எண்ணெயின் விலை 20-40 டாலருக்குள் தான் இருந்தது. 2002க்கு பிறகு இன்டர்காண்டினென்டல் எக்சேஞ்ச் (InterContinental Exchange - ICE) என்ற அட்லாண்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எண்ணெய் தொடர்பான வர்த்தகச் சந்தைக்கான ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கி, ஒபெக் அமைப்பிலிருந்து விலை நிர்ணயிக்கக்கூடிய கட்டுப்பாடு ஐசிஈ எனப்படும் அந்த அமைப்பிற்கு சென்றது. ஆரம்பத்தில் அதற்கு உடன்படாத ஒபெக் அமைப்பு, ஆன்லைன் வர்த்தகம் மூலம் இரு மடங்கு வரை கச்சா எண்ணெய்க்கு விலை கிடைக்கத் தொடங்கியதன் விளைவாக முழுக்க முழுக்க ஐசிஈ யின் மூலம் விலை நிர்ணயம் செய்வதை ஏற்கத் தொடங்கின. இந்த ஐசிஈ யின் பங்கு என்ன அதனால் யாருக்கு உண்மையான லாபம் என்பதை பார்ப்பதற்கு முன்பு ஒரு பின்னோட்டம் பார்க்கலாம்.
கச்சா எண்ணெய் ஆதிக்கம் என்பது பல லட்சக் கணக்கான மக்களைக் கொன்றும், பல நாடுகளின் எல்லைகளை திருத்தியமைத்தும், ஆட்சிகளை மாற்றி, சில நாடுகளின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த வல்லமை பெற்றது.
1960 களில் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டு அந் நாடுகள் செல்வத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த வேளையில், யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. 1967ல் இஸ்ரேல் நாடு போரினால் உருவானது. இஸ்ரேல் தனது எல்லையை விரிவு படுத்த 1973ல் யோம் கிப்புர் போர் என்ற போரை வலுக்கட்டாயமாக தனது அண்டை நாடுகளின் மேல் திணித்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க படைகளின் ஆயுத பலத்தால் சில நாட்களிலேயே இஸ்ரேலுக்குச் சாதகமாக அப்போர் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனியப் பிரச்னை அன்றுதான் மிக விஸ்தாரமாகச் சு{டு பிடிக்கத் தொடங்கியது.
அமெரிக்காவின் இந்தத் தலையீட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கான எண்ணெய் விற்பனையை ஒபெக் நாடுகள் முற்றிலும் நிறுத்தி விட்டன. 6 மாதங்களுக்கு இது தொடர்ந்தது. அமெரிக்கா பொருளாதாரம் ஸ்தம்பித்தது. 1973 பொருளாதார நெருக்கடிக்கு இந்தத் தடையே முக்கியக் காரணம். அந்தச் சமயத்தில்தான் அமெரிக்கா தங்கத்தை இருப்பில் வைத்து கரன்சி அடிக்கும் நியாயமான கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, தம் இஷ்டத்திற்கு டாலர் அடிக்க ஆரம்பித்தனர். டாலரின் உண்மையான மதிப்பென்ன என்று கேள்வி எழுப்பியவர்களெல்லாம் கேள்வி எழுப்பிய நாடுகளெல்லாம் வன்மையாகக் கவனிக்கப்பட்டன. தனது ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கக் கூடியவர்கள் தனது ஆதரவாளராக மட்டுமே இருக்க முடியும், கேள்வி கேட்பர் பரம எதிரி என்பது அவர்களின் கொள்கை. அதை உலகெங்கும் அமுல்படுத்த அமெரிக்கா முயன்றது, முயல்கிறது, முயலுவது எங்கள் பிறப்புரிமை என்று கூவுகிறது. அது ஏனைய நாடுகளுக்குப் பிடிக்க வில்லை.
1973 எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு உலகிலேயே அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான அமெரிக்கா எனர்ஜp செக்யூரிட்டி என்ற பெயரில் புதிதாகக் கொள்கைகள் வகுக்க ஆரம்பித்தது. அதில் முக்கியமான ஒன்று ஒபெக் அமைப்பை தன் கைக்குள் கொண்டு வருவது. 2002 வரை அது சாத்தியமாக முடியவில்லை. ஏன் சாத்தியமாக வில்லை, பின் எப்படி 2002ல் மட்டும் அது சாத்தியமானது?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Posted by திருவடியான் at 2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்
இனி ஒரு விதி செய்வோம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இனி ஒரு விதி செய்வோம் என்று மீண்டும் எழுத வந்துள்ளேன். நாட்டு நடப்புகளை அணுகக் கவனித்து வந்தாலும் எழுத ஏனோ தோன்றவில்லை. ஒரு வகையான மனத்தைப் பிசைகிற விஷயங்களாக நிறைய நடந்து போயின.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்பதாக கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னதிற்கிணங்க, இனி ஒரு விதி செய்வோம் என்று முன் செல்வோம்.
எழுத நிறைய இருக்கிறது.
ஆங் சான் சூகியை ப்பற்றி, அமெரிக்காவின் அண்மைய இந்திய நெருக்கம் பற்றி, ஐப்பானின் சீன எதிர்ப்பும் அதை யொட்டிய சீன மக்களின் சீற்றம் பற்றியும், விக்டர் பெளட் கைதும் அதைச் சுற்றி நடக்கும் அரசியல் நாடகங்களைப் பற்றியும், சமீபத்தில் இறந்து போன திருமதி லீகுவான்யூ அம்மையார் பற்றியும், எனது இலங்கை பயணத்தையும் அங்கு நான் கண்ட சில மாற்றங்களைப் பற்றியும், .......
எழுத நிறைய இருக்கிறது.
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...
Posted by திருவடியான் at 0 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்

