மாத்தையாவின் கதை - 1
மஹேந்திரராசா என்கிற மாத்தையாவின் கதை இது.
இது அவர் தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்து அவர்களாலேயே கொல்லப்படும் வரையிலான காலகட்டத்தில் நடந்த வெளி உலகுக்கு தெரிய வராத சில அரிய விஷயங்களைக் கொணரும் விதமாக எழுதப்படுகிறது. பல்வேறு ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டது. ஆட்சேபனைகள், மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
1956-ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்த மஹேந்திரராசா என்கிற மாத்தையா 1978ஆம் வருடம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்தோரே பெரும்பான்மையாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு இளைஞன் இயக்கத்தின் இரண்டாம் நிலைக்கு வருவது உண்மையில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.
பிரபாகரனின் காரையார் இனத்தைச் சேர்ந்த மாத்தையாவை பிரபாகரனே நேரடியாக விரும்பி தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டதுடன் நிற்கவில்லை. கூடிய சீக்கிரம் வன்னிப் பகுதியின் பிரதிநிதி என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார். அதேசமயம் யாழ்ப்பாணப் பகுதிக்கு பிரதிநிதியாக இருந்த கிட்டு என்கிற சதாசிவம் கிருஷ்ணகுமாரும் மாத்தையா சேர்ந்த அதே சமயத்தில்தான் பிரபாகரனால் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால் கிட்டுவின் வளர்ச்சி மாத்தையாவின் வளர்ச்சியைவிட அதிகமாக இருந்தது. ஒரு வேளை கிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காக இருக்கலாம்.
மார்ச் 31, 1987ல் யாழ்ப்பாணத்தில் இரண்டாம் குறுக்குத் தெருவில் கிட்டு பயணம் செய்த மிட்ஷீபுஷி லான்சரில் எறியப்பட்ட கையெறி குண்டில் கிட்டு தப்பித்தாலும் தனது ஒரு காலை இழந்தார். அது வேறுவகையில் கிட்டுவின் வளர்ச்சியைப் பாதித்தது. இந்த ஊனம் அவரது களப்பணித்திறமையை வெகுவாகக் குறைக்க, வேறு வகையான பணிகள் அவருக்குத் தரப்பட்டது. கிட்டுவின் பொறுப்புகள் மாத்தையாவிற்குத் தரப்பட்டது. இவ்வகையாய் மாத்தையா பிரபாகரனின் நேரடிக் கவனத்தையும் மற்றும் இயக்கத்தில அதிமுக்கியத்துவத்தையும் பெற்றhர்.
இதற்குப் பிறகு வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் இயக்கத்தின் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் அதிகமானது.
இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு சற்று முன் பிரபாகரன் மாத்தையாவிற்கு இட்டகட்டளை என்ன தெரியுமா?
அதாவது செப்டம்பர் 11, 1987ஆம் நாள் மாத்தையா தனது உதவியாளரான யோகியுடன் பட்டிகோலாவில் ரீகன் மற்றும் கருணா (பிற்பாடு தலைவலியாகிப் போன அதே கருணா தான்) ஆகியோருடன் ஒரு ஆலோசனை நடத்தினார். அதாவது 100 போராளிகளை பல்வேறு சிறு குழுக்களாக அனுப்பி EPRLF, PLOTE and ENDLF ஆகிய குழுக்களைச் சேர்ந்தோரை "கவனிப்பது".
செப்டம்பர் 13ல் மாத்தையா ப்ளோட் (PLOTE) இயக்கத்தைச் சேர்ந்த வாசுதேவனை அமைதிப் பேச்சுப் பேச அழைத்திருந்தார். வாசுதேவன் வரும் வழியில் அவரை ஆயுதந்தாங்கிய சிலர் கொன்றனர். அதன்பின் இரண்டு மணிநேரத்திற்குள் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அனைவரும் இன்னபிற போராளிக்குழுக்களின் உறுப்பினர்கள். இந்த ஆபரேஷன் மாத்தையாவால் அவதானித்து நடத்தப்பட்டதாகும்.
அக்டோபர் 2, 1987ல் பருத்தித்துறையில் தமிழகத்திற்கு ஆயுதங்கடத்தியதாக 17 புலிகளை இலங்கை இராணுவம் கைது செய்தது. அவர்கள் சயனைடு குப்பியைக் கடிப்பதற்குள் அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேறு வழியின்றி கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் புலேந்திரனும் குமரப்பாவும் மிக முக்கியமான கமாண்டர்கள். பிற்பாடு அவர்களை விமானம் மூலம் கொழும்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களை பலாலி இராணுவ முகாம் சென்று பார்த்தனர் மாத்தையாவும் அண்டன் பாலசிங்கமும். இதற்கு ஏன் இவ்வளவு விளக்கம் என்றால், இவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பிய சில மணிகளில் பதினேழு போராளிகளும் சயனைடு சாப்பிட்டு இறந்து போயினர். அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஒன்று சயனைடு அல்லது சித்திரவதைக்குப் பின் மரணம். ஆக மரணம் உறுதியாயிப் போனபின் சொர்க்கத்திற்கு சுலப வழியான சயனைடு வழியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இதில் இலங்கை அரசிற்கு அதிர்ச்சி என்ன வென்றால் யார் அந்த சயனைடு குப்பிகளை அவர்களுக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது தான். மாத்தையாவையும் பாலசிங்கத்தையும் தவிர வேறு யாரும் அவர்களைச் சந்திக்க வில்லை. விளங்குகிறதா உங்களுக்கு..? பிரபாகரனின் உத்தரவு, வேறு வழி.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் மாத்தையா, விடுதலைப்புலிகளின் இந்தியஇராணுவ எதிர்ப்பை, காங்கேசன்துறை சிமிண்ட் பேக்டரி வாசலில் வைத்து இராக்கெட் ஏவி ஐந்து இந்திய இராணுவ வீரர்களைக் கொன்றதன் மூலம் ஆரம்பித்து வைத்தார். பிற்பாடு நடந்த கதைதான் தெரியுமே. இராஜpவ் காந்தி கொலை வரை அது தொடர்ந்தது.
அதன் பிறகு இயக்கத் தலைமையகம் வன்னிக் காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 17 தினங்களில் யாழ்ப்பாணம் முழுமையும் இந்திய இராணுவம் கைகளில் வீழ்ந்தது. மாத்தையா புத்து[[}ரிலும் பிரபாகரன் ஆலம்பில்லிலும் (alampil) எந்தத் தொடர்புகளுமின்றி சிறிது காலம் கழிக்க வேண்டி வந்தது. அப்போதுதான் என்னன்னவோ மாற்றங்கள் மாத்தையாவிற்குள் நடந்திருக்கிறது. அது என்ன? அது மாத்தையாவின் வளர்ச்சியை எப்படிப் பாதித்தது?
(இன்னும் வரும்)
(பின் குறிப்பு : இங்கு இயக்கம் என்று குறிக்கப்படுவது LTTE யைக் குறிக்கும்)
19 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
திருவடியான் நீர் இன்னமும் வடிவாக ஈழவரலாற்றை படிக்கவேண்டும் என்பதே எனது கருத்து.
தெரியாவிட்டால் கதைக்கப்படாது.
மாத்தையா வல்வெட்டித்துறையை சேர்ந்தவர், அவரது அண்ணர் கனேஸ் இன்னமுன் அங்கு வாழ்கிறார். 1988ஆம் ஆண்டு மாத்தையாவின் தந்தை இறந்தபோது அதற்கு பெரும் பாதுகாப்போடு அங்கு வந்தவர். அந்த ஈமக்கியையில் கலந்து கொண்டமையால் எமக்கு தெரியும். வேண்டுமென்று நீர் தவறான தகவலை கொடுக்கிறீர்.
பின்னர் இந்திய றோவிடம் விலைபோய் கையும் களவுமாக றோவுடன் தொடர்பில் இருக்கும்போது பிடிபட்டார். நிரூபனத்தின் பின் தண்டனை வழங்கப்பட்டது. சொந்த ஊர்காரனகா இருந்தால் என்ன ? உறவினனாய் இருந்தாலென்ன, சொந்த சகோதரனாய் இருந்தால் என்ன?
தமிழினத்தின் விடியலுக்கு எதிரானவர்களுக்கு அதுதான் முடிவு.
தாய்நாட்டுக்காக துரோகம் செய்த சொந்த தமயனுக்கே தண்டனைவழங்கிய சம்பவங்கள் எல்லாம் ஈழவரலாற்றில் உண்டு.
முடிந்தவரை உண்மையை எழுதப்பாருங்கள். ஏனெனில் நிலையானது சத்தியம் மட்டுமே.
நட்புடன்
இவன்
ஈழபாரதி.
குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட போராளிகளுக்கு எப்படி சயனைட் கைமாறப்பட்டது என்பதை ஊகித்து அறிய வேண்டிய தேவையே இல்லை.
அதை விடுதலைப்புலிகள் பகிரங்கமாகவே சொல்லிவிட்டார்கள்.
பிரபாகரனை கரையார் என்று சொல்லி
விட்டீர்கள். அவர் சில்வர் செம்பு
வேளாளர் அல்லவா.
பல விவரங்களை வெளிக்கொணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ஈழபாரதி வருகைக்கு நன்றி...
நான் படித்த வகையில் மாத்தையா பிறந்தது பருத்தித்துறையில்தான்.
http://www.sangam.org/articles/view/?id=45
சத்தியம் நிலைக்கும் என்பதே உண்மை. ஆகவே தொடர்ந்து இந்தத் தொடரைப் படியுங்கள். உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
மஞ்சூர் ராசா வருகைக்கு நன்றி. மஞ்சூர் ராசா வருகைக்கு நன்றி. மீண்டும் வாருங்கள்.
எல்லாம் வல்ல இறைவனாக கருதப்படும்
பிரபாகரன்(பாரதிராசாவுக்கும், மகேந்திரனுக்கும் பார்த்தவுடன் சிலிர்த்ததாம். பணபெட்டியை பார்த்தா, இவரை பார்த்தா என்பதை மட்டும் விட்டு விட்டார்கள்.) பற்றி எழுதுகிறீர்கள்.
1) நீங்கள் பார்பனரா அல்லது பார்பன அடி வருடியா? (வாஸந்தி கும்பல்)
2) ராவின் கை கூலியா( இறந்து போன மற்ற எல்லோரும்)
ஓற்றை தலைமையில் மாற்றுக் கருத்துக்களே இல்லாதவர்( ஏனேன்றால் அனைவரும் அமரர் ஆகி விட்டார்கள், அல்லது ஆகி விடுவார்கள்) இருக்கும் சுடுகாட்டை நோக்கி பயணம் செய்யக் கூடிய இயக்கமது.
அந்த இயக்கத்தின் பத்து கட்டளைகளின் படி பார்த்தால் நீங்கள் இந்த இரண்டு வகையறாவில் ஒன்றாக கட்டாயமா இருந்தாக வேண்டும். -;)
ஐயா அனானி... நான் பிரபாகரனைப் பற்றி எழுதவில்லை. மாத்தையாவைப் பற்றி எழுதும் போது பிரபாகரனைப் பற்றியும் எழுதித்தான் ஆகவேண்டும்.
மேலும், நீங்கள் சொன்ன இருவகையினையும் சேராத ஆளாக்கும் நான். நடுநிலை என்பதொரு நிலையே உங்களிடத்தில் கிடையாதோ... அதாவது உங்களைப் பொறுத்தவரை, Either with you or Against you. அப்படித்தானே..
நீங்கள் தந்த சங்கம் இணைப்பில் கீழ்க்காணும் இரு வசனங்கள் வெவ்வேறு இடத்தில் வருகின்றன.
1.Kittu, Mahattaya and Ragu joined the LTTE soon after the AVRO blast and rose to responsible positions rapidly. They were all from Valvettithurai.
2.Mahattaya’s real name was Gopalasamy Mahendrarajah. He was born in 1956 in Point Pedro east and studied at Chithampara College.
மாத்தையா வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றுதான் எல்லோரும் அறிந்து வைத்துள்ளனர். பருத்தித்துறை கிழக்கு என்பது சற்று முரண்பாடான தகவல்தான். சிலவேளை அவர் பிறந்தபோது அங்கிருந்த குடும்பம் பின் வல்வெட்டித்துறைக்கு மாறியதோ தெரியவில்லை.
மாத்தையா பருத்தித்துறையை சேர்ந்தவர்தான்(பிறப்பிடமாக கொண்டவர்) என்பது உண்மையே
அது காலபோக்கில் அவர் பிரபாகரனின்
ஊரைசேர்ந்தவராக ஆக்கப்பட்டார்
அவரது பின்புலம் வல்வெட்டிதுறையாக
இருக்கலாம்.
திருவடியான் தொடருங்கள் பார்ப்போம்.
எதை எப்படித்தான் மறைத்தாலும் உண்மைகள் ஒரு நாள் வெளியே வரத்தானே செய்யும். இருபது வருடங்களாக புலிகளால் தமிழ் மக்கள்
களையெடுக்கப்பட்டு கொண்டுதானே
இருக்கிறார்கள்.
திருவடியான் எங்கும் எதிலும் நடுநிலை
என்று இருக்கமுடியாது என்பது என்
கருத்து கவனிக்க நீங்கள் எதிலவாது
ஒன்றில் இருந்தாக வேண்டும் அதுவே
மாற்று கருத்து என்பது இல்லையேல்
அனைத்தும் அவசியமற்றதாகிவிடும்.
மாத்தையாவும் கிட்டுவும் சம காலத்தில் இணைந்தது என்பது தவறானது... மாத்தையா ஆரம்ப கால விடுதலை புலிகள் காலத்திலிருந்தே இருந்திருக்கிறார். ...கிட்டு இணைந்த காலம் பிந்தியது....
கொலை செய்வது புலிகள் வேலை.
கொலை செய்தபின் அதனை ஞாயபடுத்துவது மறக்க சொல்வது புலிகளுக்கு சர்வசாதாரணம். (ராஜிவ் கொலையும் சேர்த்து)
எப்படியோ.... இன்னும் சிறிது காலம்க்குதான்...
இப்பொழுதுதான் இங்கே இயக்கத்தை பத்தி அதன் சுய உருவத்தையும்... வெளிவர ஆரம்பிதிருக்கிரது...
சென்ற சனி கிழமை இங்கே மாணவர்க்ளுனா டிவியில் தீவிரவாதத்தை பற்றி நிகழிச்சியில் பிரேசில் நாட்டில் உள்ள போதை கடத்தல் கும்பலை காடினார்கள். போதைகடத்தல் காரகளிடம் உள்ள ஒழுங்கு நிலையையும் காட்டினார்கள். பிறகு இலங்கையின் தீவிரவாதம்...புலிகள் இயக்கத்தில் இருந்த வெளியேரிய சிலர் அதனை பற்றி வெவரித்தார்கள் போதை பொருள் கடத்துவர்களிடம் உள்ள மனிதம் கூட இவர்களிடம் இல்லை என காட்டினார்கள்.
(விவரித்தவர்கள் அனைவரும் தமிழ்ர்கள் அதுவும் மிகவும் படித்தவர்கள், ஒரு சிலர் இடதுசாரி அமைப்பை சேர்ந்த சிங்கள்வர்கள் மற்றும் தமிழர்கள்), இதனை பார்த்தபிறகு புலிகள் மீது மீண்டும் மீண்டும் வெறுப்புதான் வருகிறது.
அனானி.. வரலாற்றை எழுதுபவர்கள் எல்லோரும் யார் பக்கமாவாது இருந்து கொண்டு எழுதினால் அது வரலாறாகாது. சுயபுராணமாகத்தான் இருக்கமுடியும். இங்கு இயக்கம் என்ற நீரோட்டத்தில் மாத்தையா என்ற தனிநபர் சேர்ந்து பின் மறைந்துபோன வரை நடைபெற்ற விடயங்களைத் திரும்பிப் பார்க்கிறோம். அவ்வளவுதான்.
மற்றுமொரு அனானி எழுதியிருக்கிறார்..புலிகள் மீது வெறுப்புத்தான் வருகிறது என்று. தாம் யார் என்று வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத சூழலில் புலிகள் மீதான வெறுப்பை இப்படி ஊடகத்தின் வழி தெரிவித்திருக்கிறார்.
இது அவரவரின் சொந்தக் கருத்தாகும்.
இலட்சியப் பாதையில் சென்று கொண்டிருக்கும் எந்த இயக்கத்தைப் பற்றியும் இவ்வாறான விமர்சனங்கள் வருவது இயற்கை. இதற்கு விடுதலைப்புலிகள் இயக்கமும் விலக்கல்ல.
சின்னக்குட்டி... வருகைக்கு நன்றி. எனக்குத் தெரிந்தவரை கிட்டு, ரகு மற்றும் மாத்தையா ஆகியோர் 1978ஆம் ஆண்டுதான் இயக்கத்தில் இணைந்தனர். சரியான நாள் கணக்கு தெரியவில்லை. ஆனால் வருடம் அதேதான்.
நீங்கள் பலவற்றை தவறாக [(அ) தப்பாக] எழுதுகிறீர்கள். இருந்தாலும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன்.
///அக்டோபர் 2, 1987ல் பருத்தித்துறையில் தமிழகத்திற்கு ஆயுதங்கடத்தியதாக 17 புலிகளை இலங்கை இராணுவம் கைது செய்தது. அவர்கள் சயனைடு குப்பியைக் கடிப்பதற்குள் அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேறு வழியின்றி கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.///
"Our troops withdrew, the Sri Lankan troops charged, and these fellows swallowed cyanide. Those who chewed, they died on the spot, those who swallowed were saved. This created chaos in the Indo-Sri Lankan entity. That the Indian army, IPKF, could not save them."
http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm
நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாமாம். நித்திரை கொள்ளுறமாதிரி நடிக்கிறவனை எழுப்ப இயலாதாம்.
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
"There were LTTE, around them were the Indian troops, around us were the Sri Lankan troops, around them were the Indian troops, around them the APCs of Sri Lanka. Now tell me, if you try to fight, there would have been a conflict between the Sri Lankan and Indian troops.
...
The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem."
http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
திருவடிவானின் கட்டுரைக்கான காலம் ஏற்புடையதாக இல்லை என்பதோ, அவரின் தகவல்கள் தவறானவை என்றே கருத முடியும். அற்புதன் பாணியில் விடுதலைப் புலிகளின் முகாமில் நின்று பார்த்த கணக்கதக எழுத நினைக்கின்றார் என்றாலும் பல இடங்களில் சறுக்குகின்றார்.
முதலில் மாத்தையா என்பவர் வல்வெட்டித் துறையைச் சார்ந்தவர் மட்டுமல்ல, பிரபாகரனின் உறவு முறையிலானவர் என்பது உண்மை. இவர் பருத்தித் துறை என்று சொல்வது சில வேளைகளில் அவரின் பிறந்த வைத்தியசாலையாக இருக்கலாம். வழமையாக பிறந்த இடம் என்றால் அடையாள அட்டைகளில் வைத்தியசாலைப் பெயரைத் தான் போடுவார்கள். அதை வைத்து, இவர் பருத்தித்துறை எனக் கணக்கிலிகின்றார் போலிருக்கின்றது.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் வளர்ச்சி என்பது, ஒவ்வொருவனின் திறமை அடிப்படையிலும், நம்பிக்கைத் தன்மையின் அடிப்படையிலும் தான் வளங்கப்படுகின்றனவே, தவிர, ஊர் நிலை சார்ந்ததாகத் திரிபு படுத்துவது தவறானது. அது பிரதேச வாதங்களைத் துாண்டுபவர்களுக்கான அடிப்படை ஆதரவு நிலையை எடுக்கின்றது.
அப்படிப் பார்த்தால், ராதா அம்மான் தொடங்கி, விக்டர் வரை கிட்டுவின், நிலையிலும் மூத்தவர்களாக இருந்த தளபதிகளின் நிலை எவ்விண்ணம் கருதுவது? அல்லது, இப்போது, புலிகளின், தளபதிகள் பற்றி எவ்வாறு நினைப்பது? ஆகவே, ஒன்று திறமை, மற்றது நம்பகத் தன்மை இரண்டுமே அவசியமானது
கிட்டு, மாத்தையாவை விட, சிறந்த தளபதியாக இருக்க காரணமே, அவரின் செயற்பாடுகள் தான். முந்தி கிட்டுவைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். எல்லா தளபதிகளும், போராளிகளை களத்துக்கு செல்லும்படி கட்டளையிடுவார்கள். ஆனால் கிட்டு, களத்தில் நின்றபடி போராளிகளை வா என்று அழைப்பார் என்று. அந்த அளவு உவமைக்குரியவராக அவர் இருந்தார்.
ஏன், புலத்தில் கூட அவர் நின்ற போது, அவர் தொடங்கி வைத்த ஏடுகள் தான், இண்டைக்கு புலம்பெயர் தமிழ்மக்களின் ஊடகத் துறைக்கு ஆரம்பப் படிகள் என்றால் யாராலும் மறுக்கமுடியாது. கால் போனதற்காக, அவரின் வளர்ச்சி குறைந்து விட்டது என்பது சுத்தப் பொய். அந்த நேரத்தின பின் தலைவரால் அவர் புலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் தான், மாத்தையா போன்றவர்கள் உயர்ந்தார்கள்.
ஏன் இன்று தமிழ் செல்வன் கூட, கால் இயலாத நிலையிலும், சண்டை தொடங்கும் போது களத்திற்குச் செல்கின்றார். அதை விட, கேணல் பால்ராஜ் அண்ணனுக்கு கூட, கால் இயலாதது தான். அவரின் தலமையில் சென்ற அணிகள் தானே, மாமுலைத் தரையிறக்கம் முதல், ஆனையிறவு வெற்றிக்கு வழி வகுத்தன.
இராணுவ நெருக்கடிகள் அதிகரித்திருந்த காலத்தில் அரசியல் துறையை கவனிப்பதற்கான, பொறுப்பை தலைவர் மாத்தையாவிடம் ஒப்படைத்தார். ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரைக்கும் இப்போது தான் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றதே ஒழிய, அக்காலப்பகுதியில் அது 2ம் நிலையாகத் தான் இருந்தது.
மாத்தையா வன்னி மாவட்டத்துக்கு பொறுப்பாக இருந்தாலும், முக்கிய தாக்குதல்கள் எவையும் அவரின் தலமையின் கீழ் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தான், அரசியல் துறை சார்பான பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்டார். அதில் கூட, யோகி, அன்ரன் பாலசிங்கம், அடேல் போன்றவர்களோடு ஒருவராகத் தான் இருந்தார்.
/////வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் இயக்கத்தின் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு/////
இது ஒரு சுத்தப் பொய்யாகும். வட -கிழக்கு இடைக்கால அரசு என்ற பதம் பாவிக்கப்படுவதே தப்பு. அது ஒரு அதிகாரமற்ற ஆட்சி முறை. அதை தமிழ் போராளிகளின் எவ்வித ஆலோசனையுமின்றி, இலங்கை- இந்திய ஒப்பத்தில், ஜேஆர் ஓடு பதியப்பட்டது. அதற்கு முதலமைச்சார் பதவிக்கு, அடிவருடி வரதராஜப் பெருமாள் நியமிக்கப்பட்டார்( அவரிடம் கூட, ஆலோசனை ஏதும் பெறப்படவில்லை இந்தியா சொன்னதற்கு எல்லாம் தலையாட்டியது மட்டுமே செய்தனர்)
இதன் போது தலைவர் பிரபாகரனைப் பணிய வைக்க வேண்டும் என்பதற்காக ராஜிவ் இந்தியாவிற்கு தலைவரை வரவைத்து, வீட்டுக் காவலில் வைத்த சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்கி, ஆயுத களைவினைச் செய்தனர். அப்போது, விடுதலைப் புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும், இந்தியாவினை நம்பியே ஆயுதக் களைவு செய்ததாகவும் சொன்னார்கள். ( பிரபாகரனின் 87ம ஆண்டுப் பேச்சின் மதிவு, வன்னியனிடம் இருக்க கூடும்)
எனவே, வடக்கு கிழக்கு இடைக்கால அரசு என்பதற்கும், விடுதலைப் புலிகள் மீத இந்தியா செய்த அழுத்தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை.
-------------------------------------------------------------------------------------------
செப். 11க் கதையின் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. அதை நேரில் பார்க்கவோ, அல்லது ஏடுகளிலோ படித்தறியாத போது, நீர் பார்த்து எழுதியது போலச் சொல்லும் கதையின் உண்மைத் தன்மை பற்றி எவ்வாறு சொல்லமுடியும்.
அதை விட, இந்த துரோகக் கும்பல்களால் ஏராளமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.
குமரப்பா, புலேந்திரன் எவ்வாறு வீரச்சாவடைந்தனர் என்பது பற்றி புலிகளே சொல்லியிருக்கின்றனர். அதை இரகசியம் மாதிரி நீர் சொல்ல விளைவது எதற்காக. அதை விட, 17 போராளிகளும் வீரச்சாவடையவி்ல்லை. சிலர் காப்பாற்றப்பட்டு விட்டனர். ஒரு பாடல் வரி கூட கேட்டிருக்க கூடும். "குமரப்பா, புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்" என்று. எனவே உமது தகவல் தவறு!
திருவடியானுக்கு ஒரு விடயத்தைச் சொல்லலாம். முதலில், ஆதராங்களோடு, வரலாற்றைத் தெரிந்து கொண்டு எழுதுங்கள். அதை விடுத்து, பட்டும் படாமலும், செவி வழிக் கதைகளைக் கேட்டு, உங்களிஸ்டத்துக்கு, புலிகளின் வரலாற்றை மாற்றியமைக்காதீர்கள்!
-----------------------------------------------------------------------------------------------------------------
//////ஓற்றை தலைமையில் மாற்றுக் கருத்துக்களே இல்லாதவர்( ஏனேன்றால் அனைவரும் அமரர் ஆகி விட்டார்கள், அல்லது ஆகி விடுவார்கள்) இருக்கும் சுடுகாட்டை நோக்கி பயணம் செய்யக் கூடிய இயக்கமது///////
ஒற்றைத் தலமை குறித்து விமர்சனம் செய்திருக்கின்றீர்.
மாற்றுக் கருத்து என்றால் என்ன? 80களில் இயக்கத்தை ஆரம்பித்த போது, தமிழீழமே எமது தீர்வு எண்டவர்கள், இந்திய அரசு வந்தபோது பணத்துக்காக போராட்டம் என்றவர்கள், 90களில் சிங்கள அரசோடு இணைந்து, பதவிக்காக போராட்டம் என்றவர்கள், 90களின் பிற்பகுதியில், போராட்டமே வேண்டாம் என்று கொண்டு, வாழ்வதா மாற்றுக் கருத்து?
உங்களின் ிந்தனையில் வேணுமென்றால் அடிக்கடி கொள்கை மாத்துவது தான் மாற்றுக் கருத்து என்று சிந்திக்கின்றீர்களோ என்னமோ! அதை எல்லாம் விடப் பெரிய நகைச்சுவை என்றால், " மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சி. என்றுமே பிரிக்கப்பட முடியாத வடக்கு கிழக்கு" என்று 90களில் இலங்கையரசியலில் குதித்த, டக்ளஸ் தேவானந்தா இப்போது கடைசி வசனத்தை கைவிட்டு விட்டார். ஏனென்றால் ஜேவிபி போன்றவர்கள் வடக்கூகிழக்கு இணைப்பை எதிர்ப்பது தான்.
இது தான் மாற்றுக் கருத்து!
புலிகள் இவர்கள் பற்றி கிஸ்சித்தும் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு புலி எதிர்ப்பு தான் சோறு போடுகின்றது.அது ரோவாக இருந்தாலும். தாஙகள் செய்த ராஜிவ் கொலைக்கும் பழி போட நாம் தானே கிடைத்தோம்.
---------------------------------------------------------------------------
////////////////கொலை செய்வது புலிகள் வேலை.
கொலை செய்தபின் அதனை ஞாயபடுத்துவது மறக்க சொல்வது புலிகளுக்கு சர்வசாதாரணம். (ராஜிவ் கொலையும் சேர்த்து)//////////////////////
சரி தான். ஈழத்தில் வந்து அப்பாவிக் குழந்தைகளையும், பெண்களையும் கொன்று போட்ட இந்திய இராணுத்திற்கு மன்னிப்புக் கேட்கத் துப்பில்லை. வந்திட்டாராம் கதைக்க! அந்த நேரத்தில் ஆண் குறிகளை வெட்டி அனுப்பியிருக்க வேணும். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பல்களுக்கு!
தாங்களே ராஜிவைக் கொன்று போட்டு, மற்றவர்கள் மீது பழியைப் போடும் நயவஞ்சகக்கார்கள்
thayalan
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி
கேபிடல், உங்களின் பதிவுகளைப் படித்தேன்.
உங்கள் தரப்பு வாதமாகவேதான் எனக்குத் தெரிகிறது. மற்றபடி அதில் நியாயம் தெரியவில்லை. என்றாலும் உங்களின் கருத்துச் சுதந்திரம் அது.
இங்கு நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் போலிருக்கே தொடர்ந்து படித்து வருகிறேன்
Post a Comment