மாத்தையாவின் கதை - 2
புலேந்திரன் குமரப்பா உட்பட 17பேர் சயனைடு உண்டு மரணம் அடைந்த நிகழ்வில் முக்கியத்துவம் என்னவென்றால், இதன் மூலம் தான் இந்திய அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாக உலகுக்குத் தெரியவந்தது. இதற்கு முன்பே திலீபனின் உண்ணாவிரதம் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டாலும், 17 பேரின் மரணம் ஈழத்தமிழர்களிடையே இந்திய அரசின் மீதான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருந்த அந்தப் படகை போர்நிறுத்தக் காலகட்டத்தில் வம்படியாக இலங்கை இராணுவம் வழிமறித்து 17 பேரையும் கைது செய்தபோது, இயக்கம் இந்திய அரசு அதில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்யும் என்று நம்பியது. அதாவது இந்திய இராணுவம் போர்நிறுத்தத்தை நிலை நிறுத்துவதுடன் தமக்குச் சாதகமான ஒரு அமைப்பாகச் செயல்படும் என்றுதான் அவர்கள் நம்பியிருந்தனர். அப்படித்தான் இந்திய அதிகாரிகள்
உறுதியளித்திருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.
இந்திய இராணுவம் தலையீட்டின் பேரில் சிறைச்சாலைகளில் அடைக்கப்படாமல் பலாலி இராணுவத் தளத்தில் இந்திய அரசின் படை முகாமில் இருக்க வைப்பதற்காக அவர்களை பிரிகேடியர் பெர்னான்டஸ் என்ற அதிகாரி கடற்துறையிலிருந்து பலாலி தளத்திற்கு BMP எனப்படும் இன்பான்ட்ரி வாகனத்தில் அழைத்து வந்தார். அவர்கள் பலாலி தளத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளின் தற்காலிக உணவருந்துமிடத்திற்கு கீழ் காக்க வைக்கப்பட்டனர். இரு வளையமாக அவர்கள் காவலில் இருத்தப்பட்டனர். வெளிப்புறம் ஏகே47 உடன் இலங்கை இராணுவமும் மறுவளையத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுமாக காவலில் இருந்தனர். மிகவும் பரபரப்பான காலகட்டம் அது. அந்தச் சூழலில் பிரபாகரன் கூட வந்து அவர்களை பார்த்துவிட்டுச் சென்றதாக ஒரு செய்தி உண்டு. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
இயக்கம் இந்திய ராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோள் என்ன வென்றhல் அவர்களை கொழும்புவிற்கு அழைத்துச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி நடந்தால் விளைவுகள் விபரீதமாகக் கூடும் என்று பதவுரையும் கூறப்பட்டது.
5 அக்டோபர் 1987 அன்று பிரிகேடியர் பெர்னான்டஸிற்கு காலையில் வந்த கடிதத்தைப் படித்து விட்டு மிகவும் சோர்வுடனும் கவலையுடனும் காணப்பட்டார். வேறான்றுமில்லை. 17 பேரையும் கொழும்புவிற்கு அழைத்துச் செல்ல வரும் விமானத்தில் ஏற்றி அனுப்பச் சொல்லியிருந்தது. பிரிகேடியர் பெர்னான்டஸ் தனது படையினரை அழைத்து ஒரு அவசரக் கூட்டம் நடத்தினார். பிறகு...
அது HS748 என்ற ஆவ்ரோ ரக விமானம் சப்ளைஸ் எனப்படும் வீரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் கொழும்பிலிருந்து வருகின்ற நேரம். பிரிகேடியருக்கு அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பச் சொல்வார்களோ என்ற பதற்றத்துடன் காத்திருந்தார். அந்த ஆவ்ரோ விமானத்தை டிசில்வா என்ற விமானி ஓட்டி வந்தார். வழக்கம்போல் விமானத்தை தாழ இறக்கி ஓடுபாதையில் வரும்போதுதான் டிசில்வா கவனித்தார். ரன்வேயின் இருபுறமும் இன்பான்ட்ரி வாகனங்கள் விமானப் போக்கிலேயே ஊர்ந்து கொண்டிருந்தன. வந்து சேரவேண்டிய இடத்தில் வந்து விமானத்தை நிறுத்திய பிறகு மற்றெhரு இன்பான்ட்ரி வாகனம் சரக்கு இறக்கும் பின்பக்கக் கதவை ஒட்டி வந்து நின்று கொண்டது. அனைத்துமே இந்திய இன்பான்ட்ரி வாகனங்கள். டிசில்வாவுக்குப் பயங்கரக் கோபம். வேகமாக மெஸ்ஸிற்குள் வந்தவர் சப்ரே என்ற இந்திய விமானியைப் பார்த்து சத்தம் போட்டார். இவ்வளவு அருகாமையில் வண்டி வந்தால் என் பிளேனுக்கு என்னாவது. உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கத்தினார். அதற்கு சப்ரே அமைதியாக இப்போது அவர்களைக் கொழும்புக்கு
அழைத்தப் போவது தானே உன் திட்டம் என்று கேட்டார். அப்படி எல்லாம் எனக்குத் தகவல் இல்லை என்று அதே கோபத்துடன் சத்தம் போட்ட டிசில்வாவைப் பார்த்து சப்ரே புன்னகை பூத்தார். அப்படியானல் நீ ஒன்றும் அனாவசியக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றhர். பிறகு அச்சு{ழல் வெடிச்சிரிப்புடன் உற்சாகக் காலையாக மாறியது.
ஆனால் சந்தோஷம் அதிக நேரம் நிலைக்கவில்லை. மதியமே பெர்னான்டஸிற்கு தகவல் தரப்பட்டது. இலங்கை விமானமொன்று வரும் அதில் அவர்களை ஏற்றியனுப்ப வேண்டும். பெர்னான்டஸிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது.
யாரோ எடுக்கும் முடிவு, பாவம் அவர் என்ன செய்வார்.
விமானமும் வந்திறங்கியது. சோர்வாக தலையில் கைவைத்தபடியே மௌனமாக தளர்ந்து நடந்து இயக்கத்தினர் இருக்க வைக்கப்பட்டிருந்த தளத்திலிருந்து மெதுவாக வெளியேறினார் பிரிகேடியர் பெர்னான்டஸ். பெர்னான்டஸின் உத்தரவிற்கேற்ப இந்தியப் படை விலகிக்கொள்ள இலங்கைப் படை ஏந்திய துப்பாக்கிகளுடன் தபதபவென ஓடினார்கள். அதற்குள் பதினேழு பேரும் சயனைடு சாப்பிட்டிருந்தார்கள். இலங்கை இராணுவத்தினர் அவர்களின் தலையைத் தரையில் மோதி சயனைடு
குப்பியை வெளித்துப்ப வைக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை. 15 பேர் தளத்திலேயே மாண்டனர். எஞ்சிய இருவரை இந்திய இராணுவம் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காப்பாற்ற முயன்றது. ஆனாலும் பலனில்லை. பெர்னான்டஸ் தனது இயலாமையை வெளிக்காட்ட முடியாமல் மௌமாக ஒரு பக்கம் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்திருந்தார்.
சயனைடு சாப்பிட்ட செய்தி பரவியவுடன் இயக்கத்தினர் ஒரு வெள்ளை நிற வோல்க்ஸ்வேகன் வேனிலும் ஒரு வெள்ளை நிற டயோட்டா பிக்கப்பிலும் வந்து அனைவரது உடல்களையும் பெற்றுச் சென்றனர். வேன்கள் வெளிச் செல்லும் போது இந்திய அரசிற்கு எதிரான கோஷங்கள் பலத்து ஒலித்தன. அந்தக் கோஷங்கள் வரப் போகும் பெரிய ஆபத்தைக் கட்டியங் கூறுவதாக மாதிரிதான் இருந்தது.
அன்று மாலையே காங்கேசன்துறையில் ஆரம்பித்த துப்பாக்கிச் சத்தம் பிறகு இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற்றப்படும் வரை ஓயவில்லை.
அந்த இந்திய எதிர்ப்பு மாத்தையாவால் தான் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிற்பாடு அது இராசிவ் காந்தி கொலை வரை சென்ற போதும் மாத்தையாவின் பெயர் இந்திய அரசின் குற்றப்பட்டியலில் இடம் பெறாமல் போன மர்மம் என்ன..?
(இன்னும் வரும்)
11 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
சயனைட் அருந்தியதில் இறந்தவர்கள் 12 பேர் தான். மிகுதி ஐவரும் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்டபின் அவர்கள் நீண்டகாலத்தின் பின் விடுவிக்கப்பட்டனர்.
அடுத்ததாக கருணாவின் கதையையும் எழுதவும்
அனானி...
அது உண்மைத்தகவலாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.
கொழுவி..
வருகைக்கு நன்றி. நான் வரலாற்றைத் தான் எழுதுகிறேன். தற்போது உயிருடன் இருப்பவர்களைப் பற்றியெல்லாம் எழுத இயலாது. மாத்தையாவின் கீழ் பணிபுரிந்த கால கட்டத்தில் கருணாவைப் பற்றி குறிப்பிட வேண்டியிருந்தால் அப்போது அவரைப் பற்றிய குறிப்புகள் வரும்.
எது உண்மைத் தகவலில்லை?
ஐந்து பேர் காப்பாற்றப்பட்டதா?
சரி, 12 பேர் மட்டுமே அச்சம்பவத்தில் இறந்ததாகப் புலிகள் கூறுவது ஏன்?
எங்குமே 17 பேர் இறந்தது பதிவு செய்யப்படவில்லை.
இது புரியாமல்தான் கேட்கிறேன்
மாத்தையவின் கதைக்கும் 17 பேர்
பலாலிவிமான நிலையத்தில் சயனைற்
உட்கொண்டு இறந்ததற்கும் என்ன
சம்பந்தம்...?
இது பிரபாகரனால் பாலசிங்கத்தினுடக
சயனைட் அனுப்பிவைக்கப்பட்டு
கொல்லப்பட்டார்கள் என்று பாலசிங்கமே
பேட்டியும் கொடுத்திருக்கிறாரே..
இக்காலகட்டத்தில் யாழ் குடாநாட்டில்
(அதாவது குமரப்பா புலேந்திரன் கைது
நாளிலிருந்து அவர்கள் மரணிக்கும் நாள்வரை) என்னன்ன சம்பவங்கள்
நிகழ்ந்தன என்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மாத்தையாவுக்கும் இந்த பிரச்சனைக்கும்
சம்பந்தமிருப்பின் இவையனைத்தும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது
அவசியம் எனக்கருதுகிறேன்.
பல விடயங்கள் ஏதோ காரணத்தை
முன்னிட்டு தவிர்க்கப்பட்டிருக்கிறது
தெளிவாக தெரிகிறது (ஒரு மேலோட்டமான அலசலாகபடுகிறது)
இக்காலகட்டத்தில் நான் அங்கு நின்றதன்
விளைவுதான் இதை இங்கு குறிப்பிடக்
காரணம்..
/தற்போது உயிருடன் இருப்பவர்களைப் பற்றியெல்லாம் எழுத இயலாது/
அப்ப கருணா இறந்த பிறகு எழுதுங்கள்.
குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள் கொள்கையின் படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்.
இந்திய அரசது ஏன் துணை போனது..
என்று பாடலே உள்ளது.. வரலாற்றை வாசித்து எழுதுவதற்கும் அனுபவித்து எழுதுவதற்கும் வித்தியாசம் உள்ளது. உங்கள் எழுத்துக்கள் ஈழத்தவர்களிடம் நம்பகத்தன்மையை இழக்கும் என்பதே என் கருத்து. ஏனெனில் அவர்களின் வாழ்விலும் உணர்விலும் கலந்து விட்ட சம்பவங்களையெல்லாம் திரிக்கின்றீர்கள்.
உங்களுக்கு நான் முன்மொழியும் சில நூல்கள்
போரும் சமாதானமும் - அன்ரன் பாலசிங்கம்
சுதந்திர வேட்கை - அடேல் பாலசிங்கம்
மாத்தையாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர் கொல்லப்பட்ட திகதி முதல் அனைத்தம் அடேல் தனது நூலில் எழுதிவிட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர் அப்போது நடந்து கொண்ட விதம். அதில் அன்ரன் பாலாவின் நிலைப்பாடு எல்லாம் சொல்லியாகி விட்டது..
-----------------------------------
1987ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஆடுத்ததமிழீழகடற்பர
ப்பில் பயணத்துக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா கடற்படையிரால் வலுக் கட்டாயமாக கைது செய்யப்பட்டு பலாலிப் படைத்தளத்தி இருந்து இந்திய அரசின் அனுசரனையுடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட இருந்த போது 05 10 1997 அன்று சயனைட் உட்கொண்டு பன்னிரு வேங்கைகளும் வீரச்சாவைத் தழுவ நேரிட்டது
http://www.aruchuna.net/details.php?image_id=5
இது புலிகளின் அதிகாரபூர்வ புகைப்பட தளம்..
மீண்டும் அதே பொய்! குமரப்பா, புலேந்திரன் கூட 10 போராளிகள் தான் வீரச்சாவடைந்தனர்.
ஒரு விடயத்தை தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது. இங்கே வித்தியாசமாக எழுதி பெயர் வாங்க வேண்டும் என்று ஏதும் ஆதங்கம் உண்டா என்ன?
thayalan
பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி.
இரு விளக்கங்கள்.
ஒன்று நான் இதைப்பற்றி நான் அறிந்தவற்றையும் பல்வேறு வலைத்தளங்களிலும் படித்தும் தான் எழுதுகிறேன். பதினேழுபேரா அல்லது பனிரெண்டுபேரா என்பது தங்களின் ஆணித்தரமான வாதங்களால் சற்றுக் குழப்பமாகத் தெரிந்தாலும், இயக்கத்தினர் தமது வரலாறை முறையாகத் தொகுத்து வருவதாக அறிகிறேன். ஆகையால் உண்மை ஒரு நாள் ஆதாரத்துடன் வெளிவரத்தான் போகிறது. சுதந்திர ஈழத்தில் படிக்கப்போகிற பிள்ளைகள் அவற்றைப் படிப்பார்கள்.
இரண்டாவதாக,
பலாலிதள மரணங்கள் இந்திய-புலிகள் உறவில் விரிசல்விடக் காரணமாயிருந்த நிகழ்வு. அந்த நிகழ்வு மாத்தையாவின் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த பகுதியில் நடந்ததும், முதல் தாக்குதலுக்கு வழி வகுத்தவர் என்பதாலும், முக்கியமாக, இந்திய இராணுவ அதிகாரிகளின் அந்தச் சூழ்நிலையிலான நடவடிக்கையையும் மனநிலையையும் படம் பிடித்துக் காட்டுவதற்காகவே அது ஒரு தொடர்சம்பவமாகச் சித்தரிக்கப்பட்டது. உண்மையில் அவர்களுக்கு இதில் உடன்பாடு இருந்திருக்கவில்லை. ஒரு தலைமையின் கீழ் பணியாற்றும் போது அதுவும் இராணுவத்தில் பணியாற்றும்போது உத்தரவுக்கு தலை வணங்கவேண்டிய சூழல் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
திருவடியான்,
நீங்கள் பல இடங்களில் அறிந்தவற்றை வைத்து எழுதுகிறேன் என்று சொல்கிறீர்கள்.
நிச்சயமாக அதுதான் உங்களுக்குச் சாத்தியம்.
ஆனால் அப்படி அறிந்ததாக நீங்கள் கூறும் தகவலொன்று எங்குமே நாம் கேள்விப்படாத தகவல். அதுதான் பதினேழு பேர் இறந்த தகவல்.
பன்னிரண்டு பேர் மட்டுமே அச்சம்பவத்தில் இறந்தார்கள் என்பதே எல்லா இடங்களிலும் பதிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட வீரச்சாவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காலத்தில் வாழ்ந்தவர்கள் நாம்.
பதினேழு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் உண்மை. மிகுதி ஐந்துபேர் காப்பாற்றப் பட்டார்கள் என்பதும் உண்மை.
மாத்தையாவின் சொந்த ஊர் பருத்தித்துறை என்ற உங்கள் தகவல் மட்டில் கேள்வி எழுந்தபோது நீங்கள் அறிந்த இடத்தின் சுட்டியைக் கொடுத்தீர்கள். அந்த வகையில் உங்கள் பக்கம் சரியானது.
ஆனால் பதினேழு பேர் இறந்த விவரம் எங்குப் பெற்றீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?
_____________________________
இப்படியான தகவற்பிழைகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிலர் வேண்டுமென்றே திரிப்பர்.
அத்துலக் முதலி தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றுகூட பிரபலமானவர்கள் கட்டுரை எழுதினார்கள். இதில் இவர்களைப் பற்றி இரு கருதுகோள்கள் வரும்.
1. அவர்கள் அச்சம்பவம் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை, போகிற போக்கில் தவறான விவரத்தைத் தருகிறார்கள்.
2. வேண்டுமென்றே இத்திரிப்பை ஏற்படுத்துகிறார்கள். அத்துலக் முதலிமேல் ஒரு கரிசனையையும் பச்சாத்தாபத்தையும் ஏற்படுத்தும் அதேவேளை, இக்கொலையைப் புலிகள்தாம் செய்தார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது. இந்த இரண்டாவது பாணியில் பலர் இப்போதும் பலவற்றைத் திரித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் எழுதுவது நல்லதுதான்.
ஆனால் விவரப் பிழைகள் பற்றிய எதிர்வினைகளைச் சரியான முறையில் எதிர்கொள்வதும் முக்கியம்.
மாத்தையா விடயம் மட்டுமன்றி அதோடு சம்பந்தப்பட்ட வேறு ஒரு முக்கிய இளைகூட உள்ளது. அதிகம் வெளியே தெரியாத கிருபன் சதி தொடக்கம் அது விரிந்த வரலாற்றைக் கொண்டது. வேலூர்ச் சிறையிலிருந்து ஒருவனைத் தப்புவிப்பதற்காக இரு காவலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் முதற்கொண்டு பெரிய வலையமைப்பைக் கொண்டது.
தொடருங்கள் இதில் எனக்கு தெரியாத விடயங்களும் உள்ளது
என்னார்.. தங்கள் வருகைக்கு நன்றி..
Post a Comment