ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் - PART 2
ஈழப்போராட்டத்தின் இன்றையப் போக்கு மிகவும் கவலையளிக்கும் நிலையைப் போய்க்கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. புலிகள் பலவீனப்பட்டிருக்கிறார்களோ என்ற எண்ணத்தை வெளிப்புறத்தில் ஏற்படுத்தினாலும், இது போன்று முன்பு ஏற்பட்ட சூழ்நிலைகளை எப்படி தமக்கு சாதகமாக்கினார்கள் என்பது வெளிப்படை.
சமாதானப் பேச்சு வார்த்தை ஊசலாட்டம், பல்வேறு நாடுகளில் அமைப்புச் செயல்பாடுகளுக்குத் தடை, பொருளாதார ரீதியிலான உதவிகள் முன்னெப்போதும் இல்லாதவாறு கூர்ந்து கவனிக்கப்படுதல், இவ்வாறாக உலக அரங்கில் பல்வேறு வகையிலும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஈழப்போராட்டம் தற்சமயம் தமிழகப் பிரமுகர்களின் தயவை நாடஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.
சமாதானப் பேச்சு வார்த்தை என்பது இதற்கு முன்பும் இந்தியாவால் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஆயுதங்களை ஒப்படைப்பதாக ஒரு பகிரங்க நாடகம் நடந்தது.. உண்மையில் சமாதனம் என்பது ஆயுதபலங்களைப் பெருக்கிக் கொள்ளவும் தேவையான பயிற்சிகளை
மேற்கொள்வதற்குமாகவே இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது... மூன்று வருட ஆயுதச் சேர்க்கையையும், ஆட்களின் பயிற்சியையும் சுனாமி அநியாயமாக சேதம் செய்து விட்டது அவர்களின் துரதிர்ஷ்டமே..
இந்தியமண்ணில் இந்திய அரசின் நீதித்துறையின் ஆணைப்படி பிரபாகரன் தேடப்பட்டு வரும் குற்றவாளி.. அந்த இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம்... உலக அரங்கில் பகிரங்கமாக ஆதரவு பெற இயலாத சூழல்.
இருக்கின்ற வாய்ப்புகள் மிகச்சில மட்டுமே..
1. இந்தியாவை எப்பாடு பட்டாவது இலங்கைப் பிரச்னையில் தலையிட வைப்பது.
2. தமிழக அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களை ஈழப்போராட்டத்தின் இழப்புகளைச் சுட்டி அனுதாப அலையை ஏற்படுத்தும் வகையில் பேச, பொதுக்கூட்டங்கள் நடத்த, பத்திரிகைகளில் எழுத ஏற்பாடு செய்வது.
3. ஊடகங்களை தன்பக்கம் திரும்ப வைப்பது.
இந்தியாவின் உதவியை இலங்கை அரசு மிகவும் எதிர்பார்த்தது. அமரர் இராஜவின் படுகொலைக்குப் பின் இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு நடுநிலை வகிப்பது என்பதை விட வேடிக்கை பார்ப்பதான ஒரு தோற்றம் தெரிந்தது.
ஆகவே, நார்வேயை விடுதலைப்புலிகள் அமைப்பும், அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சீனா என இந்தியாவிற்கு எதிரான அனைத்து நாடுகளையும் இலங்கை நாடி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்து நிற்க... சமாதன ஒப்பந்தம் ஏற்பட்டு ஆண்டுகள் மூன்றாகிப்போன.
ஆனால், உண்மையில் இந்தச் சமாதான நாடகத்திற்குப் பிண்ணனியில் ஆயுதச் சேகரிப்பும், ஆயுதப் பயிற்சியுமே முக்கிய நோக்காக இருபக்கத்தினருக்கும் இருந்திருக்கிறது. கொழும்பு விமானநிலையத்தாக்குதலுக்குப்பின் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதாரவீழ்ச்சி இலங்கை
அரசை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்திருக்கக்கூடும்.
ஆக இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இந்தியா தலையிடுவதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் தொலைவிலிருந்தே நடப்பவற்றை வேடிக்கைபார்க்கும் மனோநிலையில் இருந்த இந்தியாவை சமீபத்திய பாகிஸ்தான் நெருக்கம் உசுப்பி விட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. பாகிஸ்தான் து{தர் சமீபத்தில் தாக்கப்பட்டதில் ரா வின் கைங்கர்யமாக இருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத வதந்தி உலவுகிறது.
இலங்கையில் தற்போது மற்ற நாடுகளின் SWEETSPOT திரிகோணமலை துறைமுகம் தான். அதில் ஆர்வம் காட்டுவோர் மூவர்..
அமெரிக்கா, சீனா, சமீபமாக பாகிஸ்தான். சீனாவின் திரிகோணமலை எண்ணைக் கொள்கலன் ஏற்பாடு இந்தியாவால் முறியடிக்கப்பட்டதால்... அவர்கள் மாலே (மாலத்தீவு) விற்கு சென்றுவிட்டனர்... அதுவும் இந்தியாவின் ரேடாரில் கண்டிப்பாக இருக்கும்.
அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் தனது முதலீட்டை வருடாந்திரம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இச்சூழலில் இந்தியாவிற்கு எதிரான செயல்களில், குறிப்பாக இந்தியப் பொருளாதாரம் சீர்குலையும் செயல்களில் இறங்குவதற்குத் தயங்கும்.. ஆகவே அமெரிக்காவால் எந்தப் புண்ணியமும் இலங்கைக்கு நேரடியாக கிடைக்கப்போவதில்லை.
ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன். பாகிஸ்தானைக் கூப்பிட்டு உதவிகேட்க... இதுதான் தருணம் என்று முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் வந்து து]தராகிக் கொண்டார். கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற முக்கிய இடங்கள் இருப்பது தமிழகக்
கடற்கரை அல்லவா... ஆகவே.. அது சம்பந்தமான போக்குவரவுக்கு எப்படி இலங்கையில் கால்பதிப்பது என்றிருந்த பாகிஸ்தானுக்கு இது மிகவும் உற்சாகத்தை அளித்திருக்கும்.
இந்தியாவின் எல்லை இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிகோபார் தீவுகள் வரை உள்ளது. இலங்கை அந்த எல்லைக்குள் தானே வருகிறது. ஆக பெரும்பாலான வலைப்பதிவாளர்களின் ஆசையான இந்தியாவின் இருபத்தியாறாம் மாநிலமாகும் அனைத்துத் தகுதியும் இலங்கைக்கு
இருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டம் பல நாடுகளின் கூட்டல் கழித்தல்களை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. சேது சமுத்திரத் திட்டம் ஏற்பட்டால் கப்பல் கட்டுமானத் தொழில், கப்பல் ரிப்பேர் தொழில் மற்றும் ட்ரான்ஸிப்மென்ட் எனப்படும் கப்பல் வர்த்தகம் ஆகியவை
து[த்துக்குடிக்கும் கொளச்சல் துறைமுகத்திற்கும் வருங்காலத்தில் போகக் கூடிய வாய்ப்புள்ளது. திரிகோணமலை துறைமுகம் வர்த்தக ரீதியிலான முக்கியத்துவத்தை இழக்கக் கூடும், மற்றபடி இராணுவ ரீதியான முக்கியத்துவம் அப்படியேதான் இருக்கும்.
இதில் மற்றுமொரு முக்கியத்துவம் அணுமின் நிலையங்களையடக்கிய தென்னிந்திய கடற்கரையோரத்தில் உடனடியாக இராணுவப் போர்க்கப்பலை விசாகப்பட்டிணம் கடற்படைத் தளத்திலிருந்து கொண்டுவரக் கூடிய ஒரு சாத்தியக்கூற்றை அதிகப்படுத்தும். இலங்கையில் இரு கடற்புறங்களிலும் இந்தியாவின் இராணுவக் கப்பல்கள் ரோந்து போவது அவர்களுக்கு அவ்வளவு நல்லதல்லவே.. ஒன்று சமாதானமாகப் போவது அல்லது இந்தியாவின் எதிரிகளை அங்கு கொண்டு வந்து அமர்த்துவது.. இதுதான் இலங்கையின் போக்காக இருக்க முடியும். அதற்கு அவர்கள் பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்ததுதான் பைத்தியக்காரத்தனம்.. அமெரிக்கா சொன்னால் மூத்திரம் வருவதைக்கூட அடக்கி வைத்துக் கொள்ளக் கூடிய பாகிஸ்தானைப் போய் இலங்கை நம்புவது பைத்தியக்காரத்தனமில்லாமல் வேறு என்னவென்பது...
2 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:
Your views are wrong.. Tigers will come back with a fierce force.. they did it before, and will do it again.
அனானி... வருகைக்கு நன்றி... எனக்கு அதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படி வராமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா... 23 வருடங்களாகப் பட்ட பாட்டிற்கு என்ன பலன் என்ற கேள்வி உங்களுக்குத் தோணவில்லை... பார்க்கலாம்.. காலம் பதில் சொல்லும்..
Post a Comment