ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 1

இந்தத் தொடர் ஒரு வித்தியாசமான தொடர். உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஆயுத வியாபாரிகளைப் பற்றியது. இவர்கள் தான் உங்கள் அக்கம் பக்கத்தாரை வெடிகுண்டுகளால், துப்பாக்கியால், சமூக வன்முறையால், தேசதுரோக செயல்களுக்குத் தூண்டுகோளாக இருப்பவர்களில் ஒருவராக இருப்பர் என்று என்னால் சொல்லமுடியும். ஏன் இதைச் செய்கிறார்கள். எல்லா தொழிலும் அதிக பட்சம் 50 சதவீதம் லாபமிருக்கும்.. ஆனால் ஆயுத வியாரத்திலோ ஆயிரக்கணக்கான சதவீதம் லாபம் இருக்கும் போது இதைச் செய்வது எவ்வளவு லாபகரமானது... ஆனால் அந்த அளவுக்கு இதில் ஆபத்தும் இருக்கிறது. அதிக ஆபத்து, அதிக சன்மானம்...

இந்த ஆயுத வியாபரத்தை பற்றி ஆராயப்போனோமானால் ஆண்டாண்டு காலமாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் துணையோடு தம் சுயலாபத்திற்காக மட்டும் செயல்பட்டு எத்துணையோ உயிர்களைப் பலி வாங்கிய இவர்களைப் பற்றிய செய்திகள் திடுக்கிடும் விறுவிறுப்பான துப்பறியும் நு}ல்களைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் அத்தனையும் நிஜம். இது ஒரு விவகாரமான விஷயம் தான். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதைப் படிக்கும் அவர்களின் ஆதரவாளர்கள் மன்னிப்பார்களாக...

நாம் முதலில் தற்போது இரஷ்ய அரசின் ஆதரவோடு சுதந்திரமாக அந்த நாட்டிலே வெளிப்படையாக வசித்துக் கொண்டிருக்கும் விக்டர் பௌட்டைப் பற்றி.யும் பிற்பாடு வேறு சில நபர்களைப் பற்றியும் பார்க்க இருக்கிறேhம்.

முதலில் விக்டர் பௌட் (Victor Bout) ஐப் பற்றியது.

விக்டர்; பௌட்.. ஒரு தனித்துவம் வாய்ந்த சமீபகால சர்வதேச ஆயுத தொழில்முனைவர். 40 வயதுக்கும் குறைவான விக்டர் பௌட் ரஷ்யக்குடிமகன். ரஷ்ய அரசால் கண்டும் காணாமல் நடத்தப்படுகிற சக்தி வாய்ந்த குடிமகன். மிகவும் கண்ணியமானவர், தொழில்நாணயமிக்கவர். பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லாத உன்னத கர்ம வீரர். தம் குடும்பத்தை மிகவும் விரும்புபவர். ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். கடின உழைப்பால் முன்னேறிய அதீத செல்வம் கண்ட மாபெரும் செல்வந்தர். இதெல்லாம் அவர் வெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம். கடந்த பத்தாண்டுகளுக்குள் ஒரு மகோன்னத பொருளாதர உயரத்தை அடைந்த பௌட்டைப் பற்றி அவர் நண்பர்கள் என்ன சொல்லுகிறhர்கள்? அவர் ஒரு தபால் காரர் மாதிரி... உலகின் எந்த இடத்திற்கும் எத்தகைய பொருளானாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான முறையில் எந்தவித பங்கமும் இன்றி சேர்ப்பிப்பார் என்று தான். எதைச் சேர்ப்பிப்பார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறென்ன...ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் தான்... இன்ன நாடென்று கிடையாது. தீர்க்க ரேகையும் அட்ச ரேகையும் சொல்ல வேண்டியது தான்.. ஆகாயத்திலிருந்து ஆயுத மழைதான்... ஆனால் காசை முன்னாடியே கட்டிவிடவேண்டும்.. வேலை அத்தனை சுத்தம்...அட்சர சுத்தம்..

சரி... எப்படி இவரால் இதைத் தொடரந்து சாதிக்க முடிகிறது? பிறகு எப்பிடி சிக்கிக் கொள்ளாமல் இருக்க முடிகிறது? முக்கியமான கேள்வியல்லவா... இனி பார்க்கலாம்..

ஏகே47, கிரனேடுகள், ராக்கெட் லாஞ்சர்கள், சி4 ரக வெடிமருந்துகள் (ஆர்டிஎக்ஸ் என்று சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்) மறறும இன்னபிற அதி நவீன ஆயுதங்கள் ஆகியவைகளை மொத்தமாக வாங்குபவர்களுக்கு இந்தப் பேரை தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. 1990க்கு பிறகு நிறையப் பேர் வாயில் புகுந்து புறப்பட்ட பெயர் இது. அத்தனை தொழில் சுத்தம். உங்களுக்கும,; நீங்கள் யாரை எதிர்த்துப் போராடுகிறீர்களோ அவருக்கும், இருவருக்குமே அடுத்தவருக்குத் தெரியாமல் வியாபாரம் செய்யும் தொழில் தர்மத்தை என்ன வார்த்தைகளால் எழுதுவது.... மேற்படியாருக்க பணம் தானே முக்கியம். யார் தாலியை யார் அறுத்தால் இவருக்கென்ன. அதற்குத்தான் ஏழைகளுக்கு உதவி செய்து விடுகிறhரே... வேலுநாயக்கர் ஞியாபத்திற்கு வந்தால் நான் பொறுப்பல்ல...

சரி இவரது சாதனைகளைப் பார்ப்போமா...

விக்டர் பௌட்டின் சொந்த கார்கோ விமானங்கள் காங்கோவின் காட்டிற்கிடையிலான ஒடுதளம் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானின் மலையோரம் மறைந்திருக்கும் ஓடுதளத்திலும் இறங்கி, தனது சேவைகளைச் செய்திருக்கின்றன. நான்கு கண்டங்களிலும் உலகளாவிய போக்குவரத்து கட்டமைப்பை நிறுவி, ஒருவொருக்கொருவர் அறியாவண்ணம் ஏற்படுத்தப்பட்ட இடைத்தரகர்களின் கட்டமைப்பிற்குள், நிதியுதவி செய்வோர், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தெரிந்து அல்லது தெரியாமல் ஆயுதம் தயாரிக்கின்ற அத்துனை நிறுவனங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது என்பது சாதராண விஷயமா என்ன... இதில் சரக்குப் போக்குவரத்தும் ஐநா சபையின் அமைதிக்காப்பாளர்களை ஏற்றிச் செல்லும் அற்புத பணியையும் செய்வது என்று ஒரு வித்தியாசமான மனிதர் விக்டர் பௌட்.

1990களில் இவரின் முதல் வாடிக்கையாளர், ஆப்கானிஸ்தானின் வடக்குக் கூட்டமைப்பின் தலைவர் சமதுதான்.. அதே சமயம் அவரை எதிர்க்கும் தாலிபான்களுக்கு விமானங்கள் சப்ளை செய்தவரும் இவரே... அங்கோல அரசிற்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவரும்.. அந்த அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் யுனிட்டா என்ற அமைப்பினருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவரும் அவரே... ஸhயர், லிபியா என்று இவர் கைவண்ணம் பலப்பல நாடுகளில்...

உங்களுக்கு இன்னேரம் ஒரு கேள்வி எழுந்திருக்குமே.. அமெரிக்கா எப்படி இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது?

அமெரிக்காவே இவரின் கஸ்டமர் என்றhல், பாவம் நீங்கள் என்ன தான் செய்வீர்கள்?

அமெரிக்க கருவூல அமைச்சு விக்டர் பௌட்டின் சொத்துக்களை முடக்குவதற்கு ஆதாரங்களையும் திரட்டும் போது தான் தெரிந்தது பெண்டகன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பல மில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தங்களை விக்டருக்கு அளித்து வந்தது. அது மட்டுமா, இதுவரை ஐநா சபைக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிப்பொருள்களை ஆப்ரிக்க நாடுகளுக்குக் கொண்டு செல்ல பலநு}று தடவை விமான சேவை புரிந்திருக்கிறார் விக்டர். இதில் வேடிக்கை என்ன வென்றhல் இவர் கொண்டு போய் இறக்கிய துப்பாக்கியை வைத்துத்தான் அங்கு பிரச்னை ஆகி, ஐநா அமைதிகாக்கும் படை போய் இறங்கி இருக்கும். ஒரு முறை புஷ் அறிவித்தாரே நினைவிருக்கிறதா... ஒன்று நீங்கள் அமெரிக்கா பக்கம்... அல்லது அமெரிக்காவின் எதிர்பக்கம் என்று.... விக்டர் இரண்டு பக்கமும் இருப்பவர்....

லண்டன் பாராளுமன்றத்தில் ஒரு எம்பி இவரின் பெயர் குறிப்பிட்டே புகார் செய்திருக்கிறார். அமெரிக்க உளவு விமானங்கள் இவர் தமது விமானத்தில் ஆயுதங்கள் ஏற்றுவதை கையும் களவுமாக போட்டோ எடுத்திருக்கின்றன. இன்டர்போல் இவருக்கு சிவப்பு சீட்டு அளித்துத் தேடிவருகிறது. ஆனால்.. இவர் மாஸ்கோவில், காலையில், நாயைச் சங்கிலியால் பிடித்துக் கொண்டு ஜhக்கிங் போய்க்கொண்டிருப்பார்...

இவரின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் சற்றே விரிவாகப் பார்ப்போமா..?

(தொடரும்)

1 இப் பதிவைப் பற்றிய கருத்துக்கள்:

said...

அருமையான ஆரம்பம், வாழ்த்துக்கள், இந்த தொடர் விக்டர் பௌட்டுடன் நின்றுவிடாது இன்னும் எத்தனை பெரிய மனிதர்கள் இந்த ஆயுத வியாபாரத்தின் மூலம் மனித உயிர்களை கொன்று செல்வத்தில் திளைத்து வருகின்றார்கள் என்று அம்பலப்படுத்தும் என்று நம்புகின்றேன்.

சவுதி அரேபிய இளவரசர்களில் இருந்து அமீரக அமீர்கள் வரை!! சோமாலியாவில் இருந்து தமிழகத்தின் பஜரப்பன் வலசை சவுக்கு தோப்புபுகள் வரை!!

இஸ்லாமியர்கள் தங்களுக்குள் அடித்துது கொள்வதற்கு ஆயுதம் வழங்குபவர்களும் அரபு முஸ்லிம் தனவந்தர்களே என்ற உண்மையையும் மக்களுக்கு இந்த தொடரின் மூலம் திருவடியான் விளக்குவார் என்று எதிர் பார்க்கின்றேன்.