ஆரம்பமாகிறதா.. ஆசியப் பனிப்போர் - இறுதிப்பகுதி

கடந்த இரண்டு பகுதிகளில் ஆசியப் பனிப்போர் உருவாவதற்கான பல காரணிகளைக் கண்டோம். தற்போது அமெரிக்க செனட் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிற இந்தக் காலகட்டத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திராகாந்தி காலத்தில் இருந்ததைப் போல இருக்கும் என்று சுட்டியிருக்கிறார். இந்திராகாந்தி காலத்திய வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருந்தது? இந்துமாக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது.. அணிசேரா நாடுகளை ஒன்றிணைத்து அதற்குத் தலைமை தாங்குவது, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதற்கு தலைமையேற்பது. இன்னும் பலப்பல.. இந்திராகாந்தி காலத்தில் தான் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறக்கக்கூடாது.

அமெரிக்கா தெற்காசியாவில் இந்தியாவை உற்ற தோழனாக அறிவிக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு, இந்தியா இதை ஏற்கப் போகிறதா என்பது தற்போதைய மிகப் பெரிய கேள்வி. அப்படி ஒருவேளை ஏற்றுக் கொண்டால் என்ன மாற்றங்கள் நடக்கக்கூடும்?

தற்போதைய அணுஉலை ஒப்பந்தம் வியாழனன்று அமெரிக்க செனட்டில் வாக்கெடுப்பிற்கு வருகிறது. அதாவது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, அந்த ஒப்பந்தத்தைப் பற்றிய ஒரு முடிவு அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கிடைத்திருக்கும்.

இனி ஆசியாவின் ஏனைய முக்கிய நாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றிக் காணலாம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து இராணுவ ஆட்சியின் பிடியில் தான் அதிக காலம் இருந்து வருகிறது. அதாவது அந்த நாட்டின் ஜெனரல்களே நாட்டை வழிநடத்துகிறார்கள். அமெரிக்கா பாகிஸ்தானை நல்ல காரியங்களுக்காக இதுவரை பயன்படுத்தியதில்லை. அதை ஒரு ஆயுதமாக, நம்பிக்கைக்குரிய ஆயுதமாக மட்டுமே உபயோகித்து வந்திருக்கிறது. தனக்குத் தேவைப்படும் வரை உபயோகப்படுத்திவிட்டு பின் தூக்கி எறியவும் தயங்காது. அதாவது குதிரை குழிபறித்து குப்புறத்தள்ளியதுபோல. இதுகாறும் பல உதாரணங்கள் உள்ளன. ஈராக், ஈரான், லிபியா, இந்த வரிசையில் தாலிபான்களும் ஒசாமாவும் சேர்த்தி. சதாம் உசேனைப் போருக்குத் தூண்டி பின் ஈராக்கின் மீது குண்டு வீசியது எந்த வகைத் துரோகமோ.. அதே வகைத் துரோகம் பாகிஸ்தானுக்கும் ஏற்படப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்தியாவிடம் நல்ல பெயர் வாங்க இந்த உபகாரத்தை அமெரிக்கா பாகிஸ்தானுக்குச் செய்யவேண்டியிருக்கும். இந்தியாவையும் WAR ON TERROR அமைப்பில் சேர்க்க எல்லா வகையான உதவிகளையும் செய்யும்.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் அமெரிக்கா ஆதரவு இருப்பதால் இந்தியாவிடம் அவ்வப்போது எல்லையில் தகராறு செய்து வருகிறது. அமெரிக்கா இந்தியாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலையில், இந்த மாதிரியான செயல்கள் இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கப்படக்கூடும். அதனால் மென்மேலும் இந்தியாவின் அதிருப்தியை பங்களாதேஷ் வளர்த்துவரும். இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பாகிஸ்தானின் ஆதரவை இது நாடக்கூடும். ஆக பாதிக்கப்படப்போவது மீண்டும் இந்த இரண்டு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள்தான்.

நேபாளம்

மன்னருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கும் மாவோ கிளர்ச்சிக்குழுக்களைத் தன்வசப்படுத்த அமெரிக்கா முயன்று தோல்விகண்டுள்ளது. இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்க்கும் நேபாள மன்னர் வம்சம், பிற்பாடு, இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்க ஆளுமைப்பிரதேசமாக நேபாளத்தை மாற்ற அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் சீனாவிற்கு நிரந்தரமாக தொந்தரவுகளைக் கொடுக்கக்கூடிய மூலமாக நேபாளம் மாறலாம். நார்ஸ்டடாம் கணித்திருந்த மூன்றாம் உலகப்போருக்கான ஆரம்பம் நேபாளமாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. (அதே சமயம், நார்ஸ்டடாம் கணிப்பு என இனங்காணப்பட்ட சில விஷயங்கள் நடக்கவில்லை. நார்ஸ்டடாம் வகை கணிப்புகளை நம்புவது உங்கள் இஷ்டம் அல்லது சௌகரியம்).

இலங்கை

இந்திய அரசு தனது திராவிடத்தோழமைக் கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாகவும், அமெரிக்காவின் இந்தியசார்புடைமையின் காரணமாகவும், தமிழ்ஈழத்தீர்வுக்காக முடிவெடுக்க முன்வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்த சூழலில் புலிகள் இந்த மனமாற்றத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்த விஷயம். இந்தியாவில் காஷ்மீர்போலவும், முன்பு பாண்டிச்சேரி தனிப்பட்ட சிறப்பு மாகாணமாக இருந்ததைப் போலவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு அமைப்பின் கீழ் இலங்கையின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு ஆனால் தனி இராணுவம், போலிஸ் மற்றும் சட்ட திட்டங்களுடன் இயங்க ஒரு திட்டத்தை வைக்கலாம். இதன் மூலம், ஒன்றுபட்ட இலங்கை என்ற சிங்களவாதக் கட்சிகளின் கோரிக்கையையும், தனிஅதிகாரத்துடன் கூடிய ஆட்சியுரிமை என்ற தமிழ்ஈழக் கோரிக்கையும் ஒருசேர உருவாக்க இந்தியா ஒரு திட்டத்தை முன் வைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மற்றபடி தனிநாடாக ஈழம் மலர்வதில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அவ்வளவாக விருப்பம் கிடையாது என்பது அதன் தொடர்ந்த செயல்பாடுகளிலிருந்து தெரிகிறது. இராஜிவ் காந்தி சம்பந்தமான நினைவுகள் அகல்வது சிரமம் என்றாலும், தொடர்ச்சியான முயற்சிகளின்பேரில் புலிகளுக்கு இந்த வகையில் வெற்றி கிடைக்கக்கூடும். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உணவுப்பொருள் வழங்குவது பற்றியும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது பற்றியும் மன்மோகன் சிங் சொல்லியிருப்பது, எம்ஜிஆர்-இந்திரா காலத்திய சூழல் மீண்டும் தொடங்குகிறதோ என்பதாகத் தோன்றுகிறது.

மியான்மர் (பர்மா)

மியான்மர் தற்போது இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. ஆங்சான்சூசியும் தொடர்ந்து போராடி வருகிறார். சமீபத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் பேரால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அதீத பாசம் மேலிடுகிறது. இந்த விஷயத்தில் சீனா ஒருபடி மேலே இருக்கிறது. அமெரிக்கா இந்தியாவை முன்னிறுத்தி சீனாவை சீண்டிப்பார்க்கும் சாத்தியம் இந்த மண்ணில் அதிகம். ஆசியான் நாடுகளில் உறுப்பினராக இருப்பது அந்த நாட்டுக்குப் பலம், ஆனால், அதிலிருந்து விலகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

மலாக்கா நீரிணை

மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா என்று பிரிக்காமல் மலாக்கா நீரிணை என்று பொதுவாகக் குறிப்பிடுவதில் ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் மலாக்கா நீரிணையின் மேலுள்ள அக்கறையின் காரணமாகவே இந்த மூன்று நாடுகளின் மேல் அதீத கவனம் செலுத்துகின்றன. மலேசியாவில் தற்சமயம் அமெரிக்க ஆதரவு பிரதமர் இருக்கிறார், இந்தோனேசியாவில் முந்தைய இராணுவ தளபதி தற்போதைய அதிபராக முறையான தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் ஒரு வகையில் அமெரிக்க அனுதாபி. தாய்லாந்தில் தற்சமயம் ஏற்பட்ட இராணுவப்புரட்சி அமெரிக்காவிற்கு ஆகவில்லை. மலாக்கா நீரிணையில் ஏதாவது ஒருநாட்டில் பிரச்னையை ஏற்படுத்தி அந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்வதற்காக அங்கு அலையும் ஒரு நடவடிக்கை ஏற்படுகின்ற சூழ்நிலை தெரிகிறது. தாய்லாந்தின் தற்போதைய பிரச்னை, தென்தாய்லாந்தில் முஸ்லிம் பிரச்னை, வடக்குப் பக்கத்தில் மியான்மருடன் கூடிய சில சில்லுண்டிப் பிரச்னைகள். வழக்கம்போல முஸ்லிம் பிரச்னை அமெரிக்காவிற்கு கைகொடுக்கலாம். மலாக்கா நீரிணையில் இன்னுமொரு தீராப் பிரச்னை இருக்கிறது. இதை வைத்து எந்த நாட்டிலும் பிரச்னை பண்ணிக்கொண்டிராமல் சுற்றி வரவும் வாய்ப்பிருக்கிறது. அதுதான் கடற்கொள்ளையர் பிரச்னை. கப்பலைக் கடத்தி கலரை மாற்றி விற்றுவிடும் அதி நவீன கடற்கொள்ளையர்கள் உலவும் பகுதி, மலாக்கா நீரிணையாகும். சிங்கப்பூர் அமெரிக்காவின் அறுபதாண்டு கால உற்ற நண்பன். அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. நேரடியாக யாருடனும் வம்புக்குப் போக அந்த நாடு விரும்புவதில்லை.

வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் தற்போதைய அமெரிக்க ஆதரவு நாடு. அமெரிக்க இராணுவத் தளமும் உள்ள நாடு அது. வியட்நாம் மறப்போம் மன்னிப்போம் என்று அமெரிக்காவுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டுள்ளது., ஆனாலும் கம்யூனிச சித்தாந்தத்தை இராணுவம் மட்டும் இன்னும் கைவிடவில்லை. இந்த இரண்டு நாடுகளால் அமெரிக்காவிற்கு அதிகம் ஆகப்போவது எதுவுமில்லை.

வடகொரியா மற்றும் தென்கொரியா

இந்த நாடுகளைப் பற்றி இதனை முன்வைத்து ஏற்கனவே விளக்கமாக எழுதியிருக்கிறேன்.

சீனா

சீனா தற்சமயம் இந்தியாவுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய முயல்கிறது. சீனா, அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதும், அணுஆயுதங்களை இந்தியா குறைக்கவேண்டும் என்பதான வேண்டுகோளும் தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போதைய தெற்காசியக் கொள்கையைப் பற்றிய தெளிவுடனும், தான் சம்பாதித்துக் கொடுத்த மாபெரும் தேர்தல் தோல்விகளோடும், அமெரிக்க ஜனாதிபதி வியட்னாமில் நடக்கும் ஆசிய பொருளாதாரக்கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசவிருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கிற நாடுகளுக்கிடையில் அவர் மிகுந்த அரசியல் நெருக்கடிகளுக்கிடையே பேசவிருக்கறார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் ஆளுவோர்களையும் நேரில் சந்தித்துப் பேச விருக்கிறார். என்ன விதமான குதிரைப் பேரம் பேசப்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிங்கப்பூரில் தேசியப் பல்கலைகழகத்தில் உரையாற்றிய புஷ், ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு முன்னெப்போதைவிடவும் அதிக வலுவாக இருக்கப்போவதாகவும் எரிபொருள் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான தேவைகளை ஆசிய நாடுகள் அடைவதற்காக உதவுவது தமது கடமைப்பாடு என்பதாக பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆரம்பமாகிறதா ஆசியப் பனிப்போர்?- பகுதி-2

கிழக்காசிய பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நாடுகள் அணுஆயுத பலத்தைப் பெற்ற பிரதேசமாக உள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரை ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, விரைவில் ஈரான். மேற்கத்திய நாடுகளில், அமெரிக்கா, லண்டன், மற்றும் ப்ரான்ஸ் ஆகியநாடுகள் மட்டும்தான் அணு ஆயுத நாடுகளாக தங்களை அறிவித்துள்ளன. இஸ்ரேல் வைத்திருப்பதாகச் சொல்கிறது, இதுவரை நம்பகமான ஆதாரங்கள் இல்லை.

வடகொரியாவின் அணுஆயுதச் சோதனைக்கு ஐநா சபையின் பாதுகாப்புக்குழுமம் விதித்துள்ள தடைகளை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சிரமம் இருக்கப்போவது கண்கூடு. இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அமெரிக்கா ரஷ்யாவுடனும் சீனாவுடனும் அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியதானது. அதாவது அமெரிக்கா வடகொரியாவை அடிக்கலாம், ஆனால் மயிலிறகால் மட்டுமே அடிக்கலாம். அதைவிட கனமான எந்தப் பொருள்கொண்டும் அடிக்கக்கூடாது என்பதுதான் நிபந்தனையே. அமெரிக்கா இதற்கு உடன்பட மறுத்தால் இந்த இருநாடுகளும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும். அது அமெரிக்காவிற்கு பெருத்த அவமானம். எனவே நிபந்தனைகளுக்குட்பட்ட இந்த ஐநா சபை தீர்மானம், வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவின் இரண்டாவது தோல்வி.

சீனாவைப் பற்றிய அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கைகள் பெரும்பாலும் ஊகத்திலே எழுதப்பட்டு வருவதால் அவ்வப்போது சீனா ஆச்சரியங்களை அள்ளித்தருகிறது. இதற்கு காரணம் சரியான செய்திகள் சீனாத் தரப்பிலிருந்து ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை. சீனா வடகொரியாவிற்கு ஆதரவாக இருக்கக் காரணம் என்ன என்று ஆராயப்போனால்தான் இந்த ஆசியப் பனிப்போரின் ஆணி வேரைக் காணமுடியும்.

வியட்நாம் தோல்விக்குப் பின்னைய காலகட்டத்தில் கிழக்காசியப் பிராந்தியத்தில் தனக்கு ஒரு வலுவான பிரதிநிதித்துவம் வேண்டும் என அமெரிக்கா நினைத்தது. ஆகவே பல்வேறு நாடுகளையும் தளங்களையும் நிர்மாணித்துக் கொள்ளலானது. ஜப்பானில் தொடங்கி டைகோ கார்சியா தீவு வரை பல்வேறு தளங்கள் பல்வேறு நாடுகள், சிங்கப்பூர் உட்பட. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற இடம் கிழக்காசியா. அமெரிக்காவிடம் தோற்ற நாடுகள் அதிகம் உள்ள பகுதியும் இதுதான்.

90கள் வரையில் கிழக்காசியாவில் வலுவான நாடாக சீனா மட்டுமே இருந்து வர, ஏனைய அமெரிக்க தோழமை நாடுகள் தாங்களும் வலுவான நாடுகளாகக் காட்டிக் கொண்டிருந்தன. இந்தியா அணுகுண்டு வெடித்ததும், Y2K சம்பந்தமாக புற்றீசல்கள் போல படித்த இந்தியர்கள் அமெரிக்கா நோக்கி படையெடுத்ததும், இந்தியாவைப் பற்றிய கணிப்பை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டியதானது. கிழக்காசியாவில் தனது ஆதிக்கத்தை மேலோங்கி வைத்துக்கொள்ள அமெரிக்கா பல்வேறு யுத்திகளைக் கடைப்பிடித்து வைத்தது.

அதே சமயம் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைமை கிழக்காசியப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. எண்ணெய்க்காகவும், இதர பொருளாதார போக்குவரத்திற்காகவும் தென் பசிபிக், மலாக்கா, தென்சீனக் கடல் பிராந்தியங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மேற்சொன்ன அனைத்துக் கடற்பகுதிகளிலும் அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது. வடகொரியப் பிரச்னையை அணுகுண்டு வெடிப்புக்கு முன்னதாக உள்ள நிலையில் அமெரிக்கா அணுகிய விதத்தில், மற்றுமொரு ஈராக் அணுகுமுறை தென்பட்டது. இதற்கு வலுச் சேர்க்க மேலும் சில காரணங்கள் இருந்தன. அதாவது, ஜப்பானும், தென்கொரியாவும், தத்தமது மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தன. தொடர்ந்து அங்கு இருப்பதற்கான வலுவான வேறுகாரணங்களும் இல்லையென்பதால், வடகொரியப் பிரச்னையில் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிட அதிகம் வாய்ப்புகளிருந்தன. இந்தச் சூழலில்தான் சீன எல்லையில் வடகொரியா அணுகுண்டுச் சோதனை நடத்தியது. சீனாவிற்குத் தெரியாமல் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்கும் என்பது வெறும் சால்ஜாப்பாகத் தான் இருக்கமுடியும்.

இதற்கிடையில், முதலாம் ஈராக் போரைத் தொடர்ந்து இஸ்ரேலுக்காக மத்திய கிழக்கில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டி வந்தது. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானையும், மறுபக்கம் ஈராக்கையும் பின் தொடர்ந்து ஈரான், சிரியா, ஜோர்டான், எகிப்து, கடைசியில் சவுதி அரேபியா என்று ஒரு நீண்ட நாள் திட்டம் ஒன்று யேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஈராக் போருக்கு முன் பரபரப்பாகவும் இரசியமாகவும் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி, ஈராக்கில் இன்றுவரை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தோல்வி போன்ற நிகழ்வுகள், அமெரிக்க இராணுவம் ஏனைய பகுதிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. குறிப்பாக, வடகொரியா விவகாரத்தில் ஐநா பாதுகாப்புசபைத் தீர்மானம் வெறும் தீர்மான அளவிலே நிறைவேற்றப் பட்டதற்குக் காரணம், இன்றைய சு{ழலில் அமெரிக்காவின் ஆசியாவில் வலுவாக தலையிட முடியாத பலவீனம் தான்.

சரி, கிழக்காசியக் கொள்கையில் என்னதான் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்த நாடும் தன்னிச்சையாக தன்னைவிட வலுவான நாடாக இந்தப் பிராந்தியத்தில் வரக்கூடாது. உலகின் எந்தப் பகுதிக்கும் பெண்டகன் உத்தரவிட்ட நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கப் படை அங்கு இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்டு அறிவிக்கப்படாத அமெரிக்க இராணுவக் கொள்கை. அதற்குத் தகுந்தமாதிரிதான், தனது தளங்களையும் தோழமை நாடுகளையும், பிரச்னைகளையும் அமெரிக்கா உருவாக்குகிறது. பொதுவாக தனது மேலாண்மையை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா பெரும்பாலும், அப்பிராந்தியத்தில் ஏதாவது ஒரு பிரச்னையை தனதாக எடுத்துக் கொள்ளும். காஷ்மீரை பலமுறை ஐநா சபையில் எடுக்க முயன்று, இந்தியாவின் பலமான எதிர்ப்பால் இன்று வரை அதில் அமெரிக்காவால் தலையிட முடியவில்லை. அடுத்து உள்ளது புலிகள் பிரச்னை. அதில் அமெரிக்கா எந்த மாதிரி முன்பு தலையிட்டது என்பதைச் சொல்ல இது உசிதமான பதிவல்ல. தற்சமயம் வடகொரியா மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய பிரச்னைகளை ஐநா சபை முன் வைத்து விவாதித்து எதில் தலையிடலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறது.

வடகொரியாவை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. பர்மாவைத் தாக்க வலுவான காரணம் இல்லாமல் உள்ளது. தற்சமயம் தாய்லாந்து இராணுவ அரசை அமெரிக்கா குறைகூற ஆரம்பித்துள்ளது. தென் தாய்லாந்தின் முஸ்லிம் பிரதேசத்தில் அமெரிக்கத் தயவால் புதிய கலவரங்கள் உருவாகக்கூடும். அதன் மூலம் அமெரிக்கா அங்கும் காலுன்றுவதற்கு அதிகம் வாய்பிருக்கிறது. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், அல்லது ஏற்படுத்திக் கொண்டாலும், தற்சமயம் அமெரிக்க இராணுவம் இப்பகுதியில் குவிக்கப்பட தயாராக உள்ளதா என்பதுதான் கேள்வி. அமெரிக்க நாட்டின் மேல் தாக்குதல் நடத்தப்படும் அல்லது அதன் பொருளாதார இராணுவத் தளங்களுக்கு ஆபத்து என்றால்தான் அமெரிக்க செனட்டில் இந்த மாதிரியான இராணுவப் படைக்குவிப்பிற்கு ஆதரவு பெற முடியும். செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின் ஒசாமாவையும் சதாமையும் காரணம் காட்டினார்கள். ஆனால் கிழக்காசியாவில் என்ன செய்ய முடியும். வடகொரியா அமெரிக்கா மீது குண்டு வீசும் என்றா..??

வடகொரியா தீவிரவாதிகளுக்கு அணுஆயுதத்தை விற்கக்கூடும் என்பதுதான் அமெரிக்காவின் வாதம். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அந்த நாட்டால் அமெரிக்க இறையாண்மைக்கு ஆபத்து கிடையாது. மேலும் வடகொரியா, அமெரிக்கா மாதிரி வம்படியாக எந்த நாட்டின்மேலும் போர் தொடுத்தது கிடையாது. தென்கொரியாவில் நடத்திய போரைத்தவிர வேறு எந்தப்போருக்கும் அனாவசியமாக அந்த நாடு போனது கிடையாது. எனவே, இது ஒரு முழுமையான தற்காப்பு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. வடகொரியாவிற்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய அமெரிக்கப் பிரதேசம், ஹவாய். ஹவாய் என்பது பொருளாதார முக்கியத்துவம் அதிகம் இல்லாத ஒரு அமெரிக்கப் பகுதி. மேலும் தற்சமயம் அணு ஆயுதத்தை ஏவுகணையில் வைத்துச் செலுத்துமளவிற்கு சிறிய அளவில் தயாரிக்க இன்னும் வடகொரியா தயாரகவில்லை என்பதே நிதர்சனம். ஆக அமெரிக்கா வடகொரியாவை ஒரு தகுதி வாய்ந்த எதிரியாக சித்தரிக்க இயலாத சூழ்நிலை.

ஆனால் என்ன இருக்கவே இருக்கிறது அல்காயிதா (Al-Qaeda) மற்றும் ஜமாயே இஸ்லாமியா (Jama-e-Islamia). தற்சமயம் ஒசாமா உயிருடன் இருக்கிறாரா என்று பெண்டகனுக்கும், சவுதி அரசிற்கும், ஜெர்மனி அரசிற்கும் மட்டும்தான் தெரியும். அவசரம் அவசரமாக அமெரிக்க ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா ஏதோ ஒரு ஒலிநாடாவை ஒளிபரப்பி மறுப்பு விடக் காரணம் என்ன. இதை ஏன் அல்ஜசீரா தொலைக்காட்சி செய்யவில்லை.

ஊகத்திற்காக எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை ஒசாமா தற்போது இறந்துவிட்டார் என்று வைத்துக் கொண்டால், அவரின் அல்காயிதா இயக்கம் நிச்சயம் குலைந்து காணாமல் போக அத்தனை சாத்தியங்களும் உண்டு. அப்படிப் போனால், அமெரிக்கா யாரைக் காட்டி இனி போர் தொடுக்க முடியும். அல்காயிதா தவிர ஏனைய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் தனது இலக்கை மட்டுமே தாக்குகின்றன. புலிகள் இலங்கை இராணுவத்தையும் மற்றும் தனக்கு உபத்திரம் செய்வதாக எண்ணி இந்திய இராணுவத்தையும் தாக்கினர். ஆனால் வேறு எந்த நாட்டிலும் அவர்கள் தங்களது திறமையைக் காட்டியதில்லை. ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலைத் தவிர வேறு யாரையும் தாக்கியதில்லை. தாலிபான்கள், முன்பு இரஷ்யாவையும் தற்போது அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானில்தான் எதிர்க்கிறார்கள். அவர்கள் யாரும் அமெரிக்கா சென்று தாக்கியதில்லை. எனவே மற்றோரைத் தாக்க அமெரிக்காவிற்கு அல்காயிதா மற்றும் WAR on TERROR என்ற காரணம் தேவைப்படுகிறது. எனவே ஒசாமா தற்சமயம் அமெரிக்காவிற்காகவேனும் சாகப்போவதில்லை.

இத்தகையச் சூழலில் அமெரிக்காவிற்கு இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவைத் தவிர வேறு சிறந்த தோழமைத் தகுதி வாய்ந்த நாடு இருக்க முடியாது. இந்தியாவுடனான புதுத் தோழமைக்காக அமெரிக்கா தனது தற்போதைய தோழமை நாடான பாகிஸ்தானுடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இந்தப் புதுத் தோழமை ஒருவேளை வலுப்பெற்றால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை-தமிழ்ஈழம், மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளில் ஏற்படப்போகும் மாற்றங்களை வரும் பதிவில் அலசுவோம்.

ஆரம்பமாகிறதா ஆசிய பனிப்போர்..?

பனிப்போர் என்ற பதம், இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமெரிக்காவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான அறிவிக்கப்படாத மறைமுகப் போரை காரணம் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐந்து தசாங்கங்களில் (decades) அமெரிக்காவும் இரஷ்யாவும் தத்தம் பக்கத்தில் உலகநாடுகளைப் பிரித்துக் கொண்டு சண்டையில்லாமல், சணடையிட்டுக் கொண்டும், மற்றுமொரு மாபெரும் சண்டைக்கும் தயாராகிக் கொண்டிருந்தன.

கத்தியின்றி யுத்தமின்றி எதிரியை அழிப்பதான ஆதிகாலத்து சாணக்கியத்தனத்தை, கால மாற்றத்தால் தவிர்க்க இயலாது போன பொருளாதார பலவீனத்தில் வீழ்ந்த இரஷ்யாவின் மேல் பிரயோகித்து, அமெரிக்கா தனது வெளிப்படையான எதிரியை தகுதியிழக்கச் செய்தது. எனவே, அமெரிக்காவிற்கு இவ்வுலகில் சரிசமமான வலுவான எதிரிகள் சற்றேறக்குறைய யாரும் இல்லாமல் போனார்கள். விளைவு, அமெரிக்க ஏகாதிபத்தியம் (American Hegemony). உலகப் போலீஸ்காரன் பட்டம். எங்கும் படையெடுத்து யாரையும் கொல்லும் யதேச்சதிகார உரிமை.

சரி, இதற்கும் ஆசியப் பனிப்போருக்கும் என்ன சம்பந்தம் ?

ஆசிய பனிப்போர் என்பது தற்போது தெளிவாக உருவகம் பெறவில்லை என்றாலும், அப்படி ஒரு விளைவு தற்போது அரசல் புரசலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆசியப் பனிப்போரில் இடம்பெறப்போகும் நாடுகள் யாவை? யார் யார் எந்தப் பக்கம்?

தற்போதைய காலகட்டத்தைக் கவனித்தோமானால் ஒன்று புலப்படும். அதாவது அமெரிக்காவின் மேலாண்மை ஆசியப் பகுதியில் பலவீனமாகிக்கொண்டிருக்கிறது. மட்டுமில்லாமல், மென்மேலும் பலவீனமாகிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான், இந்த ஆசியப் பனிப்போரின் ஆரம்பத்திற்குக் காரணம். அமெரிக்கா இந்த மறைமுகப் போரில் வெல்லுமா வெல்லாதா என்பதற்கான முக்கியமான காரணியாக இந்தியா இருக்கிறது. ஆக இந்தியாவின் சௌத்பிளாக் அதிகாரிகள் இந்தப் பிராந்தியத்தின் தலைவிதியை மாற்றும் உபாயத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதை எவ்வாறு அவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த 20 ஆண்டுகளின் தலையெழுத்து மாறப்போகிறது.

கிழக்காசியாவின் தற்போதைய வலுவான, இராணுவத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி, இரண்டு நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான். சீனாவிற்கு இந்தப் பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, இந்துமாக் கடலுக்குள் தன் ஆதிக்கம் இருந்தால் போதுமானது என்பதாகவே இன்றுவரை இருந்து வருகிறது. பனிப்போர் காலத்திலேயே அமெரிக்கா இந்தியாவின் அண்டை நாடுகளை ஆசைகாட்டி இழுக்க முயற்சி செய்தது. அதன் விளைவாகவே இந்தியாவிற்கு ஆதரவாக பங்களாதேஷ் உருவானது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு எத்தகையது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க முயற்சித்த போதுதான், இந்தியாவின் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுக் கொள்கை உருவானது. இதில் இன்னொன்றும் உள்ளது, அது, அப்போதைய தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பற்றியது. அதை நடுவன் அரசு சமாளித்த விதம் பற்றி வேறொரு பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது . பிற்பாடு வங்காளதேஷமும் சிட்டகாங்கில் அமெரிக்கத் தளம் அமைக்க இடம் கொடுத்து சோரம் போனது. ஆக இந்தியாவைச் சுற்றிலும் அமெரிக்க ஆதரவு நாடுகள்.

தற்போதைய அமெரிக்கப் பொருளாதார, இராணுவச் சிக்கல்களில் அமெரிக்கா ஆய்வாளர்களின் இந்தப் பிராந்தியத்தைப் பற்றிய கவனம் குறைந்ததால், வடகொரியா அணுகுண்டு வெடித்தவுடன், மேலும் இந்தப் பிரச்னை சிக்கலாகிப் போனது. இந்தியாவுடனான பொருளாதார ரீதியிலான தொடர்புகள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் வடகொரிய ஆதரவுச் சூழலில், மேலும் அமெரிக்கப் படையை இப்பகுதியில் குவிக்க முடியாத காரணங்களால், இந்தப் பனிப்போரைப் பற்றிச் சிந்திப்பது சரியானதாக இருக்கும்.

சீனாவின் ஆயுதக் குவிப்பு, உள்ளூர் ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதச் சந்தையில் வியாபாரம், இது போக வடகொரியாவிற்கான உதவி, இதையெல்லாம் கவனத்தில் கொண்டால், அமெரிக்காவின் மேலாதிக்க எண்ணத்திற்கு கிழக்காசியாவில் இடமில்லை என்பதாக சீனாவின் கிழக்காசியக் கொள்கை உள்ளது. தற்சமயம் அமெரிக்கா சீனாவின் பிரச்னையாக கருதுவது, தாய்வான் மற்றும் வடமேற்கில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினரும் தான். இதுவரை சீன இஸ்லாமியர்களால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், ஒரு சமூக மாற்றம் அங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சீனாவிற்கு பிற்பாடு தலைவலியாகத் தான் இருக்கப் போகிறது. அமெரிக்கா தாய்வானிற்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் வெளிப்படையாகவே செய்து கொடுத்து சீனாவை அவ்வப்போது சீண்டி வருகிறது. அதன் பிரதியுபகாரமாகத்தான் வடகொரியாவின் ஆதரவு நிலையை சீனா வெளித்தெரியாமல் அதேசமயம் மத்தியஸ்தர் போலக் காட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே, உலகின் மாபெரும் இராணுவ பலமுடைய மற்றும் அணுஆயுத நாடுகள் அதிகம் இருக்கும், இந்தப்பிராந்தியத்தில் ஒன்று சீனாவுடனோ அல்லது இந்தியாவுடனோ தான் அமெரிக்கா சேர்ந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சீனாவுடனான தொடர்பை விட தற்சமயம் இந்தியாவுடனான தொடர்பு மிகச் சுமுகமாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்தியாவின் மௌனக்கொள்கை மற்றும் இலங்கை-அமெரிக்க இராணுவ கூட்டுப் பயிற்சிகளில் கண்ணை மூடிக்கொள்வது, இலங்கை அரசிற்கு பாகிஸ்தானின் உதவி போன்றவற்றை இந்தியா கண்டும் காணாது இருப்பது, நடுவன் அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிய கனமான கேள்வியை எழுப்பக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் கிழக்காசியக் கொள்கை என்ன என்பது இராணுவ ஆய்வாளர்களுக்கு இன்னும் சரியாக புரிபட்ட பாடில்லை.

ஆக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கிழக்காசியாவில் ஒரு பந்தயம் ஆரம்பமாகி விட்டது. யார் இந்தப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவது என்பது தான் அது. இந்தப் பந்தயம் தான் ஆசியப் பனிப்போரின் ஆரம்பத்திற்குக் காரணம். இனி, இந்த ஆசியப் பனிப்போரின் கதாநாயகர்கள், வில்லன்கள், துணைநடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

(தொடரும்)

வடகொரியாவின் அணுஆயுதச் சோதனை

இன்று காலை (அக்டோபர் 9, 2006) வடகொரியா தனது முதலாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி கிழக்காசியாவின் ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. இது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த அணுகுண்டு வெடிப்பு ஏற்கனவே பலமுறை மாற்றியெழுதியாகிவிட்ட அமெரிக்காவின் கிழக்காசியக் கொள்கையை மறுபடியும் மாற்றியெழுதும் வல்லமையைக் கொண்டதாகும். இப்பகுதியில் உள்ள ஜhம்பவான்களான ஜப்பானும் தென்கொரியாவும் இனி அணுஆயுதங்களை வாங்கப்போகிறhர்களா அல்லது செய்யப்போகிறhர்களா என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும். வடகொரியாவிற்கு உள்ள தைரியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஏன் என்பதை இக் கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

சற்றே பின்னோக்கிப் பார்க்கலாம் வடகொரியாவை,, ஒரு 56 வருடங்களுக்குப் பின்னால்.

இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டிருந்த சூழலில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் தொடங்கி உக்கிரமாக வியூகங்கள் வகுத்துக் கொண்டிருந்த காலம் அது. போரில் தோற்கடிக்கப்படும் முன் ஜப்பான் கொரியா முழுமையும் தனது காலனியாக்கி வைத்திருந்தது. தோற்கடித்த அமெரிக்கா சீனாவின் மேல் கண்வைத்துக் கொண்டே கொரியாவைத் தான் அடைந்த பரிசாக நினைத்தது. கண்மூடித்திறப்பதற்குள், சத்தமில்லாமல் ரஷ்யா கொரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விழித்துப் பார்த்த அமெரிக்கா ரஷ்யாவுடன் சண்டையிடத் தயாரில்லை, எனவே சமரசம் உண்டாயிற்று. வடபக்கம் கொரியா கம்யூனிஸ நாடாகவும் தென் கொரியா சோஷலிஸ நாடாகவும் 38 நிலவரைக் கோடு என்ற எல்லைக்கோட்டைக் கொண்டு இரண்டாகப் பிரித்துக் கொண்டார்கள். இவ்வாறாக 1942ல் வடகொரியாவும் தென் கொரியாவும் உண்டாயிற்று. ஆனால் இரண்டு பக்கமும் ஒரே குடும்பத்தின் சொந்தக்காரர்கள் இருந்தனர். பிரிவினை பிரிவினை தான், யாரும் யாரையும் பார்க்க முடியவில்லை. மக்கள் ஒன்றுபட்ட கொரியா உருவாகும் என்ற கனவில் இருக்க, ஆட்சியாளர்கள் எல்லைக் கோடுகளில் படையைக் குவிப்பதாக இருந்தனர். அவ்வப்போது ஊடுருவி ஆயிரக்கணக்கில் மறுபக்கத்தினரைக் கைது செய்து போர்க்கைதிகளாக்கி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர் இருதரப்பாரும்.

1949ல் ரஷ்யாவும் அமெரிக்காவும் தத்தம் நிலைகளை விட்டு பின்வாங்கின. ரஷ்யா உள்ளுர் மக்களைக் கொண்ட கம்யூனிச சித்தாந்தத்துடனான ஒரு பலமான இராணுவ அமைப்பை வடகொரியாவில் விட்டுச் சென்றிருந்தது. தென்கொரியாவிலோ அமெரிக்கா ஒரு ஜனநாயக அமைப்பை விட்டுச் சென்றிருந்தது. இதற்கிடையில் 1950ல் ஒரு கொரியப் போர் நடந்தது. வடகொரியா பெருமளவு தென் கொரியாவைக் கைப்பற்றிக் கொள்ள, அமெரிக்காவும் உதவிக்குப் போனது. தன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட உடன் அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுகாப்புச் சபையை உதவிக்குக் கூப்பிட்டது. ஒரு கூட்டமாக 14 நாடுகள் படைகளைக் கொண்டு வந்தன. போர் நடந்தது. ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்த வடகொரியாவை கூட்டணிப் படைகள் துரத்திச் சென்றன. சீனாவின் எல்லை வரைக்கும் போவதான திட்டத்தை அப்போதைய அமெரிக்க ஜெனரல் மெக்ஆர்தர் முன் வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன் சீனாவைத் தேவையில்லாமல் சீண்டுகிறோமோ என்று தயங்கி அனுமதி அளிக்க மறுத்தார். கோபத்துடனிருந்த மெக்ஆர்தர் ஜனாதிபதி ஆணைக்கு எதிராக கருத்துச் சொல்ல அவர் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது.

இதற்கிடையில் சீனா தனது படையினரை எல்லையில் இரகசியமாக குவித்து வைக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எந்த எதிர்ப்புமில்லாமல் முன்னேறிச் சென்ற அமெரிக்க இராணுவம் திடீரென்று 1,80,000, பேர் கொண்ட சீனப் படையால் சுற்றி வளைக்கப்பட, போட்டது போட்டபடி பல ஆயிரம் உயிர்களை இழந்து அதே 38-நிலவரைக்கோடு வரை அமெரிக்க இராணுவம் திரும்பி ஓடியது. அன்றிலிருந்து இன்று வரை 38-நிலவரைக்கோடே இரண்டு கொரியாக்களுக்கும் எல்லையாகிப் போனது.

இதன்பின் வந்த பனிப்போர்க் காலங்களில் வடகொரியா சீனா, இரஷ்யாவின் செல்லப்பிள்ளையாகவும், தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்து வந்தன.

பனிப்போர்க்காலம் மறைந்தது.

பல உதவிகள் வடகொரியாவிற்குக் கிடைக்காமல் போயின. ஒரு பக்கம் இராணுவ அச்சுறுத்தல் மறுபக்கம் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம். வடகொரியா சமாளித்துத்தான் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சில சமயங்களில் ஆச்சரியமாக தென்கொரியா உணவுப் பொருள்கள் அனுப்பியெல்லாம் உதவி செய்திருக்கிறது. எதிரி நாடு ஆனால் மக்கள் உணவின்றி கஷ்டப்பட்டால் கொடுத்து உதவுவது. சகோதரர்களுக்குள் ஏற்படுகின்ற என்ன என்று புரியாத ஒருவகையான பகை அது.

சரி,. அணு ஆயுதம் தயாரித்த கதையைப் பற்றிப் பார்ப்போமா..

வடகொரியாவிற்கு 1970-80களில் நிறைய நாடுகளுக்கு இருந்த ஆசையைப் போல அணுஆயுதம் தயாரித்தால் தன்னைத் தாக்க யாரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் இதற்கு வித்திட்டது. ரஷ்யா இருக்கும் வரை அரசல் புரசலாக தனது ஆதரவு நாடுகளுக்கு அது உதவிக் கொண்டிருந்தது. பிற்பாடு இந்தியா பட்ட சிரமம் போலவே வடகொரியாவிற்கும் அணுவிஞ்ஞானத்தை மேம்படுத்த வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் போனது. சில குறுக்கு வழிகளெல்லாம் கண்டு பிடித்து இந்தத் தொழில்நுட்பத்தை வளர்க்கலானார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையில் இந்த விஷயத்தில் எந்த அளவு வளர்ந்திருக்கிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு இரும்புத்திரை கொண்ட நாடாக இருந்தார்கள். அமெரிக்கா எப்படியோ மோப்பம் பிடித்து பொருளாதாரத்தடை அந்தத்தடை இந்தத்தடை என்று விதித்து அணுஆயுத உற்பத்தி என்ற நிலையை அடைவதைத் தடுக்க எல்லா வகையிலும் முயற்சி செய்தது. ஆயினும் இந்த முயற்சி தங்கு தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இதில் முக்கிய உதவியாளர் யார் தெரியுமா.. தமது அணுவிஞ்ஞானத் தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா காப்பியடித்துள்ளது என்ற முஷ்ரப்பிற்கு தப்பான விளக்கம் கொடுத்து வைத்திருக்கும் கறிவாளி திருவாளர் ஏ.க்யூ.கான் தான். அமெரிக்காவின் உளவு நிறுவனங்களின் கண்களில் மண்தூவிவிட்டு இதைச் செய்திருக்கிறார். இதற்காக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து என்ன கைமாறு பெற்றதோ, யாமறியேன் பராபரமே.

1991-ல் அமெரிக்கா இராக்கை வல்லுண்டியாகப் போய்த் தாக்கியபோது ஒரு இந்திய ஜெனரல் சொன்னார். இராக்கிடம் அணுகுண்டு இருந்திருந்தால் இந்தப் போரே வந்திருக்காது என்று. அது எத்தனை தூரம் சத்தியமான வார்த்தை என்பது, வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குத் தெரியாமல் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு குழு போய் அணுகுண்டு வெடித்தபின் தானே நமக்குத் தெரிந்தது. அதே காரணம்தான் தற்போது வடகொரியா அணுகுண்டு வெடித்ததும், ஈரான் தான் தயாரிக்கப் போவதாக மிரட்டுவதும் அதற்காகத்தான்.

எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம், அதென்ன ஈராக்கை மட்டும் அணுகுண்டு வைத்திருக்கிறது என்று போய்த் தாக்கிய அமெரிக்கா, கண்கூடான ஆதாரங்கள் இருந்தும் வடகொரியாவைத் தாக்கவில்லையே என்பது தான். மிகச்சாதாரண விஷயம். வடகொரியா அணுகுண்டு வைத்திருக்கிறது என்று அமெரிக்கா நம்பியது. ஆனால் ஈராக்கிடம் அணுகுண்டு இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டுதான் அந்த நாட்டின்மீதே போர்தொடுத்தது.

வடகொரியாவிற்கு எப்போதும் ஒரு விபரீத ஆசை. இராணுவம் இல்லாத நாடான ஜப்பானை மிரட்டும் வகையில் அதன் கடல் பகுதியில் பலமுறை ஏவுகணைச் சோதனை செய்திருக்கிறது. வடகொரியாவால் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் தான் அச்சுறுத்தல். ஏற்கனவே தாய்வான் பிரச்சினை பண்ணிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் வடகொரியாவுடன் வெளித்தெரியாத உறவு மற்றும் உதவிகள் செய்து சீனா அணுக்கமாக இருந்து வருகிறது.

வல்லவன் வகுத்ததுதான் வாய்க்கால், அமெரிக்கா எடுத்த அணுகுண்டு பூச்சாண்டியை எல்லா நாடுகளும் எடுக்கின்றன. பிற்காலத்தில், போரெல்லாம் வந்தால், ஒரு நாளுக்கு மேல் நடக்காது. ஏன் என்றால் எதையும் பார்ப்பதற்கு யாரும் உயிரோடு இருந்தால்தானே.

கிழக்காசியப் பிராந்தியத்தில் வலுமிக்க அமெரிக்க ஆதரவு நாடுகளாக நினைத்துக் கொண்டிருக்கிற ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது மேலாண்மையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை தலையைப் பிய்த்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருக்கின்றன. இது தற்போது ஒரு உடனடியான ஆயுதப் பந்தயத்திற்கு வழிவகுக்கும். ஆக, அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்கள் தனது நவீன விலையுயர்ந்த ஆயுதங்களை செழிப்பாக இருக்கும் கிழக்காசியச் சந்தையில் சந்தைப்படுத்த வழி பிறந்தாயிற்று.

அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் எதுவும் போடும் முன்பே வடகொரியா அணுகுண்டை வெடித்துவிட யார் யோசனை கூறியிருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். அணுகுண்டு வெடித்தால் போயிற்று அந்த நாட்டை அப்புறம் தாவா செய்து தான் அணுஆயுதப்பரவல் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யமுடியும். மிரட்டும் வேலையெல்லாம் அமெரிக்கா செய்யாது, லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஒரிரு வினாடிகளில் செத்துப் போனதை வீடியோ எடுத்துப் பார்த்து ரசித்தவர்களல்லவா.. அதன் வீரியம் என்ன, விளைவு என்று தெரியாமலா இருக்கும்.

ஆக, இன்றையச் சூழ்நிலையில் அமெரிக்கா என்ற சண்டைக்காரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அணுகுண்டு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உத்தியாகப் போய் விட்டது.

மாத்தையாவின் கதை - இறுதிப்பகுதி

மாத்தையாவைப் பற்றிய முதல் சந்தேகம் ஒற்று அமைப்பின் தலைவரான பொட்டு அம்மன் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனுக்கு, அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதிலிருந்து ஏற்பட்டது. இதன் பிறகு உள்ளுக்குள்ளேயே ஒரு பிரிவு மாத்தையாவின் தளத்திலிருந்து பரிமாறப்படும் அனைத்துச் செய்திகளையும் இடைமறித்துக் கேட்கலானது. பொட்டு அம்மன்
இதில் தனிக் கவனம் செலுத்தி வந்தார்.

போதிய தகவல் அளிக்கப்பட்டபின் பிரபாகரன் மாத்தையா மீதான 10-பக்க குற்றப் பத்திரிகை ஒன்றை யாழ் மக்களுக்கு முன் வாசித்துக் காட்ட ஆணையிட்டார். அதன் விளக்கங்களை சூலை 31க்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது. மாத்தையா இந்த குற்றப்பத்திரிக்கையை அலட்சியப் படுத்தினார். யார் கொடுத்த தைரியத்தில் அப்படி அலட்சியப்படுத்தினார் என்பது குழப்பமாகவே இருந்தது. மாத்தையா தன்னிடம் வந்த இயக்கத்தினரிடம் "வேண்டுமானால் பிரபாகரன் இங்கு வந்து என்னுடைய விளக்கங்களைக் கேட்டுக் கொள்ளட்டும்" என்று சொன்னதாகத் தெரிகிறது. இந்த அலட்சியம், பொட்டு அம்மனின் கணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அதுவே அன்று முதல் மாத்தையாவின் இறக்கத்திற்கும் கடைசியில் இறப்பிற்கும் காரணமாக அமைந்து போனது.

அப்போது அரசியல் பிரிவான மக்கள் முண்ணனியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாத்தையா கொழும்பில் பல பேர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றhர். அந்த நெருக்கமே பிற்பாடு அவரின் நடத்தையில் மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

மேற்படி சம்பவத்திற்குப் பின் மாத்தையா அரசியல் பிரிவின் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு ஒரு அதிகாரமில்லாத பதவியை, அதாவது, அகதியாய் வந்தோரின் நலமும் மற்றும் காயமடைந்த புலிகளின் நலம் பேணுவதுமான ஒரு துறை அளிக்கப்பட்டது. அவருக்கு ஒரு சலுகையாக அவரின் 75 பேரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவும் அனுமதிக்கப்பட்டது.

இதன் பின் தொடர்ச்சியாக மாத்தையாவின் இடத்திற்கு பேபி சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டார். அதாவது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தைப் பெற்றார். இதன் பின் சில வினோத சம்பவங்கள் நடைபெற்றன. தெரிந்தோ தெரியாமலோ மாத்தையாவிற்கு அதில் தொடர்பு இருப்பதாகப் பட்டது. அந்த சம்பவங்களாவன.

1. கோப்பாய் அருகில் பொட்டு அம்மனும் அவரது ஆட்களும் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் பொட்டு அம்மன் பெருங்காயத்துடன் உயிர் பிழைத்தார்.

2. சென்னைக்கருகில் இந்தியக் கப்பற்படையினுடான மோதலில் கிட்டு மாண்டது.

கிட்டுவைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அந்த மாவீரனைப் பற்றிப் பேச நிறைய விஷயம் இருக்கிறது.

கிட்டுவின் மரணத்தில் மாத்தையாவிற்குத் தொடர்பு இருக்கிறது என்று முக்காலே மூணு வீசம் ஊகம் ஏற்பட்ட உடனேயே ஒரு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் கனடாவிலிருந்து வந்த மஞ்சரி என்ற இதழைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மஞ்சரி இதழின் ஆசிரியர் டிபிஎஸ் ஜெயராஜ் மாத்தையாவின் நிலையைப் பற்றி விரிவாக அவ்வப்போது சுடச்சுட செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலம் தமிழர்கள் மத்தியில் அந்தப் பத்திரிகை வெகு பிரபலமானது. பிற்பாடு இயக்கத்தினரின் நெருக்கடி தாங்காமல் அந்தப் பத்திரிக்கையை மூடவேண்டி வந்தது.

யாழ்ப்பாணத்தில் என்ஜினியர் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகம் மகேந்திரராஜா என்பவர் மாத்தையாவின் தளத்திலிருந்து திரும்பும்போது பொட்டு அம்மன் குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்கோட்டை சமரில் காலிழந்தவர். என்ஜினியர் தான் மாத்தையாவின் கைது செய்வதற்கான உறுதி முடிவை எடுக்குமளவிற்கான செய்தியளித்தார். அது தனிக் கதை. "ரா" வைப் பற்றிப் பின்னப்பட்ட ஒரு பரபரப்புக் கதையது.

பொட்டு அம்மன் தலைமையில் கமாண்டோ தலைவர் சொர்ணம், பால்ராஜ் மற்றும் கடற்புலித் தலைவர் சூசை மற்றும் இயக்கத்தினருடன் மார்ச் 31, 1993ம் நாளன்று கொக்குவில்லில் இருக்கும் மாத்தையாவின் இடத்திற்கு அதிகாலையில் சென்றனர். அவர்கள் மாத்தையாவின் ஆட்களை அதிக எதிர்ப்பின்றி வெற்றிகொண்டனர்.

அதிரடிப்படை மாத்தையாவைக் கைது செய்து சாவகச்சேரியில் உள்ள ஒரு முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அதே சமயம் சுரேஷ் என்ற மாத்தையாவின் வலது கரமானவர், புத்துர் அருகே பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட மாத்தையாவின் ஆளைச் சந்தித்து சில ஆணைகளைச் சொல்லச் சென்றிருந்தார். அது என்ன ஆணை, யாரந்த நபர் என்பது பொட்டு அம்மனுக்குத் தான் வெளிச்சம். சுரேஷ் மற்றும் அந்த மெய்க்காப்பாளர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

1995-ல் ஒரு இந்திய சுதந்திர தினத்தன்று வேலூர்ச் சிறையிலிருந்து 43 கைதிகள் 153-அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டித் தப்பித்தனர். அவர்கள் எப்படி அந்த மண்ணை அகற்றினர் எப்படித் தப்பித்தனர் என்பது யாராலும் நம்ப முடியவில்லை. 43 பேரும் பல்வேறு திசைகளில் தப்பிச் சென்றனர். அவர்களில் 12 பேர் மட்டுமே பிற்பாடு பிடிபட்டனர். மீதம் உள்ள 31-பேரைப் பற்றி தகவல் இல்லை. அதில் 14 இயக்கத்தினரை ஏற்றிச் செல்ல விரைவுப் படகு
அனுப்பப்பட்டிருந்தது. 14 பேருக்கும் யாழ் நகரில் ராஜமரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு செய்யப்பட்டிருந்தது. சில நாட்கள்தான். இயக்கத்தினரின் யாழ் அலுவலகத்திற்கு வந்த ஒரு கடிதம் நிலையைத் தலைகீழாக மாற்றியது. அவர்கள் 14 பேரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். அதாவது "ரா" வின் உதவியோடுதான் அவர்கள் தப்பியதாகவும் 1994-லேயே கொல்லப்பட்டுவிட்ட மாத்தையாவை மீட்க அவர்களை 1995ம் வருடம் "ரா" அனுப்பியிருக்கிறது என்று ஒரு அருமையான கதை சொல்லப்பட்டது. இதில் ஒரு விஷயம் இன்னும் குழப்பமாகவே உள்ளது. மாத்தையா டிசம்பர் 28, 1994ல் கொல்லப்பட்டதாக
அடில் பாலசிங்கம் குறிப்பிடுகி்றர். ஆனால், இயக்கத்தினர் 1998-ம் ஆண்டு கூட மாத்தையாவைப் பார்த்ததாக சொல்லப்படுகிறது. உண்மை என்ன என்பது இயக்கத்தினர் தம் வரலாற்றில் எழுதுவார்கள் என்று நம்புவோமாக.

ஒருவாராக மாத்தையா என்ற வீரனின் கதை ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றில் கடந்துபோன ஒரு காட்சியாகிப் போனது.

மாத்தையாவுடன் இணைந்து செயல்பட்ட ஒவ்வொருவரின் வாக்குமூலத்தையும் தனித்தனியாக வீடியோ எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பிற்பாடு இயக்க வரலாற்றில் கறையேற்படும்படியாக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்.

ஆக, சிலரின் ஆசைவார்த்தையின் பேரில் குறுக்கு வழியில் அதிகாரம் அடைய ஆசைப்பட்டு எட்டப்பர்களில் ஒருவராய் போனது அந்த வீரனின் துரதிர்ஷ்டம் தான். தமிழர் வீர வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி ஒரு சிலர் தோன்றிக் கொண்டேயிருப்பது தான் தமிழர்களின் சாபம் போலும்.

அனானிகளுக்கும் போலியார்களுக்கும் ஒரு சேதி..

அனானிகளுக்கும் போலியார்களுக்கும் ஒரு சேதி..

அடக்கி ஆளும் அதிகாரவர்க்கம் மற்றும் எதேச்சதிகார, சர்வாதிகார ஆட்சியாளர்களின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட்டு சாதாரணன் தன்னுடைய கருத்துக்களை இணையம் வழி பகிர்ந்து கொள்ளவும்,

அதே சமயம் அநாகரிகமாக பின்னூட்டமிடும் அனானிகளுக்கும், கேவலப்படுத்தியும் கேவலப்படும்படும்படியும் முகமூடியின் பின் இருந்து கொண்டு எழுதும் போலியார்களுக்கும் தங்கள் முகம் தெரியாமல் வலையில் எழுத ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேலும், நாடுகள் இந்த முறையை தனது உளவாளிகளிடமிருந்து எதிரி நாட்டுக்குத் தெரியாமல் தகவல் சேகரிக்கவும் பயன்படுத்துகின்றன. சமீபத்தில் கூட மத்தியகிழக்கு நாடுகளில் அமெரிக்க இத்தகைய முயற்சியை ஆரம்பித்து வைத்தது. அதன் பலனாக, தீவிரவாதிகளும் அப்படியே அமெரிக்காவிற்கு எதிரான செய்திகளை இணையத்தில் பதிப்பித்தனர். ஆக எந்த ஒரு செயலையும் நல்ல விதமாகவும் தீய விதமாகவும் செய்ய முடியும் என்ற இயற்கை விதி மறுபடியும் நிருபிக்கப்பட்டது.

இது ஒரு உலாவியைப் (BROWSER) பற்றிய செய்தியாகும். இந்த உலாவி தீநரியை (FIREFOX) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலாவியாகும். இந்த உலாவி டார் (TOR - The Onion Router) என்ற வெங்காய வழிச்செயலியின் செயற்பாடு சார்ந்து உருவாக்கப்பட்ட உலாவி. தற்போது வெகுப் பிரசித்தமாகி வருகிற இந்த உலாவியைப் பற்றி சற்றே விளக்கமாகப் பார்க்கலாம்.

வெங்காய வழிச்செயலி என்றால் என்ன?

வெங்காய வழிச்செயலி அடிப்படையில் ஒரு இடத்தை அடைய பலவழியாக சுற்றிச் சென்று சேரும் விதமாக செயல்படுகிறது. உதாரணமாக, ஒருவன் திருச்சியிலிருந்து சென்னை செல்ல வேண்டுமானால், தேசிய நெடுஞ்சாலை 45ன் வழி சென்றால் ஒரே நேர்க்கோட்டில் சென்னை சென்றடைய முடியும். யாராவது அவனுடைய பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தால் அவன் எங்கிருந்து வருகிறான் என்று சுலமபமாக அறிய முடியும். அதே சமயம், திருச்சியிலிருந்து நாமக்கல் வரை ஒரு பேருந்து், நாமக்கல்லிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்து், சேலத்திலிருந்து சென்னை வரை ஒரு பேருந்து், இப்படி பல பேருந்துகளில் மாறிப் போனால் அவன் கடைசியாக வந்த பேருந்தின் பயணச்சீட்டை மட்டும் வைத்து அவன் எங்கிருந்து வந்தான் என்று அறிய முடியாது. பேருந்தின் நடத்துனரும் எந்த சாட்சியமும் அளிக்க முடியாது. ஆக அவன் எங்கிருந்து வந்தான் என்று ஆதாரப்பூர்வமாக நிருபிக்க முடியாமல் போகும். அதே கதைதான் வெங்காய வழிச்செயலியும்.

நீங்கள் திருச்சியில் மத்தியப் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு இணைய உலாவல் மையத்திலிருந்து (BROWSING CENTRE) தமிழ்மணத்தின் மூலமாக வஜ்ராவின் ( வஜ்ரா மன்னிக்கவும் .. ) வலைப்பதிவிற்கு அனானியாக பதிவிட்டீர்களானால் அவர் உங்களின் இணையக்குறியீட்டு (IP Number) எண்ணைக் கண்டு நீங்கள் எந்த உலாவல் மையத்திலிருந்து வருகிறீர்கள் என்று கண்டுபிடித்து தனது பதிவில் போடுவார். அதே சமயம் இந்த உலாவியைக் கொண்டு அதே மாதிரி பதிவிட்டீர்களானால் வஜ்ராவிற்கு நீங்கள் இஸ்ரேலில் டெல்அவிவ் நகரிலிருந்தோ அல்லது ஜெர்மனியிலிருந்தோ பதிவிட்ட மாதிரியான இணையக்குறியீட்டு எண்தான் கிடைக்கும்.

இதைப்பற்றிய சில விளக்கப்படங்கள் இதோ. மேல் விவரம் பெற இங்கு செல்லலாம். (http://tor.eff.org/overview.html.en) இதற்கு மேலும் எளிய விளக்கம் வேண்டுவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம். (thiruvadiyan_AT_gmail_com)




























உங்களுக்கு அடுத்துத் தோன்றுகிற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். இந்த உலாவியின் பெயர் என்ன? அதை எப்படி எனது கணிணியில் இடுவது? பொது உலாவல் மையத்தில் இதை நான் எப்படி பயன்படுத்துவது? சரிதானே..

இந்த உலாவியின் பெயர் டோர்பார்க் (TORPARK) என்பதாகும். இது இங்கு கிடைக்கிறது. (http://torpark.nfshost.com/)

இதைக் கணிணியில் நீங்கள் இடத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் உங்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ, அப்பொழுது மட்டும் இதை கணிணியில் இடாமலேயே பயன்படுத்த முடியும்.

பொது உலாவல் மையத்தில் இதைப் பயன்படுத்த கைவட்டில் (USB Drive) சேமித்துக் கொண்டு உலாவல் மையத்தின் கணிணியில் இதை கைவட்டிலிருந்தே சுட்டிப் பயன்படுத்தலாம்.

முக்கிய அறிவுறுத்தல்

இந்த உலாவியை நல்ல விடயத்திற்கு மட்டுமே பயன் படுத்துமாறு வலைஞர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு
புதிய கணிணி வார்த்தைகள்:

தீநரி (Firefox) - A browser (http://www.mozilla.org)
வழிச்செயலி - Router (http://en.wikipedia.org/wiki/Router)
வெங்காய வழிச்செயலி - The Onion Router(TOR) (http://en.wikipedia.org/wiki/Tor_(anonymity_network)
இணைய உலாவல் மையம் - Internet Browsing Centre
கைவட்டு - USB Drive

இலங்கைத் தமிழ் எம்பிக்களின் பயணம் தோல்வியா ?

இந்தியாவுடனான அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளும் முன் இயக்கம் இந்திய அரசு மற்றும் தமிழக சூழல் பற்றி மேல் விவரம் அறிந்து கொள்ளும் முகமாக, இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்பிக்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டனர். தமிழக முதல்வரையும் இந்தியப் பிரதமரையும் சந்தித்து தமது மக்களின் தற்போதைய நிலையை எடுத்துச் சொல்ல இருந்த அவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றவாறு தமிழீழ ஆதரவாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு முன்னமே எனது வலைப் பதிவில் (http://thiruvadiyan.blogspot.com/2006/09/part-2.html) குறிப்பிட்டிருந்த தற்போதைய சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.

இதைப்பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. இந்தியாவிற்கு வந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் தமிழ் எம்பிக்கள் புலிகளின் அமைப்பின் அரசியல் பிரிவு எம்பிக்கள். அவர்கள் புலிகள் சார்பாகத்தான் ஈழப் பிரச்னை சம்பந்தமாக பேச வந்தனர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

2. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலில் சந்திக்க மறுத்தாலும் பிரதமரின் சந்திப்புக்குப் பின்னால் சந்திக்கலாம் என்று சொன்னதாகத்தான் தெரிகிறது. அதாவது, பிரதமர் எடுக்கும் நிலையை தானும் எடுக்க அவர் நினைத்திருக்கலாம்.

3. பிரதமர் சந்திப்பு சௌத் பிளாக் அதிகாரிகளின் சந்திப்பிற்குப் பிறகு நடைபெற வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியிருக்கக் கூடும். அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் அரசின் தற்போதைய கொள்கைக்கு (என்ன கொள்கை என்று அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்) எம்பிக்கள் இசைகிறார்களா என்பது. அப்படி அவர்கள் ஒருவேளை ஒத்துக் கொண்டிருந்தால் பிரதமரின் சந்திப்பு நடைபெற்றிருக்கலாமோ என்னவோ.

மற்றபடி,

வைகோ ஏற்பாடு செய்த சந்திப்பை கருணாநிதி தடுத்தார் என்பது தமிழக அரசியல் பாணி தாக்குதல். அவ்வாறு கருணாநிதி தடுத்திருப்பாரேயானால், ஏன் கருணாநிதியைச் சந்தித்து அந்த உதவியைக் கேட்டிருக்கக்கூடாது. ஏன் இராமதாசைச் சந்தித்து அந்த உதவியைக் கேட்டிருக்கக் கூடாது. கருணாநிதியின் மேல் குற்றஞ்சாட்டுவது, அவரின் இஸட் பிரிவு பாதுகாப்பை அதிகரிக்கவே உதவும்.

மேலும் விஜயகாந்த் தற்போது ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து வந்து கொண்டிருக்கிறார் (இவர் ஏற்கனவே வந்த, சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர், பாக்கியராஜ், இராஜேந்தர், இராமராசன், மற்றும் இன்னபிற நினைவில் மறந்துபோன நடிகர்களைப் போல கரையப் போகிறாரா அல்லது நிலைத்து நிற்பாரா என்று காலம் மட்டுமே பதில் சொல்லும்). இவரின் அரசியல் சாணக்கியராக இருப்பவர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள். இவர்தான் 1987ல் பிரபாகரனை MGR-ன் உத்தரவின் பேரில் இராசிவுடன் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தவர். விஜயகாந்தின் வளர்ச்சியில் இயக்கத்திற்கு நன்மை இருக்கக்கூடும். திமுக ஆட்சியின் முழுமையான ஆளுங்காலத்திற்குள் எந்த ஆச்சரியத்தக்க விஷயமும் நடைபெறவில்லையென்றால், கேப்டன் (பிரபாகரன்) விஜயகாந்த் இது சம்பந்தமான முழு ஆதரவு தெரிவிக்க இன்னும் ஐந்தாண்டுகள் ஆகலாம். அது வரைக்கும் தமிழக அரசியலில் புலிகள் ஆதரவு என்பது ஈழத்தமிழர் ஆதரவு என்ற அளவிலேயேதான் இருக்கும்.

தற்சமயம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலை, கவர் ஸ்டோரி எழுதிக் காசாக்குவதற்குத் தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தமிழக மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.

இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளால் கொல்லப்பட்ட போது கூட தமிழக மக்களிடையே கருத்து மாச்சரியங்கள் இருந்தன. அமைதிப்படையை வரவேற்கக் கூட கருணாநிதி செல்லாது எதிர்ப்பு காட்டினார். இராசிவைத் தமிழக மண்ணிலேயே வைத்துக் கொன்றதன் மூலம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி பயத்தால் உறைய வைத்துவிட்டனர். இயக்கத்தினரைப் பற்றிய ஒரு ஹீரோயிஸப் பார்வை பயத்துடனான பார்வையாக மாறிப்போய் இருப்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இது இயக்கத்தினரின் தமிழக மக்களுடனான, தமிழக அரசியல் களத்தினு}டான அணுகுமுறையில் தற்போது மாற்றம் தேவை என்று உணர்த்துகிறது.

பர்மாவும் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானமும்

மியான்மரின் மேல் (பர்மா) ஐநா பாதுகாப்புச் சபை ஏற்றிய தீர்மானம் பல உள்நோக்கங்களைக் கொண்டது. அது என்ன என்று அலசுவதே இந்த பதிவின் நோக்கம்.

செப்டம்பர் 15ம் தேதியன்று ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய பர்மாவைப் பற்றிய தீர்மானம் அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையில் மாற்றம் தெரிவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா நாடு, இராணுவப் பிடியில் வெகு காலமாக இருக்கிறது. ஆசியான் நாடுகளிலேயே இராணுவ ஆட்சியாளர் உள்ள நாடு மியான்மர்தான். 1997ம் வருடம் கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதரப் பின்னடைவுக்குப் பின் அனைத்து ஆசியான் நாடுகளும் கூடிச்சேர்ந்து மியான்மரையும் தமது உறுப்பினர் நாடாகச் சேர்த்துக் கொண்டன, ஒரு நிபந்தனையுடன். அதாவது, கூடிய சீக்கிரம் ஜனநாயக நாடாக மாறிவிட வேண்டும். மேற்படி நிபந்தனையால் ஆசியான் நாடுகளுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் மேற்கத்திய (அமெரிக்கா என்று கொள்க) நாடுகளுக்கு அப்படி ஒரு நிபந்தனையிடுவதற்கு ஒரு உள்நோக்கம் இருந்தது.

தெற்காசியப் பிராந்தியத்தில் சில SWEETSPOT-கள் உள்ளன, அவற்றில் ஒன்று, மியான்மார். மியான்மார், இந்தியாவையிம் சைனாவையும் எல்லையாகக் கொண்ட நாடு. ஜண்டா எனப்படும் இராணுவத் தலைமை ஆட்சி செய்யும் நாடு அது. இராணுவ ஆட்சி நடந்த போதும் கிழக்காசிய நாடுகளுக்கோ, தெற்காசிய நாடுகளுக்கோ அது ஒரு தொந்தரவாகவோ பிரச்னையாகவோ இருக்கவில்லை. யாருக்கும் பிரச்னையில்லாதபோது யார் அதைச் சீண்டப் போகிறார்கள்.

சுழற்சியின்படி ஆசியான் தலைமை மியான்மருக்கு வரவேண்டிய சூழலில் மலேசிய அமைச்சர் பேச்சு வார்த்தைக்குச் சென்று தோல்வியுற்றார். என்ன பேசுவது... ஜனநாயகத்துக்குத் திரும்பச் சொல்லித்தான். இராணுவத்தலைமை வந்தவர்களுக்கு டீ கொடுத்து உபசரித்து பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்டது.

தற்போது ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் போடுகிறதென்றhல் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
மேற்கொண்டு படிக்குமுன் ஐநா சபை என்பது அமெரிக்காவின் கைப்பாவை என்பதும், சில வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் தங்களையும் தங்களைச் சார்ந்தோரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். மற்றபடி அந்தத் தகுதி இல்லாதாவர்கள் சொல்லுவதெல்லாம் அம்பலம் ஏற இயலாத சூழல் இருப்பதும், அனைவரும் அறிந்ததே. ஐநா சபையை ஹேக் நகருக்கு மாற்ற ஒரு கோஷ்டி கோஷமிட்டு வருவதும் அறிந்ததே.

சரி.. விஷயத்திற்கு வருவோம்.

1. மியான்மரின் இராணுவத் தலைமை சைனா மற்றும் இந்திய இராணுவ அமைப்புகளுடன் நெருங்கிய மற்றும் சுமுகத் தொடர்பு வைத்துள்ளது.

2. மியான்மரில் சமீபத்தில் எண்ணெய் வயல்கள் இனங்காணப் பட்டன. அவற்றைத் தோண்டும் ஒப்பந்தம் பெறுவதில் சைனாவும் இந்தியாவும் அக்கறை காட்டியும், கடைசியில் சைனாவே அந்த எண்ணெய் வயல்களைப் பெற்றது.

3. புலிகள் சிறிது காலம்... ஏன் இப்போது கூட, தங்களின் டிரான்சிப்மென்ட் பாய்ண்ட் எனப்படும் வகையில் ஆயுதப் போக்குவரத்திற்கு மியான்மரை உபயோகிப்பதாகக் கேள்வி. (வலைஞர்கள் மேல் தகவல் தரலாம்.)

4. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மியான்மர் தனது அன்னியச் செலாவனியாக டாலரை விலக்கி ஈரோ என அறிவித்தது. மியான்மரிலிருந்து பெரிய அளவில் வணிகம் நடைபெறாவிட்டாலும், அமெரிக்காவிற்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. தற்போது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது மீண்டும் மிகச் சமீபத்தில் தான் விதித்தது. சதாம் உசேன் செய்ய இருந்த தவறும் அதுதான் என்பது நாம் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஓபெக் அமைப்பில் டாலருக்குப் பதில் ஈரோவில் வர்த்தகம் செய்வது என வலியுறுத்துவது என்பது தான் சதாம் செய்த தவறு. அதற்கு ஆதரவளித்தோரில் வெனிசு{லா அதிபரும் ஒருவர், இன்று வரை அவரைக் காலி செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மேலும் சமீபத்திய ஐநா சபை பேச்சில் அவர் புஷ்ஷை வெளிப்படையாகவே சாத்தான் என்று விமர்சித்ததையும் அறிவீர்கள். இதைப்பற்றி தனி பதிவே போட வேண்டும்.

5. இந்துமகா சமுத்திரமும் மலாக்கா நீரிணையும் இன்று உலகின் பொருளாதார, வர்த்தக முக்கியத்தவம் வாய்ந்த ஒரு பகுதியாகிப் போனது. உலகின் சனத்தொகையில் பாதிக்குமேற்பட்டோர் வசிக்கும் பகுதியாகவும், சைனாவின் ஒரே வர்த்தகப் பாதையாகவும் உள்ள இந்தப் பகுதியில் கிழக்காசியா தவிர இந்துமகா சமுத்திரத்தில் போதுமான பிடியில்லாமல் இருப்பதாக அமெரிக்கா நினைக்கிறது. மலாக்கா நீரிணையில் ரோந்து செல்வதாக அறிவித்த அமெரிக்கா இந்தியாவையும் சேர்த்தக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

6. சைனா, இந்தியாவின் அந்தமான் கப்பற்படைத்தளத்திற்கு ஈடு கொடுக்கும் படியான நடவடிக்கையாக மியான்மருக்கு உதவி செய்து அங்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது. சைனாவின் இந்துமகா சமுத்திர கப்பற்படைத் தளம் மியான்மரில் அமைய அது முயற்சிக்கும். வெகு காலம் இதைக் கண்டும் காணாமல் இருந்த இந்திய அரசு, சமீபத்தில் மியான்மர் அதிகாரிகளைக் கூப்பிட்டு மரியாதை செய்ததற்குக் காரணம் அவர்களிடமிருக்கும் எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுப்பதற்குத்தான், ஆனாலும் பயனில்லை. சைனா தனது கப்பற்படைத் தளத்தை அங்கு கொணர முயற்சிக்கிறது, இந்தியா தனது எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

7. இதற்கிடையில் இந்தப் பிராந்தியத்திற்கே சம்பந்தமில்லாத அமெரிக்கா தனது படைகளை மியான்மரில் நிலைநிறுத்தும் வகையாக ஐநா பாதுகாப்பு சபைத் தீர்மானம் என்ற ஆயுதத்தை இன்று எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆசியான் நாடுகளெதுவும் அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை எதிர்த்து முணுமுணுக்கக் கூட திராணியற்றவை. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப் போவது, இந்தியாவும் சைனாவும் தான். மேலும் இது வெறும் படை நிறுத்தும் ஒரு உத்தியாக மட்டுமில்லாமல், இந்தியா மற்றும் சைனா நாடுகளின் எண்ணெய்த் தேவை மற்றும் அதன் சார்ந்த வர்த்தகத்திலும் அது தலையிடுவதாக அமைகிறது.

மற்றபடி அமெரிக்காவிற்காவது ஜனநாயத்தை நிலைநிறுத்தும் அக்கறையாவது.

ஆக தெற்காசியப் பிராந்தியத்தில் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த பனி யுத்தம் தற்போது ஆரம்பமாகிவிட்டதாகவே தோன்றுகிறது. இதில் யார் யார் பக்கம் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரியக்கூடும். அதாவது இந்தியாவும் சைனாவும் அமெரிக்காவிற்கு எதிராக கை கோர்க்குமா.. அல்லது இந்தியாவும் அமெரிக்காவும் சைனாவிற்கு எதிராக கை கோர்க்குமா என்று தெரியவில்லை.

பொறுத்திருந்து பார்க்கலாம். நாளை எதுவும் நடக்கலாம்.

மாத்தையாவின் கதை - 2

புலேந்திரன் குமரப்பா உட்பட 17பேர் சயனைடு உண்டு மரணம் அடைந்த நிகழ்வில் முக்கியத்துவம் என்னவென்றால், இதன் மூலம் தான் இந்திய அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாக உலகுக்குத் தெரியவந்தது. இதற்கு முன்பே திலீபனின் உண்ணாவிரதம் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டாலும், 17 பேரின் மரணம் ஈழத்தமிழர்களிடையே இந்திய அரசின் மீதான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருந்த அந்தப் படகை போர்நிறுத்தக் காலகட்டத்தில் வம்படியாக இலங்கை இராணுவம் வழிமறித்து 17 பேரையும் கைது செய்தபோது, இயக்கம் இந்திய அரசு அதில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்யும் என்று நம்பியது. அதாவது இந்திய இராணுவம் போர்நிறுத்தத்தை நிலை நிறுத்துவதுடன் தமக்குச் சாதகமான ஒரு அமைப்பாகச் செயல்படும் என்றுதான் அவர்கள் நம்பியிருந்தனர். அப்படித்தான் இந்திய அதிகாரிகள்
உறுதியளித்திருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.

இந்திய இராணுவம் தலையீட்டின் பேரில் சிறைச்சாலைகளில் அடைக்கப்படாமல் பலாலி இராணுவத் தளத்தில் இந்திய அரசின் படை முகாமில் இருக்க வைப்பதற்காக அவர்களை பிரிகேடியர் பெர்னான்டஸ் என்ற அதிகாரி கடற்துறையிலிருந்து பலாலி தளத்திற்கு BMP எனப்படும் இன்பான்ட்ரி வாகனத்தில் அழைத்து வந்தார். அவர்கள் பலாலி தளத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகளின் தற்காலிக உணவருந்துமிடத்திற்கு கீழ் காக்க வைக்கப்பட்டனர். இரு வளையமாக அவர்கள் காவலில் இருத்தப்பட்டனர். வெளிப்புறம் ஏகே47 உடன் இலங்கை இராணுவமும் மறுவளையத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுமாக காவலில் இருந்தனர். மிகவும் பரபரப்பான காலகட்டம் அது. அந்தச் சூழலில் பிரபாகரன் கூட வந்து அவர்களை பார்த்துவிட்டுச் சென்றதாக ஒரு செய்தி உண்டு. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

இயக்கம் இந்திய ராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோள் என்ன வென்றhல் அவர்களை கொழும்புவிற்கு அழைத்துச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி நடந்தால் விளைவுகள் விபரீதமாகக் கூடும் என்று பதவுரையும் கூறப்பட்டது.

5 அக்டோபர் 1987 அன்று பிரிகேடியர் பெர்னான்டஸிற்கு காலையில் வந்த கடிதத்தைப் படித்து விட்டு மிகவும் சோர்வுடனும் கவலையுடனும் காணப்பட்டார். வேறான்றுமில்லை. 17 பேரையும் கொழும்புவிற்கு அழைத்துச் செல்ல வரும் விமானத்தில் ஏற்றி அனுப்பச் சொல்லியிருந்தது. பிரிகேடியர் பெர்னான்டஸ் தனது படையினரை அழைத்து ஒரு அவசரக் கூட்டம் நடத்தினார். பிறகு...

அது HS748 என்ற ஆவ்ரோ ரக விமானம் சப்ளைஸ் எனப்படும் வீரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் கொழும்பிலிருந்து வருகின்ற நேரம். பிரிகேடியருக்கு அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பச் சொல்வார்களோ என்ற பதற்றத்துடன் காத்திருந்தார். அந்த ஆவ்ரோ விமானத்தை டிசில்வா என்ற விமானி ஓட்டி வந்தார். வழக்கம்போல் விமானத்தை தாழ இறக்கி ஓடுபாதையில் வரும்போதுதான் டிசில்வா கவனித்தார். ரன்வேயின் இருபுறமும் இன்பான்ட்ரி வாகனங்கள் விமானப் போக்கிலேயே ஊர்ந்து கொண்டிருந்தன. வந்து சேரவேண்டிய இடத்தில் வந்து விமானத்தை நிறுத்திய பிறகு மற்றெhரு இன்பான்ட்ரி வாகனம் சரக்கு இறக்கும் பின்பக்கக் கதவை ஒட்டி வந்து நின்று கொண்டது. அனைத்துமே இந்திய இன்பான்ட்ரி வாகனங்கள். டிசில்வாவுக்குப் பயங்கரக் கோபம். வேகமாக மெஸ்ஸிற்குள் வந்தவர் சப்ரே என்ற இந்திய விமானியைப் பார்த்து சத்தம் போட்டார். இவ்வளவு அருகாமையில் வண்டி வந்தால் என் பிளேனுக்கு என்னாவது. உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கத்தினார். அதற்கு சப்ரே அமைதியாக இப்போது அவர்களைக் கொழும்புக்கு
அழைத்தப் போவது தானே உன் திட்டம் என்று கேட்டார். அப்படி எல்லாம் எனக்குத் தகவல் இல்லை என்று அதே கோபத்துடன் சத்தம் போட்ட டிசில்வாவைப் பார்த்து சப்ரே புன்னகை பூத்தார். அப்படியானல் நீ ஒன்றும் அனாவசியக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றhர். பிறகு அச்சு{ழல் வெடிச்சிரிப்புடன் உற்சாகக் காலையாக மாறியது.

ஆனால் சந்தோஷம் அதிக நேரம் நிலைக்கவில்லை. மதியமே பெர்னான்டஸிற்கு தகவல் தரப்பட்டது. இலங்கை விமானமொன்று வரும் அதில் அவர்களை ஏற்றியனுப்ப வேண்டும். பெர்னான்டஸிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது.

யாரோ எடுக்கும் முடிவு, பாவம் அவர் என்ன செய்வார்.

விமானமும் வந்திறங்கியது. சோர்வாக தலையில் கைவைத்தபடியே மௌனமாக தளர்ந்து நடந்து இயக்கத்தினர் இருக்க வைக்கப்பட்டிருந்த தளத்திலிருந்து மெதுவாக வெளியேறினார் பிரிகேடியர் பெர்னான்டஸ். பெர்னான்டஸின் உத்தரவிற்கேற்ப இந்தியப் படை விலகிக்கொள்ள இலங்கைப் படை ஏந்திய துப்பாக்கிகளுடன் தபதபவென ஓடினார்கள். அதற்குள் பதினேழு பேரும் சயனைடு சாப்பிட்டிருந்தார்கள். இலங்கை இராணுவத்தினர் அவர்களின் தலையைத் தரையில் மோதி சயனைடு
குப்பியை வெளித்துப்ப வைக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை. 15 பேர் தளத்திலேயே மாண்டனர். எஞ்சிய இருவரை இந்திய இராணுவம் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காப்பாற்ற முயன்றது. ஆனாலும் பலனில்லை. பெர்னான்டஸ் தனது இயலாமையை வெளிக்காட்ட முடியாமல் மௌமாக ஒரு பக்கம் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்திருந்தார்.

சயனைடு சாப்பிட்ட செய்தி பரவியவுடன் இயக்கத்தினர் ஒரு வெள்ளை நிற வோல்க்ஸ்வேகன் வேனிலும் ஒரு வெள்ளை நிற டயோட்டா பிக்கப்பிலும் வந்து அனைவரது உடல்களையும் பெற்றுச் சென்றனர். வேன்கள் வெளிச் செல்லும் போது இந்திய அரசிற்கு எதிரான கோஷங்கள் பலத்து ஒலித்தன. அந்தக் கோஷங்கள் வரப் போகும் பெரிய ஆபத்தைக் கட்டியங் கூறுவதாக மாதிரிதான் இருந்தது.

அன்று மாலையே காங்கேசன்துறையில் ஆரம்பித்த துப்பாக்கிச் சத்தம் பிறகு இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற்றப்படும் வரை ஓயவில்லை.

அந்த இந்திய எதிர்ப்பு மாத்தையாவால் தான் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிற்பாடு அது இராசிவ் காந்தி கொலை வரை சென்ற போதும் மாத்தையாவின் பெயர் இந்திய அரசின் குற்றப்பட்டியலில் இடம் பெறாமல் போன மர்மம் என்ன..?

(இன்னும் வரும்)

மாத்தையாவின் கதை - 1

மஹேந்திரராசா என்கிற மாத்தையாவின் கதை இது.

இது அவர் தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்து அவர்களாலேயே கொல்லப்படும் வரையிலான காலகட்டத்தில் நடந்த வெளி உலகுக்கு தெரிய வராத சில அரிய விஷயங்களைக் கொணரும் விதமாக எழுதப்படுகிறது. பல்வேறு ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டது. ஆட்சேபனைகள், மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

1956-ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்த மஹேந்திரராசா என்கிற மாத்தையா 1978ஆம் வருடம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்தோரே பெரும்பான்மையாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு இளைஞன் இயக்கத்தின் இரண்டாம் நிலைக்கு வருவது உண்மையில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.

பிரபாகரனின் காரையார் இனத்தைச் சேர்ந்த மாத்தையாவை பிரபாகரனே நேரடியாக விரும்பி தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டதுடன் நிற்கவில்லை. கூடிய சீக்கிரம் வன்னிப் பகுதியின் பிரதிநிதி என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார். அதேசமயம் யாழ்ப்பாணப் பகுதிக்கு பிரதிநிதியாக இருந்த கிட்டு என்கிற சதாசிவம் கிருஷ்ணகுமாரும் மாத்தையா சேர்ந்த அதே சமயத்தில்தான் பிரபாகரனால் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால் கிட்டுவின் வளர்ச்சி மாத்தையாவின் வளர்ச்சியைவிட அதிகமாக இருந்தது. ஒரு வேளை கிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காக இருக்கலாம்.

மார்ச் 31, 1987ல் யாழ்ப்பாணத்தில் இரண்டாம் குறுக்குத் தெருவில் கிட்டு பயணம் செய்த மிட்ஷீபுஷி லான்சரில் எறியப்பட்ட கையெறி குண்டில் கிட்டு தப்பித்தாலும் தனது ஒரு காலை இழந்தார். அது வேறுவகையில் கிட்டுவின் வளர்ச்சியைப் பாதித்தது. இந்த ஊனம் அவரது களப்பணித்திறமையை வெகுவாகக் குறைக்க, வேறு வகையான பணிகள் அவருக்குத் தரப்பட்டது. கிட்டுவின் பொறுப்புகள் மாத்தையாவிற்குத் தரப்பட்டது. இவ்வகையாய் மாத்தையா பிரபாகரனின் நேரடிக் கவனத்தையும் மற்றும் இயக்கத்தில அதிமுக்கியத்துவத்தையும் பெற்றhர்.

இதற்குப் பிறகு வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் இயக்கத்தின் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் அதிகமானது.

இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு சற்று முன் பிரபாகரன் மாத்தையாவிற்கு இட்டகட்டளை என்ன தெரியுமா?


அதாவது செப்டம்பர் 11, 1987ஆம் நாள் மாத்தையா தனது உதவியாளரான யோகியுடன் பட்டிகோலாவில் ரீகன் மற்றும் கருணா (பிற்பாடு தலைவலியாகிப் போன அதே கருணா தான்) ஆகியோருடன் ஒரு ஆலோசனை நடத்தினார். அதாவது 100 போராளிகளை பல்வேறு சிறு குழுக்களாக அனுப்பி EPRLF, PLOTE and ENDLF ஆகிய குழுக்களைச் சேர்ந்தோரை "கவனிப்பது".

செப்டம்பர் 13ல் மாத்தையா ப்ளோட் (PLOTE) இயக்கத்தைச் சேர்ந்த வாசுதேவனை அமைதிப் பேச்சுப் பேச அழைத்திருந்தார். வாசுதேவன் வரும் வழியில் அவரை ஆயுதந்தாங்கிய சிலர் கொன்றனர். அதன்பின் இரண்டு மணிநேரத்திற்குள் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அனைவரும் இன்னபிற போராளிக்குழுக்களின் உறுப்பினர்கள். இந்த ஆபரேஷன் மாத்தையாவால் அவதானித்து நடத்தப்பட்டதாகும்.

அக்டோபர் 2, 1987ல் பருத்தித்துறையில் தமிழகத்திற்கு ஆயுதங்கடத்தியதாக 17 புலிகளை இலங்கை இராணுவம் கைது செய்தது. அவர்கள் சயனைடு குப்பியைக் கடிப்பதற்குள் அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேறு வழியின்றி கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் புலேந்திரனும் குமரப்பாவும் மிக முக்கியமான கமாண்டர்கள். பிற்பாடு அவர்களை விமானம் மூலம் கொழும்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களை பலாலி இராணுவ முகாம் சென்று பார்த்தனர் மாத்தையாவும் அண்டன் பாலசிங்கமும். இதற்கு ஏன் இவ்வளவு விளக்கம் என்றால், இவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பிய சில மணிகளில் பதினேழு போராளிகளும் சயனைடு சாப்பிட்டு இறந்து போயினர். அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஒன்று சயனைடு அல்லது சித்திரவதைக்குப் பின் மரணம். ஆக மரணம் உறுதியாயிப் போனபின் சொர்க்கத்திற்கு சுலப வழியான சயனைடு வழியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இதில் இலங்கை அரசிற்கு அதிர்ச்சி என்ன வென்றால் யார் அந்த சயனைடு குப்பிகளை அவர்களுக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது தான். மாத்தையாவையும் பாலசிங்கத்தையும் தவிர வேறு யாரும் அவர்களைச் சந்திக்க வில்லை. விளங்குகிறதா உங்களுக்கு..? பிரபாகரனின் உத்தரவு, வேறு வழி.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் மாத்தையா, விடுதலைப்புலிகளின் இந்தியஇராணுவ எதிர்ப்பை, காங்கேசன்துறை சிமிண்ட் பேக்டரி வாசலில் வைத்து இராக்கெட் ஏவி ஐந்து இந்திய இராணுவ வீரர்களைக் கொன்றதன் மூலம் ஆரம்பித்து வைத்தார். பிற்பாடு நடந்த கதைதான் தெரியுமே. இராஜpவ் காந்தி கொலை வரை அது தொடர்ந்தது.

அதன் பிறகு இயக்கத் தலைமையகம் வன்னிக் காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 17 தினங்களில் யாழ்ப்பாணம் முழுமையும் இந்திய இராணுவம் கைகளில் வீழ்ந்தது. மாத்தையா புத்து[[}ரிலும் பிரபாகரன் ஆலம்பில்லிலும் (alampil) எந்தத் தொடர்புகளுமின்றி சிறிது காலம் கழிக்க வேண்டி வந்தது. அப்போதுதான் என்னன்னவோ மாற்றங்கள் மாத்தையாவிற்குள் நடந்திருக்கிறது. அது என்ன? அது மாத்தையாவின் வளர்ச்சியை எப்படிப் பாதித்தது?

(இன்னும் வரும்)

(பின் குறிப்பு : இங்கு இயக்கம் என்று குறிக்கப்படுவது LTTE யைக் குறிக்கும்)